TODAY CURRENT AFFAIRS IN TAMIL 19.01.24

TNPSC PAYILAGAM
By -
0



கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி 2024:

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று 19.01.24 மாலை தொடக்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இன்று கோலாகலமாகத் தொடங்கியிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் 31/01/2024-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பல்வேறு வகையான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. கால்பந்து, கபடி, கைப்பந்து, ஜூடோ, பளு தூக்குதல், வில்வித்தை, குத்துச்சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கிச்சுடுதல், யோகா, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக இடம்பெற்றுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் இலச்சினையாக வீரமங்கை வேலு நாச்சியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அழகிப் போட்டி 2024

71வது உலக அழகிப் போட்டியை இந்தியா தலைமையேற்று நடத்தவிருக்கிறது.

உலகம் முழுவதும் பலராலும் கவனிக்கப்படும் இந்த உலக அழகிப் போட்டியை, இந்தியா இதற்கு முன்பு கடந்த 1996ஆம் ஆண்டு பெங்களூருவில் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்டு வளாகத்தில் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை உலக அழகிப் போட்டி நடைபெறவிருக்கிறது. 

மும்பையில் நடைபெறும் 71வது உலக அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என்று தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1966ஆம் ஆண்டு ரெய்தா ஃபரியா பாவெல் தான் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியப் பெண் என்றப் பெருமையைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1994ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக அழகியா மகுடம் சூடினார். தொடர்ந்து 1997ல் டயானா ஹெய்டன், 1999ஆம் ஆண்டில் யுக்தா முகி, 2000ஆவது ஆண்டில் பிரியங்கா சோப்ரா, 2017ஆம் ஆண்டு மனுஷி சில்லர் ஆகியோர் உலக அழகியாக வாகை சூடியவர்கள்.

 

2 நாள் சர்வதேச திருக்குறள் மாநாடு:

தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் டெல்லியில் 2 நாள் சர்வதேச திருக்குறள் மாநாடு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்

மத்திய அரசால் திருக்குறள் இதுவரை இல்லாத வகையில் இந்தி, சம்ஸ்கிருதம், அரபி, உருது உள்ளிட்ட 13 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் இந்த நூல்களை பிரதமரே வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது காசி தமிழ்ச் சங்கமத்தில் மேலும் 10 இந்திய மொழிகள் மற்றும் 5 வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களையும் பிரெய்லிமுறையிலான தமிழில் திருக்குறள்உள்ளிட்ட சங்க இலக்கியத்தின் 46 நூல்களையும் வெளியிட்டார். செம்மொழி ஆய்வு நிறுவனத்தால் வெளியான இந்த நூல்களில் ரூ.1 கோடி மதிப்பிலான நூல்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதி-சர்க்கிள் டு சர்ச் (Circle to search)

கூகுள் நிறுவனம் கடந்த ஜனவரி 17ல் சேம்சங் நிறுவனம் நடத்திய நிகழ்வில் தனது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

தனது புதிய அறிமுகத்திற்கு சர்க்கிள் டு சர்ச் (Circle to search) எனப் பெயரிட்டுள்ளது. இந்தப் புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதியை சாம்சங் மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் விளக்கு:

உலகின் மிகப்பெரிய எண்ணெய் விளக்கு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22 ஏற்றப்படவுள்ளது. 

ராமர் கோயில் திறப்பு விழா அன்று மாலை 5 மணிக்கு இந்த விளக்கு ஏற்றப்படும் என ஜகத்குரு பரமான்ச ஆச்சாரியா தெரிவித்துள்ளார். 

இந்த விளக்கிற்கு 1.25 குவிண்டால் அளவிலான பட்டுத்திரியும், 21,000 லிட்டர் எண்ணெயும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மண், நீர் மற்றும் மாட்டுப்பாலில் தயாரிக்கப்பட்ட நெய்யும் கொண்டு இந்த விளக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கை 108 குழுக்கள் இணைந்து ஒரு வருடம் உழைத்து உருவாக்கியுள்ளதாக ஜகத்குரு பரமான்ச ஆச்சாரியா தெரிவித்துள்ளார். இதை உருவாக்குவது எளிதான விஷயமல்ல எனவும் கூறினார்.

ஆதாா் அட்டையில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியை அதிகாரபூா்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது என தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) தெரிவித்தது.

‘பிறந்த தேதி குறித்து அளிக்கப்பட்ட தவறான தகவல்களை சரி செய்வதற்கான ஆவணங்களில் இருந்து ஆதாா் அட்டை நீக்கப்படுகிறது. ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவரின் பிறந்த தேதியை அதிகாரபூா்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஆதாா் எண் என்பது ஒருவரை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒருவரின் பிறந்த தேதிக்கான அதிகாரபூா்வ ஆவணமாக அதை ஏற்க வேண்டியதில்லை என கடந்த மாதம் 22-ஆம் தேதி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்திருந்தது. இதை சுட்டிக்காட்டி தற்போது இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது’ என குறிப்பிடப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 1,226 பேருக்கு கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்திய கரோனா மரபியல் ஆய்வக கூட்டமைப்பு (இன்சாகாக்) வெளியிட்ட தரவுகளின்படி, 17 மாநிலங்களில் ஜெஎன்.1 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கா்நாடகத்தில் அதிகபட்சமாக 234 போ், ஆந்திரத்தில் 189 போ், மகாராஷ்டிரத்தில் 170 போ், கேரளத்தில் 156 போ், மேற்கு வங்கத்தில் 96 போ், கோவாவில் 90 போ், தமிழகத்தில் 88 போ், குஜராத்தில் 76 போ், ராஜஸ்தானில் 37 போ், தெலங்கானாவில் 32 போ், சத்தீஸ்கரில் 25 போ், தில்லியில் 16 போ், உத்தர பிரதேசத்தில் 7 போ், ஹரியாணாவில் 5 போ், ஒடிஸாவில் 3 போ், உத்தரகண்ட், நாகாலாந்தில் தலா ஒருவருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனாவின் புதிய துணை திரிபாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஜெஎன்.1, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த டிசம்பா் மாதம் முதல் முறையாக இப்புதிய வகை கரோனா கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் பச்சிளக்குழந்தைகள் இறப்பு விகிதம் :

தமிழகத்தில் பச்சிளக்குழந்தைகள் இறப்பு விகிதம் 8.2- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தைப் பொருத்தவரை 2020-ஆம் ஆண்டு நிலவரப்டி குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 13 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது. தற்போது, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஆயிரம் குழந்தைகளுக்கு 8.2 என்ற அளவிலேயே இறப்பு விகிதம் உள்ளது. இதனை மேலும் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனம்:

இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்பெக்டர் இவி’ (Spectre EV) வாகனம் அறிமுகமாகி உள்ளது. 

1906-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. உலக அளவில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். கடந்த 2005 முதல் இந்த நிறுவனத்தின் ஆண்டு வாரியான கார் விற்பனை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2023-ல் மொத்தமாக 6,032 கார்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்திருந்தது.

தற்போது ஃபேண்டம், கோஸ்ட், Cullinan மாடல் கார்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் Spectre EV எனும் காரை அறிமுகம் செய்தது. இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் ஆல் எலெக்ட்ரிக் கார். வழக்கம் போலவே சொகுசு கார்களின் வரிசையில் இது இணைந்துள்ளது.

ஜனவரி 19 - கோக்போரோக் தினம்

ஜனவரி 19 அன்று, இந்திய மாநிலமான திரிபுரா கோக்போரோக் மொழியை வளர்க்கும் குறிக்கோளுடன் திரிபுரி மொழி தினம் என்றும் அழைக்கப்படும் கோக்போரோக் தினத்தை அனுசரிக்கிறது. இந்த நாள் 1979 ஆம் ஆண்டு முதல் முறையாக கொக்போரோக் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஜனவரி 19 -தேசிய பேரிடர் மீட்புப் படை தினம்  (National Disaster Response Force Raising Day):

தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) எழுச்சி தினம் ஆண்டுதோறும் ஜன.19-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில், 1990 மற்றும் 2004 க்கு இடையில் ஏராளமான இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டன. இதன் விளைவாக டிசம்பர் 26, 2005 அன்று பேரிடர் மேலாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி திட்டங்கள், உத்திகள் மற்றும் திட்டங்களை உருவாக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) உருவாக்கப்பட்டது. பேரிடர் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்கள். 

ஜனவரி 19, 2006 அன்று, NDMA தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) நாட்டின் தலைசிறந்த மீட்புப் பணி அமைப்பாக நிறுவியது. "ஆபதா சேவா சதைவ் சர்வத்ரா" என்பது அவர்களின் பொன்மொழி. 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023



MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)