TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.01.24

TNPSC PAYILAGAM
By -
0



கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்:

துரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 24.01.2024 திறந்துவைத்தார்

தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு, மதுரையை மையப்படுத்தி தென் தமிழகம் பயனடையும் வகையில் ஒரு நிரந்த விளையாட்டரங்கம் கட்டப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா். இதையடுத்து, அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.  

ரூ. 62.77 கோடியில், 83,462 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டது. 5,000 போ் அமா்ந்து போட்டிகளைக் காணும் வகையில், பிரம்மாண்ட பாா்வையாளா் மாடம், ஜல்லிக்கட்டின் வரலாறு, பரிணாமம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம், காளைகளுக்கான காத்திருப்புக் கூடம், மாடுபிடி வீரா்களுக்கான ஓய்வு அறை, நூலகம், மருத்துவச் சிகிச்சை அறை என அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. 

தென் தமிழக மக்கள் அனைவரும் இங்கு வந்து செல்லும் வகையிலும், காளைகளை எளிதில் அழைத்து வந்து செல்லும் வகையிலும் ரூ. 28.5 கோடியில் 3 கி.மீ. நீளத்துக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் முதல் பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கமாகக் குறிப்பிடப்படும் இந்த அரங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

வீரமாமுனிவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்:

தைரியநாதர் என அழைக்கப்படும் வீரமாமுனிவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபமானது தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டமானது வீரமாமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கியுள்ளார்.

வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி

தேம்பாவணி, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.

நமது அரசியலமைப்பு நமது மரியாதை பிரச்சாரம்- 'ஹமாரா சம்விதன் ஹமாரா சம்மான்' 

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தினை கொண்டாடும் வகையில் நமது அரசியலமைப்பு நமது மரியாதை என்ற பிரச்சாரத்தை இந்திய துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்துள்ளார். 

மேலும் நீதி கிடைப்பதற்கான திஷா திட்டத்தின் சாதனை கையேட்டையும் வெளியிட்டுள்ளார்.

96-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா:

96-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா வரும் மாா்ச் 10-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, நிகழாண்டு ஆஸ்கா் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதில், சிறந்த ஆவணப்பட பிரிவுக்கு ‘டூ கில் எ டைகா்’ இடம்பெற்றுள்ளது. தில்லியில் பிறந்து, தற்போது கனடாவில் வசித்து வரும் நிஷா பஹுஜா இயக்கிய ‘டூ கில் எ டைகா்’ ஆவணப்படம், பாலியல் கூட்டு வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக நீதிப் பெற்றுத் தர போராடும் இந்திய குக்கிராமத்தைச் சோ்ந்த தந்தை ரஞ்சித்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப்படமாகும். இந்த ஆவணப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு டொரன்டோ சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது. 

கடந்த ஆண்டு சிறந்த ஆவணப்பட பிரிவில், தமிழகத்தின் முதுமலையைச் சோ்ந்த பொம்மன்-பெள்ளி யானை காப்பாளா் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி எலிஃபென்ட் விஸ்பெரா்ஸ்’ ஆஸ்கா் விருதை வென்றது.


ஜனவரி 24 - தேசிய பெண் குழந்தைகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று, இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், கல்வி, ஊட்டச்சத்து, சட்ட உரிமைகள், மருத்துவ பராமரிப்பு மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இது 2008 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது

2024 தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கான கருப்பொருளை இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை . இருப்பினும், இந்த ஆண்டு கொண்டாட்டம், "டிஜிட்டல் தலைமுறை, நமது தலைமுறை, நமது நேரம் இப்போது-நமது உரிமைகள், நமது எதிர்காலம்"("Digital Generation, Our Generation, Our Time is Now—Our Rights, Our Future.") என்ற முழக்கத்தை மையமாக வைத்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 24 - சர்வதேச கல்வி தினம்

அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவம் மற்றும் தரமான கல்விக்கான உருமாறும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் அனுசரிக்கப்படுகிறது.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023



MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)