TODAY CURRENT AFFAIRS IN TAMIL 28.01.24 TO 29.01.24

TNPSC PAYILAGAM
By -
0



'புல்லட் ரயில்' வழித்தடத்தில் 28 நில அதிர்வு மானிகள்

மும்பை-அகமதாபாத் 'புல்லட் ரயில்' வழித்தடத்தில் 28 நில அதிர்வு மானிகள் நிறுவப்படும் என்று தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. 

பயணிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஜப்பானிய ஷிங்கன்சென் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பகால பூகம்ப கண்டறிதல் அமைப்பு நிறுவப்படும் என்று தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. 

இதில் 28 நில அதிர்வு மானிகளில் 22 ஒரு நேர்கோட்டில் நிறுவப்படும். இவற்றில் 8 மும்பை, தானே, விரார் மற்றும் போய்சர் ஆகிய நகரங்களிலும், 14 குஜராத்தின் இருக்கும் வாபி, பிலிமோரா, சூரத், பருச், வதோதரா, ஆனந்த், மகேம்பதாத் மற்றும் அகமதாபாத்தில் நிறுவப்படும். உள்நாட்டு நில அதிர்வு மானிகள் என அழைக்கப்படும் 28 நில அதிர்வு மானிகளில் மீதமுள்ள ஆறு நில அதிர்வு மானிகள், மகாராஷ்டிராவின் கேத், ரத்னகிரி, லாத்தூர் மற்றும் பாங்ரி போன்ற பூகம்ப பாதிப்புக்குள்ளான பகுதிகளிலும், குஜராத்தின் அடேசர் மற்றும் பழைய பூஜ் பகுதிகளிலும் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் முதன்முறையாக இறைச்சிக்காக ஆய்வகத்தில் கடல்மீன்கள் வளர்ப்பு:

நாட்டில் அதிகரித்து வரும் மீன் இறைச்சி பயன்பட்டை கருத்திற்கொண்டு, கடல்மீன்களை ஆய்வகத்தில் வளர்க்கும் சோதனையில் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

கடல்மீன்களின் உடலிலுள்ள குறிப்பிட்ட செல்கள் தனியாக பிரிக்கப்பட்டு, அவற்றை ஆய்வகத்தில் வளர்ககும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக, செல்களில் இருந்து மீன்களை வளர்க்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் புத்தொழில் ஆராய்ச்சி நிறுவனமான ’நீட் மீட் பயோடெக்’ நிறுவனத்துடன் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தம் செய்துள்ளது.

சிங்கப்பூர், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடல்வாழ் உயிரினங்களை ஆய்வகத்தில் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவும் அத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது:

அதன்படி, 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப். 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசம் (10), மகாராஷ்டிரம் (6), பிகார் (6), மேற்கு வங்கம் (5), மத்தியப் பிரதேசம் (5), குஜராத் (4), கர்நாடகம் (4), ஆந்திரப் பிரதேசம் (3), தெலங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிஸா (3), உத்தரகண்ட் (1), சத்தீஸ்கர் (1), ஹரியாணா (1), மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் (1) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 

13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறையவடைய உள்ளது. மேலும், 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 3 ஆம் தேதி நிறையவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு முறைப் பயணம்:

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு, (28.1.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.

ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் 29.01.24 நடத்த உள்ளார். இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரைவு வழிகாட்டு-யுஜிசி

மத்திய அரசு உயா்கல்வி நிறுனங்களில் பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி), பிற்படுத்தப்பட்டவா்கள் (ஓபிசி) ஆகிய பிரிவினருக்கான பணியிடங்களை நிரப்ப, அந்தப் பிரிவைச் சோ்ந்தவா்கள் கிடைக்கப் பெறாதபோது, அவற்றை இடஒதுக்கீடு இல்லாத பொதுப் பணியிடங்களாக அறிவிக்கலாம் என்று இடஒதுக்கீடு கொள்கை தொடா்பான புதிய வரைவு வழிகாட்டுதலில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

அகரமுதலித் திட்ட இயக்ககம்-15 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிய சொற்குவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கலைச் சொற்களின் எண்ணிக்கை தற்போது 15 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது. 

குறிப்பாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைச் சொற்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் அகராதி உருவாக்கம், கலைச்சொல் உருவாக்கம், வட்டார வழக்கு சொற்கதமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிய சொற்குவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கலைச் சொற்களின் எண்ணிக்கை தற்போது 15 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது. 

அதன்படி, தற்காலத்தில் உருவாகும் புதிய துறைகளில் வழங்கப்படும், புதிய கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படுகிறது. அவை, வல்லுநா்களின் ஒப்புதலுக்குப் பின் ‘சொற்குவை டாட் காம்’ எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்தத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கலைச் சொற்களின் எண்ணிக்கை தற்போது 15 லட்சத்தை கடந்துள்ளது.

யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு-

யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வர தமிழக அரசு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முதல்கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநா்களுக்கு யுபிஐ மற்றும் காா்டுகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை மாநகர போக்குவரத்துக்கழகம் வழங்கியுள்ளது.

மதநல்லிணக்க நாள்:

ஜனவரி 30 ஆம் தேதி காந்தியடிகள் நினைவு நாளையொட்டி, அன்றைய நாளை மதநல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

9-வது முறையாக நிதிஷ்குமார் பீகார் முதல்வராக பதவியேற்றார்:

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியை முறித்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பாஜக ஆதரவுடன் 9-வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார்

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், கடந்த 2020-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் பாஜக ஆதரவுடன் முதல்வரானார். 

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு, பாஜக தனது கட்சியை உடைக்க முயல்வதாகக்கூறி, அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனான மகா கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வரானார். இந்த கூட்டணி சார்பில் ஆர்ஜேடி-யின் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 

பின்னர் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என சூளுரைத்து பல்வேறு மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி உருவாக மிக முக்கிய காரணமாக இருந்தார் நிதிஷ்குமார்

84-வது அனைத்திந்திய சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை தலைவர்கள் மாநாடு:

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள மகாராஷ்டிரா விதான் சபாவில் (27.01.2024) தொடங்கிய 84-வது அனைத்திந்திய சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை தலைவர்கள் மாநாடு  நடைபெற்றது

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வயதான வீரர்:

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (இந்தியா), மேத்யூ எப்டன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். 

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வயதான வீரர் என்ற பெருமையையும், இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த வயதான வீரர் என்ற பெருமையையும் ரோகன் போபண்ணா (43 வயது) படைத்துள்ளார். ரோகன் போபண்ணாவின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் (இத்தாலி) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அரியனா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


ஜனவரி 28 - லாலா லஜபதி ராயின் பிறந்த நாள்

லாலா லஜபதி ராய் 1865 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார். அவர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஒரு முக்கிய தேசியவாத தலைவராக இருந்தார். அவர் 'பஞ்சாப் கேசரி' அல்லது 'பஞ்சாப் சிங்கம்' என்ற பட்டத்தையும் பெற்றார். 

அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அடித்தளத்தைத் தொடங்கினார். பலத்த காயங்கள் காரணமாக 1928 நவம்பர் 17 அன்று இறந்தார். ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு லாலா லஜபதி ராய் பெயரிடப்பட்டது.

28 ஜனவரி - கே.எம் கரியப்பா ஜெயந்தி

இந்திய மற்றும் உலக வரலாற்றில் ஜனவரி 28 பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது, அனுசரிக்கப்படுகிறது மற்றும் நினைவுகூரப்படுகிறது, 

அவற்றில் ஒன்று கோடண்டேரா மடப்பா கரியப்பாவின் பிறந்த நாள். இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி அவர். இன்று நாம் அவரது 124வது பிறந்தநாளை நினைவு கூறுகிறோம்.

28 ஜனவரி -தரவு தனியுரிமை தினம்

தரவு தனியுரிமை தினம் (ஐரோப்பாவில் தரவு பாதுகாப்பு தினம் என அழைக்கப்படுகிறது ) ] என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 அன்று நடைபெறும் ஒரு சர்வதேச நிகழ்வாகும் .தரவு தனியுரிமை தினத்தின் நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதாகும். இது தற்போது அமெரிக்கா , கனடா , கத்தார் , நைஜீரியா , இஸ்ரேல் மற்றும் 47 ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது .

கருப்பொருள்: Be Privacy Conscious

ஜனவரி 29 - இந்திய செய்தித்தாள் தினம்

இந்தியாவில் செய்தித்தாள்களின் தொடக்கத்தை கௌரவிக்கும் ஒரு நாள் இந்திய செய்தித்தாள் தினம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் இந்திய செய்தித்தாள்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நோக்கமாக உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி இந்திய செய்தித்தாள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த முக்கியமான நிகழ்வைக் கடைப்பிடிக்க எந்த கருப்பொருளும் இல்லை.


MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:

84வது அகில இந்திய அவை தலைவர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?

A) டெல்லி
B) மகாராஷ்டிரா
C) உத்திரபிரதேசம்
D) கர்நாடகம்

ANS :  B) மகாராஷ்டிரா 


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)