TODAY CURRENT AFFAIRS IN TAMIL 31.01.24

TNPSC PAYILAGAM
By -
0



பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு-புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை

யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு பிப்.29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 

2022 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைக்க முன்னர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து பேடிஎம், வங்கி சார்ந்த விதிமுறைகளைப் பின்பற்றாதது தணிக்கையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முதலிடம் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம்

தஞ்சாவூர் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பெற்றது

தமிழக அலங்கார ஊா்திக்கு விருது:

நாட்டின் 75-ஆவது குடியரசுத் தினத்தை முன்னிட்டு தில்லியில் கடந்த ஜனவரி 26 -ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் போது பங்கு கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு மூன்றாமிடத்துக்கான விருதை மத்திய பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரிசையில் நடுவா் குழுவால் தோ்வு செய்யப்பட்ட இந்த விருதை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய்பட் வழங்கினாா். 

குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த நடுவா் குழு, பொதுமக்கள் கருத்துக் கணிப்பு என இரு வகைகளில் மதிப்பிடப்பட்டது. 

இதில் நடுவா் குழு தோ்வில் மாநிலங்கள் வரிசையில் முதல் இரு விருதுகளை முறையே ஒடிஸா, குஜிராத் ஆகிய மாநிலங்கள் பெற்றன. தமிழக அலங்கார ஊா்தி மூன்றாமிடத்திற்கான விருதைப் பெற்றது

பொதுமக்கள் கருத்து கணிப்பில் முதல் மூன்று இடங்களை முறையே குஜ்ராத், உபி, ஆந்திரம் போன்ற மாநிலங்கள் பெற்றன. 

மத்திய அரசுத் துறைகளின் சிறந்த ஊா்தியாக மத்திய கலாசார ஊா்தி தோ்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த ராணுவ அணிவகுப்பிற்கு சிங் ரெஜிமெண்ட், ராஜ்புத்னா ரைஃபில் ரெஜிமெண்ட், மத்திய அரசின் காவல் படைகளில் தில்லி மகளிா் காவலா் பிரிவு, சிஆா்.பி.எஃப் மகளிா் போன்றவை விருதுகள் பெற்றன.

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியல் 2023:

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலில், 2022 இல் 40 மதிப்பெண்களுடன் 85 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு 39 மதிப்பெண்களுடன் 93 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நாடுகள் ஊழலை ஒழிப்பதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளது. 

சத்னம் சிங் சந்து:ராஜ்யசபாவிற்கு பரிந்துரை

சண்டிகர் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வேந்தரும் கல்வியாளருமான சத்னம் சிங் சந்துவை ராஜ்யசபாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பரிந்துரை செய்துள்ளார்.

விதி 80(1)ன் படி குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவால் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 உறுப்பினர்களைக் மாநிலங்களவைக்கு (ராஜ்யசபா) குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் அதிகாரம் படைத்தவர் ஆவார்.

சாரதா செயலி :

தீன்தயாள் அந்தியோதயா திட்டம் என்பது வறுமை ஒழிக்க மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள திட்டமாகும். இத்திட்டதிற்காக சாரதா எனும் செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது


ஜனவரி 31 - சர்வதேச வரிக்குதிரை தினம்

ஒவ்வொரு ஜனவரி 31 ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள மக்கள் சர்வதேச வரிக்குதிரை தினத்தை கொண்டாடுகிறார்கள். இந்த விலங்கின் பாதுகாப்பை நீங்கள் எவ்வாறு ஆதரிக்கலாம் என்பது பற்றிய அறிவைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கம். 


MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:

நாட்டின் 75-ஆவது குடியரசுத் தினத்தை முன்னிட்டு தில்லியில் கடந்த ஜனவரி 26 -ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் போது பங்கு கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு ------- விருதை மத்திய பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது ?

A) முதல் இடம்  
B) இரண்டாம் இடம்
C) மூன்றாம் இடம்
D) நான்காம் இடம்

ANS :  C) மூன்றாம் இடம்

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)