இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை (GER) கொண்ட மாநிலங்கள் பட்டியல் 2021-22

TNPSC PAYILAGAM
By -
0


2021-2022 ஆண்டுக்கான GER அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் Aishe (All India Survey on Higher Education) வெளியிட்டுள்ளது. 

அதன்படி ஜிஇஆர் (Gross Enrolment Ratio) அதாவது உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை விகிதமானது தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது.

ஒரு மாநிலத்தில் 18 முதல் 23 வயதுக்குள்ளாக உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடுவார்கள். அதில் எத்தனைப் பேர் உயர்கல்வி பெறுகிறார்கள் என்பது அளவிடுவார்கள். அதாவது பள்ளிப்படிப்பை முடித்ததும் கல்லூரி படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்? அதைக் கணக்கிடுவதுதான் இந்த Gross Enrolment Ratio. இதன் சுருக்கமாக ஜிஇஆர்.

தமிழ்நாட்டில் இந்தக் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 45.4% ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 48.6% ஆகவும் இருந்தது. இந்நிலையில் 2021-22 ஆண்டுக்கான கல்வியாண்டில் மக்கள் தொகை அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேக்கை விகிதத்தில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இந்தக் கல்வியாண்டில் 46.8% மாணவர்களும் 47.3% மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்துள்ளன என்று ஜிஇஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் தொகை அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் விகிதாச்சார அடிப்படையில் டாப் 10 இடங்களில் உள்ள மாநிலங்கள் பட்டியல்: 

  1. தமிழ்நாடு 47.0% 
  2. ஆந்திரப் பிரதேசம் 36.5% 
  3. கர்நாடகா 36.2% 
  4. மகாராஷ்டிரா 35.3% 
  5. மத்தியப் பிரதேசம் 28.9% 
  6. ராஜஸ்தான் 28.6% 
  7. மேற்கு வங்கம் 26.3% 
  8. உத்திரப் பிரதேசம் 24.1% 
  9. குஜராத் 24.0% பீகார் 17.1
  10. பீகார் 17.1%


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)