பகுதி – (இ)
தமிழில் கடித இலக்கியம் –நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்
அண்ணாவின் கடிதங்கள்
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது, தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
- சிறந்த வரலாறுகளைப் படித்தால் தான் இளம் மனதில் புது முறுக்கு ஏற்படும்.
- நாள், கொள், நட்சத்திரம், சகுனம், சாஸ்திரம் அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகிற தடை கற்கள்.
- தன்னை வென்றவன் தரணியை வெல்வான்.
- பகைவர்கள் தாக்கி தாக்கி தங்கள் பலத்தை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
- எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும், விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும், புது பூங்கா அமைத்தாலும் கல்விச் செல்வம் இல்லாவிடில் அவை பயன்தராது.
- பாடத்திட்டங்களில் பகுத்தறிவைப் புகுத்தும் தீவிரமான திட்டம் உருவாக்கப்படாத வரையில் பகுத்தறிவு வளராது நம் நிலையும் உயராது.
- விதியை நம்பி மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிக மிக தீங்கு.
- சமூக புரட்சி பணியில் ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை துன்பமானது தான். ஆனால் அவர்களது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
- வாழ்க்கை ஒரு பாறை, உங்களிடம் அறிவு என்ற உளி இருக்கிறது. அதை அழகான சிற்பமாக வடித்து ரசியுங்கள்.
- பாடத்திட்டத்தில் பகுத்தறிவை புகுத்தினால் தான் மக்களுக்கு பழமையிடத்திலுள்ள பாசம் குறையும், மனதில் உள்ள மாசு நீங்கும், காலத்திற்குத் தக்கது போல கருத்து வளரும்.
- நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
- புகழ் தான் நம்மை தேடி வர வேண்டும்… புகழை தேடி நாம் அலையக் கூடாது.
- உலகத்தின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.
- ஒரு சிறந்த புத்தகத்தை போல சிறந்த தோழனும் இல்லை. நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை.
- “திராவிட நாடு” என்ற இதழில் கடிதங்களை எழுதினார். ‘தம்பிக்கு’ என்று விரித்து எழுதியுள்ளார்.
- கடித இலக்கியத்தை வளர்த்தவர்களில் பேரறிஞர் அண்ணாவிற்கு பெரும் பங்கு உண்டு
- இவருடைய கடிதத்தில் தமிழ் தமிழர் தமிழ்ப்பண்பாடு தமிழர் தாழ்வும் உயர்வும் தமிழர் செய்ய வேண்டியது. பகுத்தறிவு ஆரிய எதிர்ப்பும் போன்ற கருத்துகள் பிளிர்கின்றன.
- தாயும் சேயும் கொஞ்சி மகிழ்வது போல நிலமடந்தையும் தன் மக்களுக்கு வளம் அளிக்கும் முன்பு விளையாட்டு காட்டுவாள். “உழைத்துப்பெறு! உரிய நேரத்ல் பெறு! முயற்சி செய்து பெறு! என்று அன்புடன் ஆணையிடுகிறாள்.
- தன் கடிதத்தில் கவிஞர் முடியரசன் தமிழர் திருநாளான தை முதல் நாளை “உழைப்பினை உணர்த்தும் பெருநாள்” என்றும் “புதுமை இன்பம் பூணும் நன்நாள்” என்றும் பாடியிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
- “பொங்குக இன்பம்! பொங்குக புதுமை! பொங்குக பொலிவு! வளம் பெருகிடுக! வாழ்வு சிறந்திடுக! வாழ்வு சிறந்திடு! வாழ்க தமிழ்! வாழ்க தமிழகம்!” என்று வாழ்த்துகளுடன் தம்பிகளைக் கேட்டுக்கொள்கிறார்.
14.1.1968 ல் காஞ்சி இதழ் மூலம் அண்ணா எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
- "புனலிடை மூழ்கிப் பொழிலிடை பேசி உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு கனிமொழி பேசி” - அறிஞர் அண்ணா
- தமிழர் திருநாளாம் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள் உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் புதுமையின்பம் பூனும் நன்னாள் என்று - முடியரசன் முழங்குகிறார் எனக் குறிப்பிட்டவர் - அறிஞர் அண்ணா
அண்ணா -குறிப்பு
- திராவிட நாடு, காஞ்சி இதழ் மூலம் கடிதங்கள் எழுதியவர் – அண்ணா
- “தம்பிக்கு” என கடிதம் எழுதியவர்.
- நான்மாடக்கூடலில் நிற்கின்றேன், நானிலம் போற்றிடும் தனிச் சிறப்பினைப் பெற்று தமிழகத்தின் அறிவுக்கோட்டமாய்த் திகழ்ந்து இம்மதுரையம்பதி என்ற எண்ணம் தந்திடும் எழுச்சி பொங்கிடும் நிலையில் நிற்கிறேன் என்றவர்
- நான்மாடக்கூடலில் நிற்கின்றேன், நானிலம் போற்றிடும் தனிச் சிறப்பினைப் பெற்று தமிழகத்தின் அறிவுக்கோட்டமாய்த் திகழ்ந்து இம்மதுரையம்பதி என்ற எண்ணம் தந்திடும் எழுச்சி பொங்கிடும் நிலையில் நிற்கிறேன் என்றவர் அண்ணா.
- 06-03-1967 ல் அண்ணா தமிழக முதலமைச்சர் ஆனார்.
- 14 04 1967 ல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ் நாடு அரசு தலைமை செயலகம் என்ற பெயர் பலகையை திறந்து வைத்தார்.
- 15-05-1967 ல் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- 1967-ல் சமூக நலப்பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்து சீரணி அமைப்பை தொடங்கி வைத்தார்.
- 1968-ல் போப்பிடம் சென்று கோவா விடுதலை வீரர் ரானடேவை விடுதலை அடையச் செய்தார்.
- ஆசிரியர் கல்கியால் தமிழ் நாடகக் கலைக்கு ஒரு பெர்னாட்ஷா என்று பாராட்டப்பட்டவர் - அறிஞர் அண்ணா.
- அயர்லாந்து நாட்டைச்சேர்ந்த ஜார்ஜ் பெர்னாட்ஷா புகழ்பெற்ற எழுத்தாளரும் சிறந்த நாடக ஆசிரியரும் ஆவார்
- போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த இந்த உலகத்தில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்க கூடியது கல்வி மட்டுமே.
- பழமை புதுமை என்ற இரு சக்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரில் உபயோகமாகும் போர்க் கருவிகள்.
- எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமான கொள்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்.
- ஓராயிரம் ஆபத்துக்கள் ஓயாமல் நம்மை நோக்கி வந்தாலும். நம் உள்ளம் உண்மை என்று உணர்ந்ததை உரைக்க அஞ்சுபவன் கோழை மட்டுமல்ல நாட்டுத் துரோகி.
- ஆளப்பிறந்தவன் ஆண்மகன். அவன் இஷ்டத்துக்கு ஆடிப் பிழைக்க வேண்டியவள் பெண் மகள் இப்படிப் பேசிடும் பண்பு படைத்தது இந்து மதம். இந்த இந்து மதத்தை நம்பிக் கிடக்கும் நாடு உருப்படாது.
- நான் எப்போதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்.
- ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.