சி மணி ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் = சி.பழனிச்சாமி
பிறப்பு = 3 அக்டோபர் 1936
பணி = ஆங்கிலப் பேராசிரியர்
இவர் ஒரு ஆங்கிலப் பேராசரியர்1959 ஆம் ஆண்டு முதல், “எழுத்து” இதழில் இவரின் கவிதைகள வெளிவந்தனஇவர் நடத்திய சிற்றிதழ் - "நடை"தமிழ் நவீன கவிதையில் "அங்கதம்" என்பது சி. மணியால் கொண்டுவரப்பட்டது. (அங்கதம் என்பதன் பொருள் "நையாண்டி" எனப்படும்.)“இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாய் சொன்னவர்”
புனைப் பெயர்
- தாண்டவராயன்
- வே.மாலி
- கே.செல்வம்
- ஓலூலூ
- பெரியசாமி
- ப.சாமி
- தான்டவநாயகம்
சி மணி கவிதைகள்
- வரும் போகும்
- ஒளிச் சேர்க்கை
- இதுவரை
- நகரம்
- பச்சையின் நிலவுப் பெண்
- நாட்டியக்காளை
- உயர்குடி
- அலைவு
- குகை
- தீர்வு
- முகமூடி
- பழக்கம்
- பாரி
ஆய்வு நூல்
- யாப்பும் கவிதையும் (தமிழில் புதுகவிதை பற்றிய முதல் ஆய்வு நூல்)
விருது
- விளக்கு இலக்கிய பரிசு (2002)
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக விருது (இரு முறை 1983,1985)
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
பொதுவான குறிப்புகள்
1959 ஆம் ஆண்டு முதல் “எழுத்து” இதழில் இவரின் கவிதைகள வெளிவந்தன
இவர் நடத்திய சிற்றிதழ் = நடை( “நடை” என்ற பெயரில் சிறுபத்திரிக்கை ஒன்றையும் நடத்தி வந்தார்.)
இவரின் கவிதை தொகுப்பு = வரும் போகும், ஒளிச்சேர்க்கை, இதுவரை
இவர் ஒரு ஆங்கிலப் பேராசரியர்
“தாவோ தி ஜிங்” என்னும் சீன மெய்யியல் நூலினை தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்
புதுக்கவிதையில் இவர் அதிகம் பயன்படுத்தியது = அங்கம்
“இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாய் சொன்னவர்”
சி.செல்லப்பாவின் “எழுத்து” காலம் தொட்டு எழுதியிருக்கிறார்.
தமிழில் நவீன கவிதையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர்.
தந்தத்தோடு கூடிய நவீன கவிதைகளில் இவர் ஞானக்கூத்தனுக்கு முன்னோடி.
யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர் புது வடிவத்தை நிலைநிறுத்தம் வகையில் கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய பிச்சமூர்த்தி, இ.க.நா.சுப்ரமணியம், இ.செல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவரும் அவர்தான்.
“யாப்பும் கவிதையும்” என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல். யாப்பிலிருந்து விடுபட்டது தான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியை காண முடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான்.
அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடன் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்கு பயன்படுத்திய போது செய்யுளின் நடையை மறுவார்ப்பு செய்தவர் சி.மணி. இத்தனைக்கும் மேற்கத்திய நவீன கவிதையின் பாதிப்பு அவரிடம் அதிகம்
இவர் எழுதிய நரகம், பச்சையம், வரும் போகும் போன்ற நீள் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
2009-ல் காலமானார்