FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16.02.24

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL 16.02.24
CURRENT AFFAIRS IN TAMIL 16.02.24


அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர்:
  • நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்
  • மலைப்பகுதியான உத்தராகண்டில், மக்களை அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்துச் செல்வது சவாலானதாக உள்ளது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் சேவையில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. 
  • இதையடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் உத்தராகண்ட் அமைச்சரவை இது தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது.
 இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்:
  • வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலமாக நாளை (பிப்ரவரி 17) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான இன்சாட்-3டிஎஸ் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது. 
  • இதில் 6 இமேஜிங் சேனல்கள் உட்பட 25 விதமான ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
  • இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும்.
உலகின் பெரியபொருளாதார நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு பின்னகர்ந்துள்ளது.
  • ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. கடந்த அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலாண்டில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.4 சதவீதம் சரிந்துள்ளது. அதற்கு முந்தைய ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 2.9 சதவீதம் சரிந்தது. தொடர்ச்சியாக, இரண்டு காலாண்டாக ஜப்பானின் ஜிடிபி சரிந்துள்ள நிலையில், அந்நாடு உலகின் பெரியபொருளாதார நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு பின்னகர்ந்துள்ளது.
  • 2023-ம் ஆண்டு நிலவரப்படி இப்பட்டியலில் உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவும், இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனாவும் உள்ளன ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருந்தன. இந்நிலையில், தற்போது ஜப்பான் 4-ம் இடத்துக்கு பின்னகர்ந்துள்ளது. ஜெர்மனி 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
16ஆவது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் :
  • 16ஆவது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் ஆணையத்தின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் டெல்லி ஜன்பத்தில் உள்ள ஜவஹர் வியாபார் பவனில் நடைபெற்றது. 16ஆநிதிக் குழுவின் செயலாளர் ரித்விக் ரஞ்சனம் பாண்டே மற்றும் அதிகாரிகள், தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்றனர். 
  • குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி நிதியமைச்சகம் 2023 டிசம்பர் 31 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி 16ஆவது நிதிக் குழு அதன் விதிமுறைகளைப் பற்றி விவாதித்தது.
  • டெல்லியில் ஜன்பத்தில் உள்ள ஜவஹர் வியாபார் பவனில் தனது அலுவலகத்தை அமைக்க 16ஆவது நிதிக்குழு ஒப்புதல் அளித்தது. 
  • 16ஆவது நிதிக்குழு தனது பரிந்துரைகளை 2025 அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இது 2026 ஏப்ரல் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான பரிந்துரைகளாக இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


நாட்டிலேயே முதன்முறையாக --------- மாநிலத்தில் அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்

A) உத்தராகண்ட் 
B) டெல்லி
C) குஜராத்
D) தமிழ்நாடு


நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)