FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17.02.24

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL 17.02.24
CURRENT AFFAIRS IN TAMIL 17.02.24




தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை:
  • பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.
  • இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரொடமைன் பி (Rhodamine-B) எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சஞ்சய் குமார் ஜெயின்:
  • IRCTCஇன் தலைவராக சஞ்சய் குமார் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • Indian Railways Catering and Tourism Corporation (IRCTC) – 27.09.1999
லக்சயா சான்றிதழ்:
  • லக்சயா சான்றிதழ் மத்திய அரசு தமிழ்நாட்டிலுள்ள 55 மருத்துவ மையங்களுக்கு வழங்கியுள்ளது.
  • லக்சயா சான்றிதழ் என்பது கர்பிணிகளுக்கான அறுவை அரங்கத்தின் தரம் உயர்த்தும் திட்டமான லக்சயா திட்டத்திற்கு வழங்கப்படும்  சான்றிதழ் ஆகும்.
ஆங்கிலம் கற்றல் -MOZHIGAL - Language Lab
  • தமிழகத்தில் மொழிகள் ஆய்வகம் வாயிலாக மாணவர்கள் யாருடைய உதவியுமின்றி தன்னிச்சையாக ஆங்கிலம் கற்க mozhigal.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது
பிங்க் ஸ்குவாடு (Pink Squad):
  • சென்னை மெட்ரோவில் பிங்க் ஸ்குவாடு (Pink Squad) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்ப்பதற்காக 23 பெண் பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கார்டோசாட்-2
  • கார்டோசாட்-2 என்னும் புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோள் இந்தியப் பெருங்கடலில் விழ வைக்கப்பட்டுள்ளது.
  • 17 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி கழிவுகளால் ஏற்படும் இடர்களை குறைக்க செயற்கைக்கோள் இந்திய பெருங்கடலில் விழ வைக்கப்பட்டுள்ளது.
  • 10.01.2007-ல் நகர்ப்புற திட்டமிடல் நடவடிக்கைக்காக விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
ஆன்டி ட்ரோன் சிஸ்டம் (Anti Drone System)
  • ஒலி அடிப்படையிலான ஆன்டி ட்ரோன் அமைப்பினை ஜம்மு ஐஐடி உருவாக்கியுள்ளது.
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ:
  • கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ தொடங்கப்பட உள்ளது.
60வது மியூனிக் பாதுகாப்பு மாநாடு:
  • 60வது மியூனிக் பாதுகாப்பு மாநாடு ஜெர்மெனியின் நடைபெற்றது.
  • சர்வதேச பாதுகாப்பு குறித்து நடைபெற்றுள்ளது.
ஓரே பாலின திருமணம்
  • கீரிஸ் நாடானது ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது.
  • இதன் மூலம் ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் மரபு வழி கிறிஸ்துவ நாடு ஆகும்.
வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 500வது விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார்.
  • அனில் கும்ளேவுக்கு பிறகு 500வது விக்கெட்டினை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்
  • 500 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது ஆஃப் ஸ்பின்னர் ஆவார்.
  • அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தினார். மேலும் 95 டெஸ்ட் போட்டிகளில் அதிவேக இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
FIFA தரவரிசை:
  • FIFA வெளியிட்டுள்ள கால்பந்து தரவரிசையில் இந்தியா 117வது இடம் பிடித்துள்ளது.
  • அர்ஜென்டினா முதலிடம் பிடித்துள்ளது
அதிவேக இரட்டை சதம் (டெஸ்ட் கிரிக்கெட்)
  • மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 248 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அனபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா) சாதனை புரிந்துள்ளார்.
  • அதிவேக இரட்டை சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீராங்கனையாவார்.

நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)