FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 18.02.24 - 19.02.24

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL 18.02.24  - 19.02.24
CURRENT AFFAIRS IN TAMIL 18.02.24  - 19.02.24


தமிழக அரசின் பட்ஜெட்

  • தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
  • நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
"காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் 
மீக்கூறும் மன்னன் நிலம்" - என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 

KEY POINT NOTES :தமிழக பட்ஜெட்டின் அதன் முக்கிய அம்சங்கள்

நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியல்

நாட்டை ஆளும் மாநில முதல்வர்களின் மக்களின் செல்வாக்கு மற்றும் மாநில வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 

  1. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெரும்பான்மையான மக்களின் செல்வாக்கை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு 52.7 சதவீத ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
  2. இரண்டாவது இடம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு கிடைத்துள்ளது. அவர் மாநிலத்தில் 51.3 சதவீத மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  3. மூன்றாவது இடத்தை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பிடித்துள்ளார். அவர் 48.6 சதவீத மதிப்பீட்டை பெற்றுள்ளார். 
  4. நான்காவது இடத்தை 42.6 சதவீத மக்கள் ஆதரவுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பிடித்துள்ளார்.
  5. திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா 41.4 சதவீத மக்கள் ஆதரவுடன் மதிப்புமிக்க முதல்வர்களின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். 
வளரிளம் பருவ கர்ப்பிணிகள்
  • கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள 8,462 வளரிளம் பருவ கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • முதலிடம்  – தர்மபுரி (3,249)
  • இரண்டாமிடம் – கரூர் (1,057)
  • மூன்றாமிடம் – வேலூர் (921)

‘மாஸ்டர் பிளான்’ வரைவு திட்டம் 
  • மதுரை மாநகராட்சி உள்பட மதுரை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 4 டவுன் பஞ்சாயத்துகள், 316 கிராம பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ‘மாஸ்டர் பிளான்’ வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. 
  • இதனால், நகர்பகுதிகள் 147.97 சதுர கி.மீ., தொலைவுக்கு விரிவடைவதால் சென்னை, கோவை மாநகரங்களை போல் தொழில் வளமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு நகரத்துக்கும் அதன் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் உருவாக்கப்படுகிறது. 
  • இந்த திட்டம் தமிழகத்தில் 1971ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 
  • ஆனால், கடந்த காலத்தில் இந்த மாஸ்டர் பிளான் திட்டம், ஊட்டி, கொடைக்கானல் தவிர மற்ற நகரங்களில் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை.
  • மதுரை மாநகராட்சியில் கடந்த 1994ம் ஆண்டு 72 வார்டுகளில் ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ஒவ்வொரு 5 முதல் 10 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 

ஞானபீட விருது (jnanpith award):
  • இலக்கியத்திற்கான உயரிய விருதான ஞான பீட விருதினை குல்சார், ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிலன் 2024-MILAN-2024:
  • இந்திய கடற்படை, 2024 பிப்ரவரி 19 முதல் 27 வரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையோரம் பலதரப்பு கடற்படை பயிற்சி MILAN இன் 12 வது பதிப்பை நடத்த தயாராக உள்ளது என்று அறிவித்தது. மெகா நிகழ்வில் பங்கேற்க 50 க்கும் மேற்பட்ட நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன.
  • "மிலன் 2024 இன் மைய நோக்கம் நட்பு கடற்படைகளுக்கு இடையிலான தொழில்முறை தொடர்புகளை மேம்படுத்துவது மற்றும் கடலில் பலதரப்பு பெரிய படை நடவடிக்கைகளில் அனுபவத்தைப் பெறுவது" என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
  • MILAN பற்றி: MILAN என்பது இந்திய கடற்படையால் 1995 ஆம் ஆண்டு முதல் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் நடத்தப்படும் கடற்படைகளின் கூட்டமாகும், பின்னர் பிராந்திய மற்றும் கூடுதல் பிராந்திய கடற்படைகளுக்கு இடையே "தோழமை, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை" மேம்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதான நிலப்பரப்பில் நடத்தப்படுகிறது
இளம் விஞ்ஞானிகள் திட்டம் (யுவ விஞ்ஞானி கார்யக்கரம்):
  • பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டத்தினை இஸ்ரோ (ISRO) தொடங்க உள்ளது.
  • பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் உள்ளிடவற்றில் அறிவை ஏற்படுத்த இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ISRO (Indian Space Research Organisation) – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – 15.08.1969

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி:

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற மிகப் பெரிய வெற்றிகள் (ரன்கள் வித்தியாசத்தில்) 

  • இங்கிலாந்துக்கு எதிராக, 2024 - 434 ரன்கள் வித்தியாசத்தில் 
  • நியூசிலாந்துக்கு எதிராக, 2021 - 372 ரன்கள் வித்தியாசத்தில் 
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2015 - 337 ரன்கள் வித்தியாசத்தில் 
  • நியூசிலாந்துக்கு எதிராக, 2016 - 321 ரன்கள் வித்தியாசத்தில்

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்

  • ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
  • இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றியது.
  • இதைத் தொடர்ந்து ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக பி.வி. சிந்து தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது
  • மலேசியாவின் சிலாங்கூரின் ஷா ஆலம் பகுதியில் ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா, சீனா, மலேசியா ஆகிய 7 அணிகள் இடம் பெற்று விளையாடின.

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


தமிழகத்தில் வளரிளம் பருவ கர்ப்பிணிகள் பட்டியில் முதலிடம் பிடித்துள்ள மாவட்டம் எது?

A)  கரூர்
B) வேலூர்
C) சென்னை
D) தர்மபுரி

ANS :  D) தர்மபுரி


நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)