FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.02.24

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL 21.02.24
 CURRENT AFFAIRS IN TAMIL 21.02.24


நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்

  • 6 முதல் 9 வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் திறனை மேம்படுத்த நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டதின் கீழ் கணிதம், உளவியல் மற்றும் மொழித்திறன் போன்றவற்றை கொண்டு தேர்வு நடத்தி மாணக்கர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
  • அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி இத்திட்டத்தினை துவங்கி வைத்துள்ளன.

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் 2023:

2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வு  மும்பையில் நடைபெற்றது. 
  • ஜவான் படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருதும்
  •  நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது. 
  • சிறந்த இயக்குநர் விருது அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவிற்கும் 
  • சிறந்த வில்லன் விருது பாபி தியாலுக்கும் (அனிமல்) கொடுக்கப்பட்டது. 
  • சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்துக்கு (ஜவான்) வழங்கப்பட்டது. 
  • சிறந்த இயக்குநர் (விமர்சகர்கள் பரிந்துரை) விருது அட்லிக்கு கொடுத்தனர். 
  • இசைத்துறையில் செய்த மிகப்பெரிய பங்களிப்புக்காக ஜேசுதாஸுக்கும் விருது அறிவிக்கப்பட்டது. 
  • சிறந்த நடிகர் (விமர்சகர்கள் பரிந்துரை) விக்கி கௌஷல் (சாம் பகதூர்), 
  • சிறந்த நடிகை ராணி முகர்ஜி (மிசஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே) ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டது. 
  • சிறந்த படமாக 12த் பெயில் (12th fail) படமும் 
  • சிறந்த இணையத் தொடராக ஃபார்சி (farzi) தேர்ந்தெடுக்கப்பட்டன.           


டண்ட் பட்டா (Dand Patta):

  • சத்ரபதி சிவாஜி பயன்டுத்திய கையுறை வாளான டண்ட் பட்டா (Dand Patta)-வினை மகாராஷ்டிராவின் மாநில ஆயுதமாக அறிவித்துள்ளது.
  • சத்ரபதி சிவாஜி பிறந்த தினம் – 19.02.1630


மர செயற்கைக்கோள்:
  • உலகின் முதல் மரசெயற்கைக்கோளினை NASA விண்வெளி மையமும் JAXA விண்வெளி மையமும் இணைந்து உருவாக்கியுள்ளது.
  • NASA விண்வெளி மையம் – அமெரிக்கா
  • JAXA விண்வெளி மையம் – ஜப்பான்
  • ISRO விண்வெளி மையம் – இந்தியா                                                                                       

ஆப்பிளின் ஒலியியல் பிரிவு தலைவராக பதவி :
  • உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் ஒலியியல் பிரிவு தலைவராக பதவி வகித்த கேரி கீவ்ஸ் பதவியில் இருந்து மாற்றப்பட்டு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ருசிர் டேவ் புதிதாக தலைமை பொறுப்பு ஏற்றுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இந்திய வம்சாவழியைச் சேர்ந்த டேவ், 2009 முதல் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 
  • ஒலியியல் பொறியாளராக பணியில் சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து 2021 மார்ச்சில் மூத்த இயக்குநராக பதவியேற்றார். குஜராத்தைச் சேர்ந்த டேவ், அகமதாபாத்தில் 1998-ல் பொறியியல் படிப்பை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                              
சுப்மன் கில்:
  • பஞ்சாப் மாநிலமானது மக்களைவை தேர்தலுக்கான மாநில அடையாளமாக இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில்லை நியமித்துள்ளது.                                                                                                                           
ஹென்லி பாஸ்போட் குறியீடு 2024:
  • 2024-ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போட் குறியீட்டில் இந்தியாவிற்கு 85வது இடம் கிடைத்துள்ளது.
  • ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தை (109) பிடித்துள்ளது

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டு:
  • சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரராக இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா மாறியுள்ளார். 
  • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (பிப்ரவரி 19) நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். 
  • இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வீரராக அவர் உருவெடுத்தார். அவர் தனது 63-வது சர்வதேசப் போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். 
  • 53 சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான நாட்களின் பட்டியல் பிப்ரவரி  2024:


பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழி தினம்

  • மொழியின் பன்முகத்தன்மை மற்றும் அதன் பன்முகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி, யுனெஸ்கோவால் முதலில் அறிவிக்கப்பட்டது.
  • உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டு  கொண்டாடப்படுகிறது
  • உலகத் தாய்மொழி நாளுக்கு நீண்ட, உணர்ச்சி மிகுந்த வரலாறு உண்டு. இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது, கிழக்கு வங்கமும் பாகிஸ்தானின் அங்கமாக மாறியது. பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப் படவில்லை. அதைக் கண்டித்தும், வங்க மொழியை அங்கீகரிக்க வலியுறுத்தியும் 1952ம் ஆண்டு இதே பிப்ரவரி 21ம் நாளில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சலாம், பர்கட், ரபீக், ஜபார், ஷபியூர் ஆகிய 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்ப்பட்டதை நினைவு கூறும் வகையில், அந்நாளை உலக தாய்மொழி நாளாக 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.
  • கருப்பொருள்: Multilingual education – a pillar of learning and intergenerational Learing




CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர்  ?

A)  ரஷித் கான்
B) வனிந்து ஹசரங்கா
C) ஆடம் ஜாம்பா
D) மலிங்கா

ANS :  B) வனிந்து ஹசரங்கா

நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)