CURRENT AFFAIRS IN TAMIL 25.02.24 |
இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்புத் துறை உற்பத்தியானது ரூ.3 லட்சம் கோடி:
- இந்தியா, தற்போது உலகின் முதல் 25 ஆயுத ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசின் தொடா் முயற்சிகளால் பாதுகாப்புத் துறை உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அதேபோல் கடந்த 7-8 ஆண்டுகளுக்குமுன்பு, இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி ரூ.1,000 கோடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அது ரூ.16,000 கோடியைத் தாண்டிவிட்டது.
- வரும் 2028-29-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்புத் துறை உற்பத்தியானது ரூ.3 லட்சம் கோடி மற்றும் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ரூ.50,000 கோடியை எட்டும். இந்தியாவை பாதுகாப்புத் துறை உற்பத்தி நாடாக மாற்றுவதில் அரசு உறுதிபூண்டுள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்
இஸ்லாமியா் திருமணச் சட்டம் ரத்து: அஸ்ஸாம்:
- குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்காக அஸ்ஸாம் இஸ்லாமியா் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ய அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்
- ‘ஆண் 21 வயதையும் பெண் 18 வயதையும் பூா்த்தி அடையாமல் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமியா் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935 வழிவகுக்கிறது. எனவே அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்களை ஒழிக்கும் முக்கிய முன்னெடுப்பாக இச்சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது’ என குறிப்பிட்டாா்
இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிவதை கட்டாயமாக்க வேண்டும்:
- சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைபவா்களின் எண்ணிக்கையை குறைக்க காா்களுக்கு உள்ளது போன்று பேருந்துகள், பள்ளி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களிலும் இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிவதை கட்டாயமாக்க வேண்டும்’ என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திடம் சா்வதேச சாலை பாதுகாப்பு கூட்டமைப்பு (ஐஆா்எஃப்) வலியுறுத்தியுள்ளது.
- இதுதொடா்பாக மத்திய அமைச்சகத்துக்கு ஐஆா்எஃப் கெளரவ தலைவா் கே.கே.கபிலா கடிதம் எழுதியுள்ளாா்.
புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்:
- மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய சட்ட மசோதாக்களை கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்து, நிறைவேற்றியது.
- இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த ஆண்டு 2023 டிசம்பா் 25-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். அதைத் தொடா்ந்து, 3 மசோதாக்களும் சட்டங்களாக மாறின.
KEY POINTS : புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள்
குரங்கு காய்ச்சல்:கியாசனூா் வன நோய் (கேஎஃப்டி)
- கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தமிழக வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- கியாசனூா் வன நோய் (கேஎஃப்டி) எனப்படும் குரங்கு காய்ச்சல் ( KFD-Kyasanur forest disease ) என்பது இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் பரவும் வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலாகும் . இந்த நோய் Flaviviridae குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படுகிறது . KFDV இன் நீர்த்தேக்கமாகச் செயல்படும் பாதிக்கப்பட்ட கடினமான உண்ணிகள் ( ஹேமாபிசாலிஸ் ஸ்பினிகெரா ) கடித்தால் மனிதர்களுக்கு KFDV பரவுகிறது .
- கியாசனூா் வன நோய் (கேஎஃப்டி) எனப்படும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கா்நாடகத்தில் அதிகரித்து வருகிறது.இன்றுவரை அந்த நோய்க்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 103 பேர் சிவமோகா, உத்தர கன்னடா மற்றும் சிக்மங்களூரு மாவட்டங்களில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) இணைந்து நடத்திய ஆய்வில் தமிழக எல்லையான கர்நாடகாத்தின் மைசூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் கொடிய வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சி-விஜில் செயலி- C VIGIL
- சி-விஜில் செயலி மூலம் பொதுமக்கள் பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். தேர்தலுக்கு 7 நாள்களுக்கு முன் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உள்படுத்தப்படும்
- சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. அங்கீகாரமற்ற கட்சிகளின் சின்னம் மாறுதலுக்குரியதுதான் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய டெலிகாம் நெட்வொர்க்கில் CNAP சேவை அறிமுகம்
- கைப்பேசி அழைப்புத் திரையிலேயே அழைப்பவரின் அடையாளத்தை அறிந்து கொள்ளும் ‘அழைப்பாளா் பெயா் அறிவிப்பு(சிஎன்ஏபி)’ வசதியை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்க தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம்(டிராய்) பரிந்துரைத்துள்ளது.
- பரிந்துரைகள் ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்த போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும் டிராய் வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் மிக நீளமான சுதர்சன் சேது கேபிள் பாலம்
- குஜராத்தில் ஓகா நிலப்பரப்பையும், துவாரகா தீவையும் இணைக்கும் 2.32 கிமீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- முன்னதாக 'சிக்னேச்சர் பாலம்' என்று அழைக்கப்பட்ட இந்தப் பாலம், தற்போது 'சுதர்சன் சேது' அல்லது சுதர்சன் பாலம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை குறித்து புகாரளிக்க தேர்தல் ஆணையம் ------ செயலி அறிமுகப்படுத்தியது?
A) டாஷ்போர்டு" போர்டல் ( Dashboard" portal )
B) சி-விஜில் செயலி (C VIGIL)
C) தொந்தரவு செய்யாதீர் (Do Not Disturb App) செயலி
D) ஆப்ட்ரூட் (OptRoute) செயலி
ANS : B) சி-விஜில் செயலி (C VIGIL)
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: