TODAY CURRENT AFFAIRS IN TAMIL 26.02.24 |
2022ஆம் ஆண்டுக்கான ‘அருட்பெருஞ்ஜோதி - வள்ளலார் விருது’
- தமிழக அரசின் சார்பில் 2022ஆம் ஆண்டுக்கான ‘அருட்பெருஞ்ஜோதி - வள்ளலார் விருது’ ப.சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவர் எழுதிய நூல்கள் : ‘அருட்பா × மருட்பா’ போராட்டத்தின் நூலாசிரியரும் அதன் ஆவணங்களின் தொகுப்பாசிரியரும் ஆவார். ‘நவீன நோக்கில் வள்ளலார்’, ‘வாழையடி வாழையென...’ முதலிய அவரது ஆய்வு நூல்கள் சன்மார்க்க உலகின் கவனத்தை ஈர்த்தவை. இவர் வள்ளலாரிய ஆய்வில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
- தமிழக அரசால் கடந்த 2020 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்விருது, ஆண்டுதோறும் சன்மார்க்க அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருது ஊரன் அடிகளாருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான விருது ரா.சஞ்சீவராயருக்கும் வழங்கப்பட்டது. இவ்விருது ரூ.2 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இலக்கிய விருதுகள்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலை இலக்கியப் பிரிவு ஆண்டுதோறும் வழங்கிவரும் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- சிறந்த கவிதை நூலுக்கான விருது பூவிதழ் உமேஷுக்கும்
- சிறந்த நாவலுக்கான விருது முத்துராசா குமாருக்கும்
- சிறந்த சிறுகதை நூலுக்கான விருது சாரோனுக்கும்
- சிறார் இலக்கிய விருது உதயசங்கருக்கும்
- சிறந்த பெண் எழுத்தாளர் விருது சு.தமிழ்ச்செல்விக்கும்
- சிறந்த பெளத்த இலக்கிய விருது மு.ரமேஷுக்கும்
- எழுச்சித் தமிழர் இலக்கிய விருது அரச முருகுபாண்டியனுக்கும்
- சிறந்த திடைப்படத்துக்கான விருது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘மாமன்னன்’ படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேன்ஸ் திரைப்பட விழா-பிரான்ஸ்
- சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பியர் ஏஞ்சனியூ (Pierre Angenieux) விருதானது சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதினை பெறும் முதல் இந்தியர் ஆவார்.
குடும்ப நுகா்வோா் செலவின ஆய்வு-தேசிய புள்ளியியல் அலுவலகம்
- மத்திய புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகத்தின் கீழ், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை வரை குடும்ப நுகா்வோா் செலவின ஆய்வை தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்தியது.
- பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களின் வாரியாக மதிப்பீடுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆய்வின்படி, தற்போதைய விலையில் சராசரி தனிநபா் மாதாந்திர குடும்ப செலவு நகா்ப்புறங்களில் கடந்த 2011-12-ஆம் ஆண்டின் ரூ.2,630-லிருந்து கடந்த 2022-23-ஆம் ஆண்டில் ரூ.6,459-ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது.கிராமப்புறங்களில் ரூ.1,430-லிருந்து ரூ.3,773-ஆக உயா்ந்துள்ளது.
- இதே காலகட்டத்தில் தனிநபா் வருமானம் நகா்ப்புறங்களில் 1.3 மடங்கும், கிராமப்புறங்களில் 1.4 மடங்கும் மட்டுமே அதிகரித்துள்ளது.
- கிராமப்புற விளிம்பு நிலை ஏழைகள் நாளொன்றுக்கு ரூ.46 (மாதத்துக்கு ரூ.1371) மட்டுமே செலவழிப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் வறுமை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது:
- நுகர்வோரின் செலவினம் தொடர்பான கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி, இந்தியாவில் வறுமை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
- கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் நுகர்வு 2.5 மடங்கு அளவில் அதிகரித்துள்ளது. நகர்ப்புற குடும்பங்களில் சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு 2011-12ம் ஆண்டில் இருந்து 33.5 சதவீதம் உயர்ந்து ரூ. 3,510 ஆக உள்ளது. இவ்வாறு சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
பள்ளி சேர வயது
- 6வயது நிரம்பாத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கூடாது மத்திய கல்வித்துறை செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் ஜப்பானின் தரைப்படை இடையேயான 5வது 'தர்மா கார்டியன்' கூட்டு ராணுவப் பயிற்சி
- இந்திய ராணுவம் மற்றும் ஜப்பானின் தரைப்படை இடையேயான 5வது 'தர்மா கார்டியன்' கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் 25.02.2024 தொடங்கியது. இந்தப் பயிற்சியை 2024 மார்ச் 9வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- 'தர்மா கார்டியன்' பயிற்சி ஆண்டுதோறும் இந்தியா மற்றும் ஜப்பானில் மாறி மாறி நடத்தப்படுகிறது. இரு தரப்பிலும் தலா 40 வீரர்கள் உள்ளனர். ஜப்பானிய படைப்பிரிவை 34வது காலாட்படைப்பிரிவின் துருப்புகளும், இந்திய ராணுவ படைப்பிரிவை ராஜபுதன ரைபில்ஸைச் சேர்ந்த ஒரு பட்டாலியனும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
- தர்மா கார்டியன் பயிற்சி" நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜப்பான் தரைப்படையின் கிழக்கு கமாண்டிங் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் டோகாஷி யுய்ச்சி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இவர் மார்ச் 3 அன்று பயிற்சிகளைக் காண்பார்.
KEY POINTS : LIST OF MILITARY EXERCISES OF INDIA 2023-2024
தேசிய முதியோர் நல மருத்துமனை மையம்
- சென்னை, கிண்டியில் கட்டப்பட்பட தேசிய முதியோர் நல மருத்துமனை மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
- உலக முதியோர் தினம் – ஆகஸ்ட் 21
'பாரத் டெக்ஸ் - 2024'
- மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில், டில்லியில் உள்ள பாரத் மண்டபம், 'யாஷ் பூமி' ஆகிய கண்காட்சி வர்த்தக மையத்தில், 'பாரத் டெக்ஸ் - 2024' 26.02.2024 துவங்கி வரும் மார்ச் 1 வரை நடக்கிறது. பிரதமர் மோடி இந்த கண்காட்சியை திறந்து வைத்தார்.
- ''2014ல், இந்திய ஜவுளி துறையின் மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது ரூ.12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது'' என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
எடித் மற்றும் பீட்டர் ஓ'டோனல் விருது:
- அமெரிக்காவில் வசிக்கும் சென்னையை சேர்ந்த இன்ஜி., மற்றும் பேராசிரியரான அசோக் வீரராகவனை டெக்சாஸ் மாகாணம் கவுரவித்துள்ளது.
- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிக உயர்ந்த கல்வி விருதுகளில் ஒன்றான எடித் மற்றும் பீட்டர் ஓ'டோனல் விருது வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளர்ந்து வரும் ஆய்வாளர்களில் சிறந்தவருக்கு டெக்சாஸ் அகாடமி ஆப் மெடிசின், இன்ஜினியரிங், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற அமைப்பு விருது வழங்கி வருகிறது.
கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு
- சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு, நெய்மேலியில் ரூ.1516 கோடி செலவில் அமைக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்து.
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை குடிநீர் வாரியம் இணைந்து இவ்வாலையை நிறுவி உள்ளது.
இந்திய அணி உள்ளூரில் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 17 வெற்றிகள்
- ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், 3-1 என்ற புள்ளி கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் உள்ளூரில் தொடர்ந்து இந்தியா வெற்றி பெறும் 17-வது டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது.
- இதற்கு முன்னதாக 2012-ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திடம் தொடரை இழந்தது. அதன்பிறகு இந்திய அணி உள்ளூரில் விளையாடிய 17 தொடர்களில் எதிர்கொண்ட 50 போட்டிகளில் 39 போட்டிகளில் வென்று 17 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
எத்தனை வயது நிரம்பிய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமென மத்திய கல்வித்துறை நிர்ணயித்துள்ளது?
A) 5 வயது
B) 6 வயது
C) 7 வயது
D) 8 வயது
ANS : B) 6 வயது
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: