FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.02.24

TNPSC PAYILAGAM
By -
0

 

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.02.24
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 27.02.24

ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவால் விண்வெளிக்கு முதல்முறையாக அனுப்பப்படும் 4 வீரர்கள்:

இந்த நிகழ்வின்போது, ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவால் விண்வெளிக்கு முதல்முறையாக அனுப்பப்படும் 4 வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

1.இஸ்ரோ குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்,

2.குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்,

3.குரூப் கேப்டன் அங்கத் பிரதாப்,

4.விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா

தமிழகத்தை சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்

  • ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர். சென்னையில் அஜித் கிருஷ்ணன் 1982ம் ஆண்டு ஏப்ரல்19ம் தேதி பிறந்தார். அவர் 'தேசிய பாதுகாப்பு பாதுகாப்பு அகா அகாடமியில் இருந்து தேர்ச் பெற்றவர். அவர் விமானப் விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றைப் பெற்றவர். அஜித் கிருஷ்ணன், 2023 ஜூன் 21ல், இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும், இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் உள்ளார்.

பெருந்தமிழ் விருது
  • கவிப்பேரரசு வைரமுத்துவின் மகாகவிதை நூல் பெருந்தமிழ் விருதிற்கு தேர்வாகியுள்ளது.
  • மலேசியாவின் தமிழ் இலக்கிய காப்பகம், தமிழ்பேராயமும் இணைந்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

டாக்டர் தீபா:
  • தேசிய முதியோர் நல மருத்துவமனையின் இயக்குனராக டாக்டர் தீபா நியமிக்கப்பட்டுள்ளார். 
  • சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில், 151.17 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவமனையை, பிரதமர் மோடி  திறந்து வைத்தார்.
  • இந்த மருத்துவ மனைக்கு, டாக்டர் கள், நர்ஸ்கள் உட்பட, 276 பணியாளர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர்
  • இதயம், சிறுநீரகம், மூளை, மனநலம், பார்வை திறன் குறைபாடு, ஞாபக மறதி உள்ளிட்ட அனைத்து முதியோர் சார்ந்த பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், முதுமையியல், முதியோர் சார்ந்த மருத்துவ ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

தெற்காசியாவின் மிகப்பெரிய வெடி மருந்து & ஏவுகணை வளாகம்:
  • ரூ.3,000 கோடியில் 500 ஏக்கர் பரப்பளவில் தெற்காசியாவின் மிகப்பெரிய வெடி மருந்து & ஏவுகணை வளாகம் உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் திறக்கப்ட்டுள்ளது.
  • அதானி டிபென்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ் நிறுவனமானது வெடி மருந்து & ஏவுகணை வளாகத்தை உருவாக்கியுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் முதல் ரயில் நிலையத்திற்கு அடிக்கல்:
  • சிக்கிம் மாநிலத்தில் முதல் ரயில் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. 
  • இம்மாநிலத்தில் ரயில் நிலையம் இல்லை. ரயில் போக்குவரத்து சேவையை கோரி அம்மாநில மக்கள் கடந்த 49 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் ரூ. 2000 கோடி மதிப்பிலான ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார். அதில் சிக்கிமின் ரங்போ என்ற இடத்தில் முதல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 
  • மேற்கு வங்கத்தின் சிவோக் மற்றும் சிக்கிமின் ராங்போ இடையே 45 கிமீ நீளமுள்ள இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 38 கிமீ சுரங்கப்பாதைகளையும், 2 கிமீ பாலங்களையும் கொண்டுள்ளது.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகினார்:
  • பிப். 29ம் தேதிக்கு பின், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி, டிபாசிட்கள் பெறுவதற்கு தடை விதித்து சமீபத்தில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த திடீர் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்க மறுத்தது. 
  • அமலாக்கத் துறை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு எதிராக, முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி விஜய்சேகர் ஷர்மா பதவி விலகினார்.
  • 'பெமா' எனும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறை மீறலில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி ஈடுபட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன பிரதமர் முகமது ஷதாயே திடீர் ராஜினமா :
  • இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனியர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதையெடுத்து, இன்று பாலஸ்தீன பிரதமர் முகமது ஷதாயே திடீர் ராஜினமா செய்தார். 
  • 2023 கடந்தாண்டு, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்-காசா போர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 30,000 பேர் பலியாகியுள்ளனர்.போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை இந்நிலையில் பாலஸ்தீன பிரதமர் முகமது ஷதாயே இன்று ராஜினமா செய்தார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர்:
  • நமீபியா, நேபாளம் மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று (பிப்ரவரி 27) தொடங்கியது. முதல் போட்டியில் நமீபியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. 
  • இந்தப் போட்டியில் நமீபியா 20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. நமீபிய வீரர் லாஃப்ட்டீ ஈட்டன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நமீபிய வீரர் லாஃப்ட்டீ ஈட்டன் 36 பந்துகளில் 101 ரன்கள் (11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.
  • இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக நேபாள வீரர் குசல் மல்லா 34 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது. 

ரியோ ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி – பிரேசில்:
  • ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிபோட்டியில் செபாஸ்டியன் பேஸ் வென்று தனது 5வது ஏடிபி பட்டத்தை வென்றுள்ளார்.

FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL:

பிப்ரவரி 27 - உலக என்ஜிஓ தினம்

  • "உலக என்ஜிஓ தினம்" என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 27 அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள். 10 மில்லியனுக்கும் அதிகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஓக்கள்) பணியை அங்கீகரித்து பாராட்டும் நாளாகும். 
  • 2024 ஆம் ஆண்டுக்கான உலக அரசு சாரா தினத்தின் கருப்பொருள் 'நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்: நிலையான வளர்ச்சி இலக்குகளை (எஸ்டிஜி) அடைவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு'  ('Building a Sustainable Future: The Role of NGOs in Achieving the Sustainable Development Goals (SDGs).')என்பதாகும்.


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழகத்தை சேர்ந்த  ஒருவர்?

A) இஸ்ரோ குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், 
B) குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், 
C) குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், 
D) விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா

ANS :  B) குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்

நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)