FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 28.02.24

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 28.02.24
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 28.02.24


லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கா் நியமனம்

  • லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.
  • இதற்கு முன்பு லோக்பால் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவி வகித்தாா். அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். அதன் பின்னா், அந்த அமைப்புக்கு முன்னாள் நீதிபதி பிரதீப் குமாா் மொஹந்தி பொறுப்பு தலைவராக இருந்து வருகிறாா்.

விபத்து நடைபெறக்கூடிய பகுதி- சுற்றறிக்கை

  • அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில், மாநிலங்கள் மற்றும் என்ஹெச்ஏஐ-க்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விபத்து நடைபெறக்கூடிய பகுதி என்று முறைப்படி அறிவிக்கும் முன்பாக, காவல் துறை அறிக்கையின் முதல்கட்ட பகுப்பாய்வின்படி, அத்தகைய பகுதிகளில் விபத்துகளைத் தவிா்ப்பதற்கு தீா்வு காண வேண்டும். 
  • இதற்காக இடிஏஆா் தளத்துக்குள் நுழைந்து தகவல்களைத் தெரிந்துகொள்ள அனைத்து நிா்வாக பொறியாளா்களுக்கும் லாகின் ஐடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் சுமாா் 500 மீட்டா் பகுதியில், குறைந்தபட்சம் 5 விபத்துகள் நிகழ்ந்து 10 போ் உயிரிழந்திருந்தால், அந்தப் பகுதி விபத்து நடைபெறும் பகுதியாக குறிப்பிடப்படும்.

ஆதார் எண் 'மாஸ்கிங்': பதிவுத்துறை நடவடிக்கை:
  • சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் போது, ஆதார் எண் விபரங்கள் பெறப்படுகின்றன. இதேபோன்று, பிரதி ஆவணம் பெறுவதற்கும் ஆதார் எண் பெறுவதுடன், ஆன்லைன் முறையில் சார் - பதிவாளர் சரிபார்த்து உறுதிபடுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 
  • பிரதி ஆவணங்களை ஆன்லைன் முறையில் வழங்கும் போது, அதில் உரிமையாளரின் ஆதார், கைரேகை தொடர்பான, 'பயோமெட்ரிக்' விபரங்கள் வெளியாருக்கு செல்வதை தடுக்க வேண்டும். 
  • ஆதாருக்கான பாதுகாப்பு வழிமுறைகள் அடிப்படையில், சொத்து பத்திரங்களில், ஆதார் எண்களை, 'மாஸ்கிங்' முறையில் மறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
  • பத்திரப் பதிவுக்கான, 'ஸ்டார் 2.0' சாப்ட்வேரில், இதற்காக சில தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

150 அடி நீள, 'ரெடிமேட்' பாலம், ராணுவத்தில்  சேர்க்கப்பட்டது:
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ள, மிக பிரமாண்டமான, 150 அடி நீள, 'ரெடிமேட்' பாலம், ராணுவத்தில்  சேர்க்கப்பட்டது. 
  • அவசர கால பணிகள் மற்றும் ராணுவம் தொடர்பான பணிகளின்போது பயன்படுத்துவதற்காக, பிரமாண்ட ரெடிமேட் பாலம் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 
  • டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 46 மீட்டர், அதாவது, 150 அடி நீளமுள்ள ரெடிமேட் பாலத்தை வடிவமைத்துள்ளது. 
  • இதை தயாரிக்கும் ஒப்பந்தம், 'எல் அண்டி டி' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மொத்தம், 2,585 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, 41 செட் பாலங்களை அந்த நிறுவனம் தயாரிக்கும்.

களஞ்சியம் செயலி (Kalanjiyam)
  • தமிழ்நாடு நிதித்துறையானது களஞ்சியம் செயலி (Kalanjiyam) என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  • இச்செயலியானது தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் பே சிலிப் வரையிலான பணிப் பலன்களை எளிதாக்குகிறது.
  • இணையதளம்: www.karuvoolam.tn.gov.in/ta/
  • PLAY STORE LINK களஞ்சியம் செயலி (Kalanjiyam) Apk

நாட்டுக்காக எனது முதல் வாக்கு:
  • நாட்டில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையமானது நாட்டுக்காக எனது முதல் வாக்கு என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
  • முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் – 1.85 கோடி

விலங்கு மீட்பு மையம்:
  • குஜராத்தின் ஜாம் நகரில் உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை ஆனந்த் அம்பானி திறந்து வைத்துள்ளார்.

(NATO) 32வது உறுப்பினராக ஸ்வீடன் இணைந்துள்ளது:
  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) 32வது உறுப்பினராக ஸ்வீடன் இணைந்துள்ளது.
  • NATO –  North Atlantic Treaty Organization – 04.04.1949
  • தலைமையகம் – பிரசெல்ஸ் பெல்ஜியம்

13வது உலக வர்த்தக அமைப்பு அமைச்சர்கள் மாநாடு:
  • 13வது உலக வர்த்தக அமைப்பு (WTO) அமைச்சர்கள் மாநாடானது அபுதாபியில் நடைபெற்றுள்ளது.
  • WTO – World Trade Organization – 1995
  • தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து

FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL:

பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம்

  • இந்திய இயற்பியலாளர் சர் சந்திரசேகர வெங்கட ராமன் ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. 
  • அவர் 28 பிப்ரவரி 1928 இல் ராமன் விளைவைக் கண்டுபிடித்தார், இந்த கண்டுபிடிப்புக்காக, 1930 இல் இயற்பியல் பாடத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
  • கருப்பொருள்: Indigenous Technologies for Vikist Bharat

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


இப்போது (2024) லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ------------------  நியமிக்கப்பட்டுள்ளாா்.?

A) ஏ.எம்.கான்வில்கா்
B) பினாகி சந்திர கோஷ்
C) பிரதீப் குமாா் மொஹந்தி
D) பதவி காலியாக உள்ளது

ANS :  A) ஏ.எம்.கான்வில்கா்

நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)