தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார். பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். இவர் எழுதிய "தேவதேவன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
தேவதேவன் ஆசிரியர் குறிப்பு
இயற்பெயர் = பிச்சுமணி கைவல்யம்
ஊர் = தூத்துக்குடி
தமிழக அரசு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, விளக்கு விருது பெற்றவர்
புனைப்பெயர் -தேவதேவன்
சிறப்புகள்
இவர் எழுதிய “தேவதேவன் கவிதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இவரின் முதல்கவிதைத் தொகுப்பு குளித்துக் கரையேறாத கோபியர்கள்.
தேவதேவனைப் பற்றி ஜெயமோகன் முழுமையான திறனாய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். நவீனத்துவத்திற்குப் பின் தமிழ்க் கவிதை-தேவதேவனை முன்வைத்து என்ற அந்நூல் கவிதா பதிப்பகத்தால் 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தமிழினி வெளியீடாக ஜெ.ப்ரான்ஸிஸ் கிருபா இயக்கத்தில் தேவதேவனைப்பற்றி யாதும் ஊரே யாதும் கேளிர் என்ற செய்திப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
தேவதேவன்-நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976)
- மின்னற்பொழுதே தூரம் (1981)
- மாற்றப்படாத வீடு (1984)
- பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
- நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம் (1991)
- சின்னஞ்சிறிய சோகம் (1992)
- நட்சத்திர மீன் (1994)
- அந்தரத்தில் ஓர் இருக்கை (1995)
- நார்சிசஸ் வனம் (1996)
- புல்வெளியில் ஒரு கல் (1998)
- விண்ணளவு பூமி (2000)
- விரும்பியதெல்லாம்... (2002)
- விடிந்தும் விடியாப் பொழுது (2003)
- விதையும் கனியுமான பாரம் (2005)
- நீல நிலாவெளி (2005)
- பறவைகள் காலூன்றிநிற்கும் பாறைகள் (2007)
- விண்வரையும் தூரிகைகள் (2007)
- மார்கழி (2008)
- இரவெல்லாம் விழித்திருந்த நிலா (2012)
- மெய்வழிச்சாலை (2012)
- பள்ளத்திலுள்ள வீடு (2013)
- பேர்யாழ் (2014)
- ஹே,மா! (அதிஉச்சம்) (2014)
- கண்விழித்தபோது (2016)
- நுனிக்கொம்பர் நாரைகள் (2016)
- அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது (2016)
- பக்கத்தில்தான் இருக்கிறது வீடு (2019)
- பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை(2020)
- மலர் தேடும் மலர் (2020)
- சித்தார்த்த ராத்திரி (2018)
- ஒளிரும் ஓவிய நிலா (அச்சில்)
- ஆகும் என்றெழுந்த ஆல் (அச்சில்)
- எல்லாம் ஒரு கணம் முன்புதான் (அச்சில்)
- ஆம்பல் குளம் (2018)
- புரியாது கழிந்த பொய்நாட்களெல்லாம்... (2018)
- ஏஞ்சல் (2019)
- அமுதநதி (2019)
- மகாநதி (2019)
- தன்னியல்பின் தாரகை (அச்சில்)
- யாம் பெற்ற இன்பம் (அச்சில்)
- மகாநதியில் மிதக்கும் தோணி (அச்சில்)
- அமுதவெளி (அச்சில்)
- மேகங்கள் நடமாடும் வானம் (அச்சில்)
- காயமும் தழும்பும் (அச்சில்)
- காற்றினிலே வரும் கீதம் (அச்சில்)
- காணுங்கால் (அச்சில்)
- விண்ணளவாய் விரியும் வட்டம் (அச்சில்)
- பார்த்து நட (அச்சில்)
- ஈரம் மட்டுமே எங்கும் உள்ளது (அச்சில்)
- இலைகள் கூடி இசைக்கும் காற்று (அச்சில்)
- உலகடங்கு (காவியம்) (அச்சில்)
- நீர்குடத்தின் அலமறல்கள் (அச்சில்)
- எதுவாகவும் இல்லாதது (அச்சில்)
- அந்தி இருள் (அச்சில்)
- கடவுளின் ராஜ்ஜியம் (அச்சில்)
- பரிதி துடைக்கும் பனித்திரை (அச்சில்)
- வெண்கொக்கும் ஆம்பல் மலர்களும் (அச்சில்)
- சூரியகாந்தி வயல் (அச்சில்)
- உதிராத மத்தாப்புகள் கோடி (2021)
- மழைக்காற்றில் ஆடும் மலர்கள்
- நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள்
- பாடல் விழையும் மோன இசை
- ஒளியில் உயிர்த்த விழிகள்
- தனிப்பெருங்கருணை
- கண்கள்மட்டுமே தொடும்வானம்
- அருட்பெருஞ்சோதி
- பிறிதொரு பசி
- வெயில்மலர்க் குளிர்தல்ம்
- வானப் பெருவெளி
- பார்வை நடத்தும் பாதை
- தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பு (முதல் 15 நூல்கள், தமிழினி பதிப்பகம்)
- தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பு 1,2 (தன்னறம் வெளியீடு, 2022)
- தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பு (முதல் 16 நூல்கள் தொகுப்பாக, வம்சி பதிப்பகம், 2022)
- அலிபாபாவும் மோர்ஜியானாவும் (பிச்சுமணி கைவல்யம் சொந்த முயற்சியில் பதிப்பித்தது, 1999)
- கவிதை பற்றி (காஞ்சனை பிரசுரம்)