மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் :
- தேசிய மருத்துவ கவுன்சில்(என்எம்சி) வழங்கிய தகவலின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மாநில மருத்துவ கவுன்சில்கள் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் 13,08,009 அலோபதி(ஆங்கில மருந்து முறை) மருத்துவா்கள் பதிவு செய்துள்ளனா்.
- பதிவுசெய்யப்பட்ட அலோபதி மருத்துவா்களில் 80 சதவிதம் மற்றும் 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவா்கள் உள்ளனா் என்று வைத்துக் கொண்டாலும், நாட்டில் மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் 1:834-ஆக உள்ளது.
- இது உலக சுகாதார மையத்தின் தரமான 1:1000 விகிதத்தைவிட சிறந்தது என்றும் மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா மக்களவையில் நாடாளுமன்றத்தில்தெரிவித்தாா்.
அபுதாபியில் முதல் ஹிந்து கோயில்:
- ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு பிப்ரவரி 13,14 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். மேலும் அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலையும் அவா் திறந்து வைக்க உள்ளாா். இதன் மூலம் கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமா் மோடி 7-ஆவது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
- அதிபா் ஜயத்தின் அழைப்பை ஏற்று துபையில் நடைபெறவுள்ள ‘உலக அரசாங்க மாநாடு 2024-இல்’ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா். ஜயத் விளையாட்டு நகரில் இந்திய குடிமக்கள் மத்தியிலும் அவா் உரையாற்றவுள்ளாா்
இலங்கை சார்பில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் :
- இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப்ரவரி 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை வீரர் பதும் நிசங்கா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய அவர் 210 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இலங்கை சார்பில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
- இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 12 முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 12 இரட்டை சதங்களில் 7 முறை இந்திய வீரர்களே இரட்டை சதம் விளாசியுள்ளனர்.
சீன புத்தாண்டு தொடங்கியது.
- இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
- மிக முக்கிய விழாவாக சீனாவில் கருதப்படும் இந்த புத்தாண்டு விடுமுறை நாளில் சீன மக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களோடு இணைந்து கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
- சீன நம்பிக்கையின் அடிப்படையில் 12 விலங்குகள்- ஆண்டுகளின் பெயராக ஒவ்வொரு ஆண்டும் மாறும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு டிராகன் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
- சீன மக்கள் இந்தாண்டில் குழந்தைகளைப் பெற்றுகொள்ள விரும்புவர். டிராகன் போலவே பலம், ஆற்றல் மற்றும் வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.
- சீன கலாச்சாரத்தில் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிறத்தில் மக்கள் ஆடைகளை அணிவர். குழந்தைகள் பெரியவர்களிடமிருந்து அன்பளிப்புகளை சிவப்பு நிற உறையில் பெறுவர்.
- இது குளிர்காலத்தின் முடிவைக் குறிக்கும் ' வசந்த விழா ' என்றும் அழைக்கப்படுகிறது .
- சீனாவின் வசந்த கால தொடக்க நாளான புத்தாண்டு, சீனாவில் மட்டுமல்லாமல் ஹாங்காங், தென்கொரியா, வியட்நாம், மியான்மர், மலேஷியா மற்றும் இந்திய தர்மாசாலாவில் உள்ள திபெத் துறவிகள் வரை கொண்டாடப்படும்.
கல்விக் கடனுக்கான உச்சவரம்பு:
- கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் உயர்கல்விப் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.1 லட்சம் வரை பிணையம் இன்றி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் அளிக்கப்படும் கடனுக்குப் பிணையம் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாரத ரத்னா விருது-எண்ணிக்கை 53-ஆக உயா்ந்துள்ளது
- நிகழாண்டில் ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பதன் மூலம் பாரத ரத்னா விருதாளா்களின் எண்ணிக்கை 53-ஆக உயா்ந்துள்ளது.
- பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்கூா், பாஜக முதுபெரும் தலைவா் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமா்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய 5 பேருக்கு நிகழாண்டில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா ஓராண்டில் 5 பேருக்கு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த 1999-ஆம் ஆண்டில் 4 பேருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.
- 2020 முதல் 2023 வரை யாருக்கும் விருது அறிவிக்கப்படாத நிலையில், நடப்பாண்டில் இதுவரை 5 பேருக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
- கடந்த 1954-ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்ட பாரத ரத்னா விருது, மக்கள் மேம்பாட்டுக்காக எந்தத் துறையிலும் அளப்பரிய சேவை அல்லது திறன்மிக்க செயல்பாட்டை நல்குவோரை அங்கீகரிப்பதாகும். இதற்கான பரிந்துரைகள் பிரதமரால் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படுகின்றன.
- முதல் விருது: கடந்த 1954-ஆம் ஆண்டில் முதல் முறையாக பாரத ரத்னா விருது மூதறிஞா் ராஜாஜி, சா்வபள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
முக்கியமான நாட்கள்:
பிப்ரவரி 10 - தேசிய குடற்புழு நீக்க நாள்
- இது பிப்ரவரி 10 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்முயற்சியின் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் புழுக்கள் இல்லாததாக மாற்ற வேண்டும்.
- கருப்பொருள்: Eliminate STH: Invest in a healthier future for children.
பிப்ரவரி 10 - உலக பருப்பு தினம்
- நிலையான உணவு உற்பத்தியின் ஒரு பகுதியாக பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக பிப்ரவரி 10 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- கருப்பொருள்: Pulses: Nourishing Soils and People.
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
தேசிய மருத்துவ கவுன்சில்(என்எம்சி) வழங்கிய தகவலின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி,நாட்டில் மருத்துவா்-மக்கள் தொகை விகிதம் ----------ஆக உள்ளது ?
A) 1:834
B) 1:934
C) 1:634
D) 1:534
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: