FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 13.02.24

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL 13.02.24
CURRENT AFFAIRS IN TAMIL 13.02.24


டெல்லி சலோ பேரணி

  • மத்திய அமைச்சர்களுடன் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி  13.02.24 தொடங்கியது.
  • டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதால் மார்ச் 12 வரை டெல்லி எல்லையில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் 13.02.24 டெல்லி நோக்கி அணிவகுத்துச் செல்ல அழைப்பு விடுத்துள்ளனர். 
  • இந்நிலையில், உத்தரபிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • மூன்று மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜியின் ராஜினாமா-ஆளுநர் ஒப்புதல்:

  • செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 
  • சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி, 243 நாட்களாக நீதிமன்ற காவலில் இருந்துகொண்டு இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். 
  • இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை 12.02.2024 ராஜினாமா செய்வதாக தெரிவித்து அதற்கான கடிதத்தை தமிழக முதல்வரிடம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. 
  • இந்தநிலையில்தான் இந்த ராஜினாமாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்

ஏடிபி தரவரிசை-இந்தியாவின் சுமித் நாகல்:

  • சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற ஏடிபி சாலஞ்சர் சென்னை ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் இத்தாலியின் லூகா நார்டியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 
  • இதன் மூலம் ஏடிபி தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 98-வது இடத்தை பிடித்துள்ளார்.
  • கடந்த மாதம், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சுமித் நாகல் உலக தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்கை தோற்கடித்திருந்தார். இதன் மூலம் 35 ஆண்டுகளில் கிராண்ட் ஸ்லாம் தொடரில் போட்டித் தரவரிசையில் உள்ள வீரரை தோற்கடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

அமெரிக்க நாட்டின் குடியுரிமை:2023

  • 2023-ம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் குடியுரிமையை 59,100 இந்தியர்கள் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2023-ம் ஆண்டில் அமெரிக்கநாடானது, 8.7 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க குடியுரிமையை வழங்கியுள்ளது. இதில் 59,100 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களாகும்.
  • இதையடுத்து கடந்த ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றவெளிநாட்டவர்களின் பங்கில் இந்தியர்களின் பங்கு 6.7 சதவீதம் ஆகும். கடந்த 2022-ம் ஆண்டு 9.69 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘ஹுக்கா பார்லர்’களுக்கு  தடை:

  • தெலங்கானா முழுவதும் ‘ஹுக்கா பார்லர்’களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது
  • இதனை பேரவை எந்தவித விவாதங்களும் நடத்தாமலேயே ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. அப்போது அமைச்சர் டி.ஸ்ரீதர்ரெட்டி பேசுகையில், ‘‘ஹுக்கா பிடிப்பது சிகரெட்டை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தெலங்கானாவில் ஹுக்காபார்லர்கள் ஏராளமாக முளைத்துள்ளன. இதனால் இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் ஹுக்காவுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த புகையை, பழக்கமே இல்லாதவர்கள் சுவாசிக்கும்போது அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் புற்றுநோய் போன்றவை விரைவாக பரவும் அபாயமும் உள்ளதால் மாநிலம் முழுவதும் ஹுக்கா பார்லர்களை தடை செய்கிறோம்’’ என்றார்.

12-வது வேலைவாய்ப்பு திருவிழா (ரோஜ்கார் மேளா) 2024 :

  • நாடு முழுவதும் 12-வது வேலைவாய்ப்பு திருவிழா (ரோஜ்கார் மேளா) 12.02.24 நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
  • ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ்காவல் படை மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில், 191 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் எ. நாராயணசாமி வழங்கினார்.

முத்தரப்பு ஒப்பந்தம்

  • மின்வாரியம் 2 நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தத்தில் 22 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன.
  • கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியம் மின்உற்பத்தி மற்றும்மின்பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என 2 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. மின்வாரியத்தில் 90 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். மின்வாரியம் தனி, தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்டஅனைத்தும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

‘ஹுக்கா பார்லர்’களுக்கு எந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.?

A)  தெலங்கானா
B)  பாண்டிச்சேரி
C) குஜராத்
D) தமிழ்நாடு

ANS :  A)  தெலங்கானா


பிப்ரவரி 13 - 2024 இல் முக்கியமான நாட்கள்:

சரோஜினி நாயுடு பிறந்த நாள் 

  • பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தியாவின் நைட்டிங்கேல் அதாவது சரோஜினி நாயுடுவின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. 
  • அவர் 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதராபாத்தில் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான அகோர்நாத் சட்டோபாத்யாயா மற்றும் பரதா சுந்தரி தேவிக்கு மகனாகப் பிறந்தார். 
  • அவர் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவராகவும், தற்போது உத்தரபிரதேசம் என்று அழைக்கப்படும் ஐக்கிய மாகாணத்தின் ஆளுநராக உள்ள இந்திய மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகவும் இருந்தார்.

நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)