FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 06.02.24

TNPSC PAYILAGAM
By -
0


தமிழ்நாடு அரசின் சார்பில் 2024 பிப்ரவரி 8, 9 & 10 ஆகிய நாள்களில் பன்னாட்டுக் கணித்தமிழ்24 மாநாடு:

  1. தமிழ்நாடு அரசின் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 'தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு' நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக்கழகம் பன்னாட்டுக் கணித்தமிழ்24 மாநாட்டை ஒருங்கிணைக்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
  2. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளை அடைவதற்காகப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு பிப்ரவரி 8,9&10 ஆகிய நாள்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது.
  3. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் 1999-இல் 'தமிழிணையம் 99' மாநாடு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசு இந்த மாநாட்டை முன்னெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

31 எம்க்யூ-9பி ஆயுதம் தாங்கிய ட்ரோன்

  1. இந்தியாவுக்கு 31 எம்க்யூ-9பி ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) விற்பனை செய்ய அமெரிக்கா  ஒப்புதல் அளித்தது. 
  2. அதிக உயரத்தில் நீடித்து உழைக்கும் இந்த ட்ரோன்கள், வானில் 35 மணி நேரத்துக்கும் மேலாக பறக்கக் கூடியவை. அந்த ட்ரோன்களால் 4 ஹெல்ஃபையா் வகை ஏவுகணைகள், சுமாா் 450 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். நீா்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக போா் புரிதல், கடல் பரப்பில் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளை எம்க்யூ-9பி ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் மேற்கொள்ளும். 
  3. இந்நிலையில், அந்த ட்ரோன்களின் மதிப்பு 3.99 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.33,000 கோடி) என்று அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் 2023இல் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது. அமெரிக்காவிடமிருந்து இந்த நவீன ட்ரோன்களை கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பு வெளியானது.

எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம்

  1. எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார்.

விக்சித் பாரத் விக்சித் கோவா 2047:

  1. பிப்ரவரி 6, 2024 அன்று, பிரதமர் மோடி கோவாவுக்குச் செல்கிறார், பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார், விக்சித் பாரத் விக்சித் கோவா 2047 திட்டத்தில் பங்கேற்கிறார் மற்றும் இந்தியா எரிசக்தி வாரம் 2024 மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் நிரந்தர வளாகத்தைத் திறந்து வைக்கிறார்
  2. கோவாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பிரதமர் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்
  3. கோவா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிதாகக் கட்டப்பட்ட வளாகத்தில் டுடோரியல் வளாகம், துறை வளாகம், கருத்தரங்கு வளாகம், நிர்வாக வளாகம், விடுதிகள், சுகாதார மையம், பணியாளர் குடியிருப்புகள், வசதி மையம், விளையாட்டு மைதானம் மற்றும் நிறுவனத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிற பயன்பாடுகள் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.
  4. தேசிய நீர் விளையாட்டு நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கான நீர் விளையாட்டுகள் மற்றும் நீர் மீட்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 28 தனிப்பயனாக்கப்பட்ட படிப்புகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும். தெற்கு கோவாவில் 100 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை வசதியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது நாளொன்றுக்கு 60 டன் ஈரமான கழிவுகள் மற்றும் 40 டன் உலர் கழிவுகளை விஞ்ஞான முறையில் சுத்திகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உபரி மின்சாரத்தை உருவாக்கும் 500 கிலோவாட் சூரிய மின் நிலையத்தையும் கொண்டுள்ளது.
  5. பனாஜி மற்றும் ரெய்ஸ் மாகோஸை இணைக்கும் சுற்றுலா நடவடிக்கைகளுடன் பயணிகள் ரோப்வே திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தெற்கு கோவாவில் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.
  6. மேலும், வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1930 அரசு பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அவர் விநியோகிப்பார். பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களையும் அவர் வழங்குவார்.

இந்தியா எரிசக்தி வாரம் 2024:

  1. இந்தியா எரிசக்தி வாரம் 2024, பிப்ரவரி 6 முதல் 9 வரை கோவாவில் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த எரிசக்தி மதிப்புச் சங்கிலியை ஒன்றிணைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எரிசக்திக் கண்காட்சி மற்றும் மாநாடாக இது இருக்கும். இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகளுக்கு ஓர் ஊக்கியாக இது செயல்படும். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் வட்டமேசை ஆலோசனை நடத்துகிறார்.
  2. புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து மேம்படுத்துதல், அவற்றை எரிசக்தி மதிப்புச் சங்கிலியில் ஒருங்கிணைத்தல் ஆகியவை 2024-ம் ஆண்டின் இந்திய எரிசக்தி வாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 17 எரிசக்தித்துறை அமைச்சர்கள், 35,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 900 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளின் பிரத்யேக அரங்குகள் இதில் இடம்பெறும். 
  3. எரிசக்தித் துறையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முன்னெடுத்துச் செல்லும் புதுமையான தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதற்காக சிறப்பு ‘மேக் இன் இந்தியா’ அரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது:

  1. உச்சநீதிமன்றத்தில் மட்டும் ஜனவரி மாத நிலவரப்படி, 80,221 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகள் நிலவரப்படி நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 
  2. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 59,859 வழக்குகள் நிலுவையில் இருந்தது. 
  3. கடந்த மாதம் மட்டும் 1,966 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2,420 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 
  4. பொது விடுமுறையை தவிர்த்து 20 நாள்களில் நாளொன்றுக்கு 121 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 
  5. மேலும், நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 62 லட்சம் வழக்குகளும், மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 4.47 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. 
  6. இதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1.10 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

11.48 கோடி பான் காா்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது:

  1. மக்களவையில் பான்-ஆதாா் இணைப்பு தொடா்பான கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது: 
  2. 2023 ஜூன் 30-ஆம் தேதிக்குப் பிறகு பான்-ஆதாா் இணைப்பவா்களுக்கு தாமதக் கட்டணம் ரூ.1,000 விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 
  3. அந்த வகையில், 2023 ஜூலை 1 முதல் 2024 ஜனவரி 31 வரை ரூ.601.97 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
  4. 11.48 கோடி பான் காா்டுகள் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளன என்று கூறியுள்ளாா். 
  5. ஆதாருடன் இணைக்கப்படாத பான் காா்டுகள் 2023, ஜூலை 1 முதல் செயல்படாதவையாக அறிவிக்கப்படும். அதன்மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால் வரிப்பிடித்தம் திருப்ப அளிக்கப்படமாட்டாது. அதிகபட்ச அளவில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்று வருமான வரித் துறையும் ஏற்கெனவே அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

2023-24 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.66,745 கோடி கடனுதவி: நிதி அமைச்சகம்

  1. மாநிலங்களின் மூலதன செலவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு மூலதன முதலீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2023-24-ஆம் நிதியாண்டில் மொத்தமாக ரூ.1.3 லட்சம் கோடி மாநிலங்களுக்கு கடனுதவியாக வழங்கப்படுகிறது. 50 ஆண்டுகள் வரை கடனுக்கான வட்டியை மாநிலங்கள் செலுத்த தேவையில்லை
  2. அந்த வகையில் 2023, ஏப்ரல் 1 முதல் 2024, பிப்ரவரி 1 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் உள்ள 28 மாநிலங்களுக்கு ரூ.66,745 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022-23-ஆம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.81,195.35 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி 6: பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation (FGM) ):

பிறப்புறுப்பு சிதைவினால் பெண்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிப்ரவரி 6 ஆம் தேதி சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ய சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது. 

2024 ஆம் ஆண்டிற்கான தீம் “அவரது குரல். அவளது எதிர்காலம்,”(“Her Voice. Her Future,”) நீடித்த மாற்றத்தை அடைவதில் சமூகம் தலைமையிலான முயற்சிகள் வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது 

பிப்ரவரி 6 - பாதுகாப்பான இணைய நாள் Safer Internet Day

பாதுகாப்பான மற்றும் நேர்மறையான ஆன்லைன் சூழலை வளர்க்கும் முயற்சியில், பாதுகாப்பான இணைய தினம் பிப்ரவரி 6 அன்று அனுசரிக்கப்படுகிறது.

முக்கியமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இணையத்தை பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக மாற்ற அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்த நாள் அழைப்பு விடுக்கிறது.

2024க்கான தீம் 'ஒரு சிறந்த இணையத்திற்காக ஒன்றாக' ('Together for a Better Internet',)ஆகும். டிஜிட்டல் யுகத்தில் பாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது



CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி:2024

இந்தியா எரிசக்தி வாரம் 2024, பிப்ரவரி ---- முதல் ---- வரை கோவாவில் நடைபெறுகிறது ?

A) பிப்ரவரி 8 முதல் 9 வரை
B) பிப்ரவரி 7 முதல் 10 வரை
C) பிப்ரவரி 10 முதல் 19 வரை
D) பிப்ரவரி 6 முதல் 9 வரை

ANS :  D) பிப்ரவரி 6 முதல் 9 வரை

 

நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024



Post a Comment

0Comments

Post a Comment (0)