விசா இல்லாமல் ஈரான் பயணிக்க, அந்நாட்டு அரசு, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு நான்கு முக்கிய விதிமுறைகளை மட்டும் அறிவித்துள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்க ஈரான் அரசு முடிவெடுத்துள்ளது. இது பிப்ரவரி 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது. ஈரானும் இந்தியா மட்டுமல்லாமல் ரஷியா, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 33 நாடுகளுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளது.
விசா இல்லாமல் ஈரான் பயணிக்க, அந்நாட்டு அரசு, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு நான்கு முக்கிய விதிமுறைகளை மட்டும் அறிவித்துள்ளது.
- அதில், இந்தியர்கள், சாதாரண பாஸ்போர்ட் வைத்திருந்தால் அவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை 15 நாள்கள் ஈரானுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். ஒருபோதும் 15 நாள்களுக்கு மேல் ஒரு நாள் கூட நீட்டிக்கப்படாது.
- சுற்றுலா வருவதற்கு மட்டுமே இந்த விசா சலுகையை இந்தியர்கள் பயன்படுத்த முடியும். பயன்படுத்த வேண்டும்.
- ஒருவேளை ஆறு மாதத்துக்குள் மீண்டும் வர வேண்டும் என்றாலோ, 15 நாள்களுக்கு மேல் தங்க வேண்டும் என்றாலோ, வருவதற்கான காரணங்கள் வேறாக இருந்தாலும் கண்டிப்பாக விசா பெற்றுத்தான் வர வேண்டும்.
- விமானம் வழியாக இந்தியாவிலிருந்து ஈரானுக்கு வரும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த விசா இல்லாமல் வருகை தரும் வசதி பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இந்தியர்களுக்கு விசா இல்லாமல் அனுமதிக்கும் நாடாக ஈரான் சேர்ந்துள்ளது. ஏற்கனவே, தாய்லாந்து, வியட்நாம், இலங்கை போன்ற நாடுகள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசை:
- ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. இதற்கு முன்பாக பும்ராவின் அதிகபட்ச ஐசிசி தரவரிசை 3வது இடம். தற்போது அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசி 9 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இதன்மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒரு இந்திய வேகப் பந்து வீச்சாளர் டெஸ்ட்டில் முதலிடம் பிடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து வடிவிலான கிரிக்கெடிலும் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கபில்தேவ் டெஸ்டில் டிச.1979- பிப்.1980 வரை 2ஆம் இடம் பிடித்துள்ளார். ஜாகீர் கான் 3வது இடம் பிடித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம்-‘ரூ.3,440 கோடி ஒப்பந்தம் கையொப்பம்’
- ஸ்பெயின் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 10 நாள்கள் சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 27-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
- அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர்களுடன் ஆலோசனை செய்தார். ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தமிழர்களுடனும் கலந்துரையாடினார். இந்த பயணத்தின் போது
- ‘ஹபக் லாய்டு’ நிறுவனம் ரூ. 2,500 கோடியில் சரக்கு முனையங்கள் அமைக்கவும்,
- எடிபன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.540 கோடி முதலீடு செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- ஸ்பெயின் நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 07/02/2024 காலை சென்னை திரும்பினார்.
ஒடிசா உயர்நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதி
- ஒடிசா உயர்நீதிமன்றத்தின் 33-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சக்ரதாரி சரண் சிங் பதவியேற்றார். ஒடிசா உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- ஜனவரி 20, 1963ல் பிறந்த நீதிபதி சிங், தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் முடித்து 1990ல் வழக்குரைஞராகப் பதிவு செய்யப்பட்டார். 1998ல் மத்திய அரசில் கூடுதல் நிலை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அவர், 2001 வரை தொடர்ந்தார். சிங் பிகாரில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார். மேலும், 2012ல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வரை தொடர்ந்தார்.
பொது சிவில் சட்ட (Uniform Civil Code bill) மசோதா-முதல் மாநிலம்
- நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
- உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உரைக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகண்ட் திகழ்கிறது.
- உத்தரகண்டில் கடந்த 2022 பேரவைத் தோ்தலில், ‘மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. தோ்தலில் வென்று பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதும், பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்: உத்தரகண்ட் சட்டப்பேரவை பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா
ஓபிசி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா:
- ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் ‘ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்பு சட்டத் திருத்த மசோதா - 2024’ அறிமுகப்படுத்தப்பட்டது
- கடந்த 2019, ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதோடு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறுகிறது.
‘அரசியலமைப்பு சட்ட பழங்குடியின (எஸ்.டி.) உத்தரவு திருத்த மசோதா 2024’ மற்றும் ‘அரசியலமைப்பு சட்ட எஸ்.சி., எஸ்.டி. உத்தரவு திருத்த மசோதா 2024’
- ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினா் (எஸ்.டி.) சமூகத்தினருக்கான பட்டியலில் மாற்றம் செய்ய வகை செய்யும் 2 மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- அவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய ஏதுவாக, விதி எண்.17-இன் கீழ் மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்கும் தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கொண்டுவந்தாா்.
- அதனைத் தொடா்ந்து, ‘அரசியலமைப்பு சட்ட பழங்குடியின (எஸ்.டி.) உத்தரவு திருத்த மசோதா 2024’ மற்றும் ‘அரசியலமைப்பு சட்ட எஸ்.சி., எஸ்.டி. உத்தரவு திருத்த மசோதா 2024’ ஆகிய மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா தாக்கல் செய்தாா். இந்த மசோதாக்கள்
- ஆந்திர மாநிலத்தில் எஸ்.டி. பட்டியலில் புதிதாக போண்டோ போா்ஜா, கோந்த் போா்ஜா, பரங்கிபெரிஜா சமூகத்தினரைச் சோ்க்கவும்,
- ஓடிஸாவில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பட்டியலில் புதிதாக 4 சமூகத்தினரைச் சோ்க்கவும் வகை செய்கின்றன.
- விவாதத்துக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் 2 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
நீா் மாசு தடுப்பு சட்டத் திருத்த மசோதா:
- நீா் மாசு தடுப்பு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
- நீா் மாசில் சிறு குற்றங்களில் ஈடுபடுவா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கவும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவா்கள் நியமனத்திலும், தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது, மறுப்பது போன்ற விவகாரங்களில் மத்திய அரசு வழிமுறைகளை வகுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
- நீா் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்-1974 இல் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீா் மாசு விவகாரங்களில் இந்த சட்டத் திருத்த மசோதா வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் என்று இந்த மசோதாவுக்கு பதிலளித்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.
பொதுத் தோ்வுகள் (முறையற்ற செயல்பாடுகளைத் தடுத்தல்) மசோதா, 2024-The Public Examinations (Prevention of Unfair Means) Bill, 2024
- அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
- எதிா்க்கட்சிகள் தெரிவித்த சில திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. திறமை வாய்ந்த மாணவா்களின் நம்பிக்கையை ‘பொதுத் தோ்வுகள் (முறையற்ற செயல்பாடுகளைத் தடுத்தல்) மசோதா, 2024’ உறுதி செய்யும் என்று மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
- மேலும், ‘திட்டமிட்ட குற்றங்கள் செய்பவா்களுக்காக சிறந்த மதிப்பெண் பெறும் மாணவா்களை தியாகம் செய்ய முடியாது. வேலை தேடும் மாணவா்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டாா்கள்’ என்று ஜிதேந்தர சிங் தெரிவித்தாா்.
KEY POINTS : ‘பொதுத் தோ்வுகள் (முறையற்ற செயல்பாடுகளைத் தடுத்தல்) மசோதா, 2024’
பிப்ரவரி 7 முதல் 14 பிப்ரவரி வரை - காதலர் வாரம்
பிப்ரவரி, காலண்டரில் காதல் மாதம். காதல் வயப்பட்டவர்கள் வரிசையாகப் பிரமாண்டமான சைகைகள் செய்வதால் வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரிகிறது. முக்கிய காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, கூடுதல் நிகழ்வுகள் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீடிக்கும்.
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL