காந்தியடிகளின் கடிதங்கள்-தமிழில் கடித இலக்கியம் –நாட்குறிப்பு

TNPSC PAYILAGAM
By -
0



பகுதி – (இ)

தமிழில் கடித இலக்கியம் –நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்

காந்தியடிகளின் கடிதங்கள்

  1. 1917-ம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தாய்மொழி வழிக்கல்வி பற்றிய தலைமை உரை மாணவர்களுக்கு ஏற்ற வண்ணம் கடித வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்ற முக்கியக் கருத்துக்கள்.
  2. “பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது அடித்தளமில்லாமல் கட்டடம் எழுப்புவது போன்றது.
  3. “ரவீந்தரநாத் தாகூரின் இலக்கிய நடையின் உயர்வு அவருடைய ஆங்கில அறிவால் மட்டுமின்றி தாய்மொழி மொழிப்புலமையினாலும் வந்ததே ஆகும். முன்சிராம் பேச்சாற்றலுக்குக் காரணம் அவர் தம் தாய் மொழி அறிவே; மதன் மோகன் மாளவியாவின் ஆங்கிலப் பேச்சு தங்கத்தைப் போல் ஒளி வீசுகிறது.
  4. “வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம். குறைபாடு மொழியைப் பயன்படுத்துபவர்களிடம் தான் இருக்கிறது. மொழியில் இல்லை.
  5. “படித்த இந்தியர் அனைவரும் அயல் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. இவ்வாறு அயல் மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ ஊக்கமளிப்பதோ தேவையில்லை.
  6. “இந்தியாவில் தாய் மொழிக்கல்வி அளிக்கப்பட்டு இருந்தால் ஜெகதீ சந்திர போஸ் பி.சி.ராய் போன்ற நம்மிடையே பல போஸ்களும் ராய்களும் தோன்றி இருப்பார்கள்.
  7. “பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரிந்தறியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பது இந்த இணக்கத்தைக் குறைத்து விடும்.
  8. காந்தியடிகள் தன் கடிதங்களைக் குஜராத்தி மொழியில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தினந்தோறும் தனிநபர்களுக்கு பத்திரிக்கைகளுக்கும் கடிதம் எழுதினார்.
  9. காந்தியடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் பகுதி – 1 வால்ஜி கோவிந்தஜி தேசாய் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு 1962ம் ஆண்டு வெளிவந்தது. ஆசிரம சகோதரிகள் ஆசிரமக் குழந்தைகள் பணியாட்கள் போன்றோருக்குப் பல தலைப்புகளில் கடிதம் எழுதினார்.
  10. "மதன் மோகன் மாளவியாவின் ஆங்கில பேச்சு வெள்ளியைப்போல் ஒளிவிட்டாலும், அவரது தாய் மொழிப் பேச்சு தங்கத்தை போல் ஒளிவீசுகின்றது” என்றவர்- காந்தியடிகள்.
  11. காந்தி படித்த நாடக நூல் சிரவண பிதுர்த்தி, பார்த்த நாடகம் அரிச்சந்திரன் நாடகம்.
  12. தீயவனை எதிர்க்காதே, அவனிடம் உள்ள தீமையை எதிர்த்து நில் - இயேசுவின் மலைச் சொற்பொழிவு.
  13. பகவத்கீதையை படித்து மன உறுதியை பெற்றவர் - காந்தியடிகள்.
  14. உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு எனும் நூலில் “இன்னா செய்தார்க்கும்" என்ற திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்தவர் -டால்ஸ்டாய்.
  15. சோவியத் அறிஞர் டால்ஸ்டாய் வழகாட்டுதலால் திருக்குறளின் மூலத்தை அறிய விரும்பி தமிழ் கற்றேன் என்றவர் - காந்தி.
  16. மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும் மட்டும் இருந்தால் போதாது. அதை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாக இருக்கவேண்டும்” - காந்தி.
  17. நேதாஜி போன்றோர் போர் முறையை கையாண்டுதான் விடுதலை பெற முடியும் என்ற போது காந்தி வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயை தீயால் அணைக்க முற்படுவது போன்றது என்றார் காந்தி.
  18. தமிழ்நாட்டு விவசாயிகளை பார்த்து காந்தி உடை அணிவதை மாற்றிக்கொண்டார்.
  19. கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றவர்- காந்தி.
  20. கோடான கோடி மக்கள் உண்ண கஞ்சியும், உடுக்க உடையும் இல்லாமல் இருக்கும்
  21. பொழுது இப்படி பகட்டான வாழ்க்கை வாழ்வது பாவமல்லவா - காந்தி.
  22. என்னை பொறுத்தவரை தேசபிமானமும், மனிதாபிமானமும் ஒன்றுதான் - காந்தி.
  23. குஜராத்தியனாக இருப்பதைக் காட்டிலும், இந்தியனாக இருப்பதைக் காட்டிலும் மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது - காந்தி.
  24. காந்தியடிகள் தமிழ்நாடு வந்தபோது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதை கண்டார். தாமும் அன்று முதல் மேலாடை அணிவதை நிறுத்திக்கொண்டார்.
  25. உலகோர் அனைவரும் குறிக்கோள் உடையவராக இருந்தால் உலகமே நல்ல சமுதாயமாகும் - காந்தி.
  26. தென் ஆப்பிரிக்காவில் இந்தியருக்கு எதிரான கறுப்பு சட்டங்களை மீறியதால்சிறையில் அடைக்கப்பட்டவர் - காந்தி.
  27. காந்தி சிறையில் தைத்த செருப்புகளை தன்னை சிறையில் அடைத்த ஆளுநர் ஸ்மட்ஸ் என்பவருக்கு வழங்கினார். அதற்காக ஸ்மட்ஸ் பைபிள் சார்ந்த இரண்டு நூல்களை காந்திக்கு பரிசாக கொடுத்தார்.
  28. காந்தி சிறையில் தைத்த செருப்புகளை பூஜை அறையில் வைத்தவர்- ஸ்மட்ஸ்.
  29. 30-01-1948 ல் காந்தி சுட்டுக்கொள்ளப்பட்டார்.
  30. உள்நாட்டு பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை
  31. இளைஞர்களுக்கே உரியது என்று காந்தி கூறினார்.
  32. காந்திபடத்தில் காந்தியாக நடித்தவர் அழைக்கப்படுபவர்- சண்முகம். பென் கிங்ஸ்லி. புதுவைகாந்தி என
  33. வாழும் காந்தி என அழைக்கப்படுபவர் - மாணிக்சர்க்கார் (திரிபுரா முதலமைச்சர்).
  34. காந்தியடிகளை அரை நிர்வாண பக்கிரி என்றவர் -வின்ஸ்டன்ட் சர்ச்சில்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)