நேரு கடிதங்கள்-தமிழில் கடித இலக்கியம் –நாட்குறிப்பு

TNPSC PAYILAGAM
By -
0

 


பகுதி – (இ)

தமிழில் கடித இலக்கியம் –நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்


 நேரு :

காலம் : 1889 – 1964

பெற்றோர் : மோதிலால் நேரு சொரூபராணி

பிறந்த இடம் : அலாகாபாத் ஆனந்தபவனில்

அரசியல் வாழ்க்கை:

1916 – 27 வயதில் காந்தியைச் சந்தித்தார்

1919 – அரசியலில் தீவிரமாக ஈடுபாடு

1964 – இறப்பு வரை அரசியல் வாழ்க்கை

1947 – 1964 – பிரதமர் பதவி (முதல் பிரதமர்)

எழுதிய புத்தகங்கள்:

1. சுயசரிதை

2. ஊரக வரலாற்றுக் காட்சிகள்

3. புதிய இந்தியாவைக் காணல்


நேரு கடிதங்கள்

நேரு 1930 முதல் 1933 வரை சிறையில் இருந்த போது தன் மகள் இந்திராவுக்கு உலக வரலாற்றை விவரித்து எழுதிய 176 கடிதங்கள் தொகுப்பட்டு ‘உலக வரலாறு’ என்ற பெயரில் தனிப் புத்தகமாக வெளிவந்துள்ளது.

நேரு தனக்கு உலகப் பிரபலங்கள் பலரும் எழுதிய 330 கடிதங்களையும் தான் பிறருக்கு எழுதிய 38 கடிதங்களையும் அவரே தொகுத்து 1958-ம் ஆண்டு வெளியிட்டார்.

நேரு இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள்

1922 முதல் 1964 வரை 42 ஆண்டுகள் தன் மகள் இந்திராவுக்கு நேரு கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.

நேரு வெளிநாடு சென்ற போதும் இந்தியாவில் இருந்த பொழுதும் மகளுக்குக் கடிதம் எழுதினார். சிறைச்சாலையில் அடைப்பட்ட பொழுதும் கூட. அவர் கடிதம் எழுதுவதை நிறுத்தவே இல்லை.

அல்மோரா சிறையில் எழுதிய கடிதம்:

  1. மேற்கு வங்காளத்தில் சாந்தி நிகேதன் என்னும் இடத்தில் தாகூரின் விசுவபாரதி கல்லூரியில் 1934ம் ஆண்டு இந்திராகாந்தி சேர்ந்தார்.
  2. அப்பொழுது உத்தராஞ்சல் மாநிலம் அலமோரா மாவட்டச் சிறைச் சாலையில் இருந்து நேரு 1935 பிப்ரவரி 22-ம் நாள் அன்று எழுதிய கடிதம் ஒன்றில் இந்திராவுக்கு புத்தக வாசிப்பு பற்றி பெரிதும் வலியுத்தியுள்ளார்.
  3. “நான் சிறையில் நலமாக இருக்கிறேன். கிருபளினி உதவியுடன் படிக்க வேண்டிய பாடங்களை நீ முடிவு செய்துவிட்டாய் போலும் மகிழ்ச்சி இப்படிப் பேராசிரியர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. வகுப்பில் அமர்ந்து பாடங்களைக் கேட்பதை விட அது நல்லது.”
  4. “நீ வாசிப்பதற்கு அவ்வப்போது நான் புத்தகங்கள் அனுப்பலாமா என்று கேட்டிருந்தேன். நீயும் அனுப்பச் சொல்லி எழுதி இருக்கிறாய். இப்போது எனக்கு ஒரு திகைப்பு. உனக்கு எப்படிப்பட்ட புத்தகங்களை அனுப்புவது?”
  5. “உன் ஈடுபாடு தெரிந்தபின் என்ன புத்தகம் வாசிக்கலாம் என்பது குறித்து உனக்கு எழுதுவேன். உன்மீது புத்தகங்களைத் திணிக்க நான் விரும்ப மாட்டேன்.
  6. இவ்வாறெல்லாம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரு இக்கடிதத்தில் புத்தகங்களைப் பற்றி பொதுவாகக் குறிப்பிட்டுள்ள சில தகவல்கள் பின்வருமாறு.
  7. சேக்ஸ்பியர் மில்டன் போன்றோர் எவ்வளவு அற்புதமான ஆங்கில படைப்பாளிகள்.
  8. பிளேட்டோவின் புத்தகங்கள் சுவையானவை; சிந்தனையைத் தூண்டுபவை பிளேட்டோ கிரேக்க சிந்தனையாளர்
  9. பிளேட்டோவின் ‘குடியரசு’ கிரேக்க நாடகங்கள் நூல்கள் எனப் படிக்க வேண்டிய நூல்களைக் கூறுகின்றார்.
  10. இந்திராகாந்தி படிக்கப்போவதாகக் கூறிய டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” என்ற நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார்.
  11. பேட்ரண்ட்ரஸ்ஸலின் ஆங்கில நடையும் கருத்து வளமும்தனக்குப் பிடித்தமானவை என்கிறார்.
  12. காளிதாசரின் சாகுந்தலம் நாடகம் வாசிக்க வேண்டிய நூல் என்கிறார்.
  13. பெர்னார்ட்வின் பல நாடக நூல்கள் வாசிக்கத் தகுந்தவை என்கிறார்.

• கேம்பிரிட்ஜ் – இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம்
• சேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
• மில்டன் – ஆங்கிலக் கவிஞர்
• பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
• காளிதாசன் – வடமொழி நாடக ஆசிரியர்
• டால்ஸ்டாய் – ரயநாட்டு எழுத்தாளர்
• பெர்னார்ட் – ஆங்கில நாடக ஆசிரியர்
• பெட்ரண்ட் ரஸ்ஸல் – சிந்தனையாளர் கல்வியாளர்
• அல்மோரா சிறை – உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது
• கிருபாளினி – விசுவபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்


நைனி சென்ரல் ஜெயிலிலிருந்து கடிதம்

  1. 1930 அக்டோபர் 26 அன்று நைனி சென்ரல் ஜெயிலிருந்து நேரு தன் மகள் இரந்திராவுக்கு பிறந்த நாள் கடிதம் எழுதுகிறார்.
  2. நேரு தாம் உபதேசம் பண்ணும் போதெல்லாம் சீனப்பயணி யுவான்சுவாங் கதைதான் நினைவுக்கு வருகிறது என்கிறார்.
  3. கல்வி மேம்பாட்டை உணர்ந்த மேலோர் யுவான் சுவாங்கிற்கு ‘பௌத்த மதாச்சாரியார்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர் என்று கூறுகிறார்.
  4. நேரு எழுதிய கடிதத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர்
  5. முன்னாள் மத்திய அமைச்சர் திரு ழு.ஏ. அழகேசன்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)