சாலை இளந்திரையன் (6 செப்டம்பர் 1930 – 4 அக்டோபர் 1998) தமிழ்ப் பேராசிரியர்; திறனாய்வாளர்; சொற்பொழிவாளர்; கவிஞர்; எழுத்தாளார்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்.
சாலை இளந்திரையனின் இயற்பெயர் வ. இரா. மகாலிங்கம் ஆகும். இவர் திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் சிற்றூரில் 1930 செப்டம்பர் 6 அன்று வ. இராமையா – அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரை இவர்தம் பாட்டி சொக்கன் எனச் செல்லப் பெயரிட்டு அழைப்பார்
சாலை இளந்திரையன் ஆசிரியர் குறிப்பு
- இயற்பெயர் = வ.இரா.மகாலிங்கம்
- ஊர் = நெல்லை மாவட்டம்
- இவர் திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் சிற்றூரில் 1930 செப்டம்பர் 6 அன்று வ. இராமையா – அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
- இவரை இவர்தம் பாட்டி சொக்கன் எனச் செல்லப் பெயரிட்டு அழைப்பார்.
சிறப்பு பெயர்கள்
- எழுச்சிச் சான்றோர்
- திருப்புமுனை சிந்தனையாளர்
புனைப்பெயர்:
- இரா. இளந்திரையன் என்னும் பெயரில் 15.08.1950 பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்த கவிதை
- இரா. இளந்திரையன் என்னும் பெயரில் 01.09.1950 நாளிட்ட பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்த கதை
சாலை இளந்திரையன் குறிப்புகள்
- எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவியக்க மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, தமிழ் எழுச்சி மாநாடு ஆகிய மாநாடுகளை நடத்தியவர்
- உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அறிவியக்கப் பேரவை, டில்லித் தமிழ்ச் சங்கம், இளகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆகியவை தோன்ற காரணமாய் இருந்தவர்.
- தனிநாயகம் அடிகள் உள்ளிட்டோருடன் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவ உதவி புரிந்தார்.
- 1968 ஆம் ஆண்டில் இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்கச் சாலை இளந்திரையன் உந்துசக்தியாக இருந்தார்.
- 1980 ஆம் ஆண்டில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவத் தமிழக அரசு பேராசிரியர் முனைவர் வ. சுப. மாணிக்கம் தலைமையில் சாலை இளந்திரையன் உள்ளிட்ட எண்மரைக்கொண்ட வல்லுநர் குழு அமைத்தது.
- சாலை இளந்திரையன் கருத்துக்குப் பெரியாரையும், கவிதைக்குப பாவேந்தரையும் வழிகாட்டியாகக் கொண்டார்.
- 1991 ஆம் ஆண்டில் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் இவருக்குப் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.
சாலை இளந்திரையன் கவிதை நூல்கள்
- அன்னை நீ ஆட வேண்டும்
- சிலம்பின் சிறுநகை
- காலநதி தீரத்திலே
- பூத்தது மானுடம்
- கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
- எங்கள் காவியம்
- வீறுகள் ஆயிரம்
- நஞ்சருக்கு பஞ்சனையோ?
- உரைவீச்சு (தமிழக அரசின் பரிசு)
- நடை கொண்ட படைவேழம்
- ஏன் இந்த மெத்தனம்?
- தமிழ் தந்த பெண்கள்
கட்டுரைகள்
- உலகம் ஒரு குடும்பம்
- சிந்தனைக்கு
- புரட்சிக் கவிஞரின் கவிதை வளம் (திறனாய்வுக் கட்டுரை)
- தமிழ்க் கனிகள்
- தமிழில் சிறுகதை (திறனாய்வு)
- புதிய தமிழ்க் கவிதை (திறனாய்வு)
- சிறுகதை செல்வம் (திறனாய்வு)
- தமிழனே தலைமகன்
- Some Aspects of Modern Tamil Literature
- நோய்ப்பட்டு
- தமிழுக்காக
- புதுத்தமிழ் முன்னோடிகள்
- சமுதாய நோக்கு
- கூட்டின் அமைதி குலைகிறது
- வெற்றி மலர்கள்
- எழுச்சி வேண்டும்
- புதுத்தமிழ் முதல்வர்கள்
- நம்மை பற்றிய சிந்தனைகள்
- காலத்தின் கேள்விகள்
- திருந்திய திருமணம்
- தமிழ் மாநாடு
- தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரு இயக்கம்
- மக்கள் நாயக மரபுகள்
- உள்ளது உள்ளபடி
- காவல் துப்பாக்கி
- வெடிப்புகள் உடைப்புகள்
- பொறுத்தது போதாதா?
- ஏழாயிரம் எரிமலைகள்
- நாளுக்கு நல்லபடி
- தமிழுக்காக
- ஒராசிரியர் பள்ளிகள்
- புதிய கல்விக்கொள்கை
- கணீரென்று வாழுங்கள்
- தமிழின் ஒரே கவிஞன்
- தமிழ் தமிழன் தமிழ்நாடு
- கேள்விகள் ஆயிரம்
- புரட்சி முழக்கம் (தமிழக அரசின் பரிசு)
கடிதங்கள்
- களத்திலே கடிதங்கள் (எழுத்து சீர்திருத்தம் தொடர்பாக)
- இரண்டு குரல்கள்