புதுக் கவிதை -சிற்பி பாலசுப்ரமணியம் SIRPY -TNPSC TAMIL NOTES

TNPSC PAYILAGAM
By -
0



சிற்பி பாலசுப்ரமணியம்

இயற்பெயர் = நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி

ஊர் = பொள்ளாச்சி

பெற்றோர் = பொன்னுசாமி கவுண்டர், கண்டியம்மாள்


  • இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்
  • சிற்பி பாலசுப்ரமணியம் கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்
  • “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.
  • இரு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
  • ஒன்று “ஒரு கிராமத்து நதி” (2003) என்ற கவிதை நூலிற்காகவும், மொழிபெயர்ப்புக்காக (2001) ஒரு முறை என இரு முறை விருதினை பெற்றுள்ளார்
  • தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.
  • கவிஞர்கோ எனும் பட்டம் குன்றக்குடி அடிகளார் அவர்களால் வழங்கப்பட்டது 
  • சிற்பி பாலசுப்ரமணியம் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார்
  • தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்
  • இவர் வானம்பாடிக் கவிஞர் ஆவார்
  • நடப்பியல்பை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்
  • சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் கவிதை = ஆழ்கடலே கேள்
  • சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் கவிதை தொகுதி = நிலவுப்பூ

சிற்பி பாலசுப்ரமணியம் சிறப்பு பெயர்

  • சிற்பி (எழுத்துக்களைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்)
  • “வானம்பாடி” கவிதை அமைப்பின் தந்தை
  • கவிஞர்கோ

பணிகள்

1989-1997 தமிழியல் துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641046

1958-1989 விரிவுரையாளர் - பேராசிரியர் - தமிழ்த்துறைத் தலைவர், நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி - 642001


சிற்பி பாலசுப்ரமணியம் நூல்கள்

சிற்பி பாலசுப்ரமணியம் கவிதை நூல்கள்

  • சிரித்த முத்துக்கள்
  • ஆழ்கடலே கேள் (முதல் கவிதை)
  • நிலவுப்பூ (முதல் கவிதை தொகுதி)
  • ஒளிப்பறவை
  • சூரிய நிழல்
  • ஆதிரை(கவிதை நாடகம்)
  • சர்ப்பயாகம்
  • புன்னகை பூக்கும் பூனைகள்
  • மௌனமயக்கங்கள்(தமிழக அரசு பரிசு)
  • இறகு
  • ஒரு கிராமத்து நதி(சாகித்ய அகாடமி விருது)
  • ரோஷம்
  • அத்திமரம்
  • மாப்பிள்ளை கவுண்டர்
  • பெல்ஜியம் கண்ணாடி
  • ஓடு ஓடு சங்கிலி
  • பாடம் சொன்னவர்கள்
  • எல்லாம் விளையாட்டு
  • ஊமையன்
  • அம்மன் பண்டிகை
  • அரங்கேற்றம்
  • ஓ சகுந்தலா
  • சிற்பியின் கவிதை வானம் (திருப்பூர் தமிழ்சங்க விருது)
  • பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு விருது)
  • பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு
  • பாரதி : கைதி எண் : 253 (20.11.1918 முதல்  14.12.1918 முடிய 25 நாட்கள் பாரதியார் சிறைக்கூடத்தில் கைதி எண் 253 ஆக சிறையில் இருந்தார். பாரதி சிறையில் இருந்த காலத்தில் வாழ்க்கை நிகழ்வுகளைப் பாரதி சிந்திப்பது போல் அமைத்த கவிதையே இது)
  • மூடுபனி
  • சிற்பி : கவிதை பயணங்கள்
  • தேவயாணி
  • மகாத்மா
  • நீலக்குருவி
  • கவிதை வானம்

கவிதை நாடகம்

  • ஆதிரை

சிறுவர் நூல்கள்

  • சிற்பி தரும் ஆத்திச்சூடி
  • வண்ணப்பூக்கள்

சிற்பி பாலசுப்ரமணியம் உரைநடை நூல்கள்
  • இலக்கியச் சிந்தனை
  • மலையாளக் கவிதை
  • அலையும் சுவடும்
  • ஒரு கிராமத்து நதி
  • வண்ணப் பூக்கள்
  • இல்லறமே நல்லறம்
  • மின்னல் கீற்று
  • சிற்பியின் கட்டுரைகள்
  • படைப்பும் பார்வையும்
  • கவிதை நேரங்கள்
  • மகாகவி
  • நேற்றுப் பெய்த மழை
  • காற்று வரைந்த ஒவியம
  • புதிர் எதிர் காலம்
  • மனம் புகும் சொற்கள்
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
  • இராமாநுசர் வரலாறு 
  • ம.ப.பெரியசாமித் தூரன்
  • பாரத ரத்னம் சி.சுப்பிரமணியம் 
  • ஆர்.சண்முகசுந்தரம் 
  • சே.ப. நரசிம்மலு நாயுடு
  • மகாகவி பாரதியார்
  • நம்மாழ்வார் 
  • தொண்டில் கனிந்த தூரன்
மொழிபெயர்ப்பு கவிதை நூல்
  • சச்சிதானந்தன் கவிதைகள்
  • உஜ்ஜயினி
  • கவிதை மீண்டும் வரும்
  • காலத்தை உறங்க விடமாட்டேன்
  • கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்
மொழிபெயர்ப்பு புதினங்கள்
  • அக்கினி சாட்சி (சாகித்திய அகாதெமி விருது பெற்றது) (லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்ற நூலை மொழிப்பெயர்த்தார்)
  • ஒரு சங்கீதம் போல
  • வாரணாசி
பிற மொழிபெயர்ப்பு நூல்கள்
  • தேனீக்களும் மக்களும்
  • சாதனைகள் எப்போதும் சாத்தியந்தான்
  • வெள்ளிப்பனி மலையின் மீது
இலக்கிய வரலாறு நூல்
  • தமிழ் இலக்கிய வரலாறு – சிற்பி
ஆங்கில நூல்
  • A Comparative Study of Bharati and Vallathol
தொகுப்பு நூல்
  • நதிக்கரைச் சிற்பங்கள்
அறக்கட்டளை பொழிவு நூல்கள்
  • கம்பனில் மானுடம்
  • இருபதாம் நூற்றாண்டுத் தமிழக் கவிதை
  • பாரதிதாசனுக்குள் பாரதி

சிற்பி பாலசுப்ரமணியம் – விருதுகள்
  • மௌன மயக்கங்கள் – கவிதை நூல் – தமிழக அரசு விருது (1982)
  • பாவேந்தர் விருது – தமிழக அரசு (1991)
  • கபிலர் விருது – கவிஞர் கோ பட்டம் – குன்றக்குடி அடிகளா ர் (1992)
  • A Comparative study of Bharati and Vallathol
  • உ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு – தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994)
  • இந்துஸ்தான் லீவர் Know your India போட்டி முதல் பரிசு (1970)
  • பாஸ்கர சேதுபதி விருது – முருகாலயா – சென்னை (1995)
  • தமிழ் நெறிச் செம்மல் விருது – நன்னெறிக் கழகம் கோவை (1996)
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது – சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு – (1997)
  • கம்பன் கலை மணி விருது – கம்பன் அறநிலை , கோவை (1998)
  • சொல்கட்டுக் கவிஞர் விருது – திருவாரூர் இயல் தமிழ் பதிப்பகம் (1990)
  • தமிழ்ப் புலமைக்கான சென்னை கொங்கு நண்பர்கள் சங்க விருது (1997)
  • மூத்த எழுத்தாளருக்கான லில்லிதேவசிகாமணி விருது (1998)
  • ராணா விருது – ஈரோடு இலக்கியப் பேரவை (1998)
  • சிறந்த தமிழ்க் கவிஞர் விருது – கேரள பண்பாட்டு மையம் (1998)
  • இருபதாம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் விருது – DIYA (1998)
  • பாரதி இலக்கிய மாமணி விருது – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை 
  • ‘பூஜ்யங்களி ன் சங்கிலி’ – தமிழ்நா டு அரசு பரி சு (1998)
  • ‘The Pride of Pollachi’ விருது – பொள்ளாச்சி காஸ்மோ பாலிடன் கிளப் (1999)
  • ராஜாசர் அண்ணாமலைச்செட்டியார் பிறந்த நாள் பரிசு -மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000)
  • சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது – 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு – 2001)
  • சாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 – (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு – (2003))
  • பாரதி விருது – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (2002)
  • மகாகவி உள்ளூர் விருது – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003)
  • பணியில் மாண்பு விருது – ரோட்டரி சங்கம் (வடக்கு) கோவை (2003)
  • தலை சிறந்த பழைய மாணவர் விருது- ஜமால் முகமது கல்லூரி (2003)
  • பாரதிபாவாணர் விருது – மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004)
  • பாராட்டு விருது – அரிமா மாவட்டம்  கோ யம்புத்தூர் (2004)
  • தமிழ் வாகைச் செம்மல் விருது – சே லம் தமிழ்ச் சங்கம் (2005)
  • ராஜா சர் முத்தையா விருது (2009)
  • கவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006)
  • அரிமா சங்கம் பொள்ளாச்சி, பிரம்மகுரு விருது (2007)
  • வெற்றித் தமிழர் பேரவை விருது (2008)
  • தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது (2009)
  • ‘நல்லி’ திசை எட்டும் மொ ழியாக்க விருது (2010)
  • ச.மெய்யப்பன் அறக்கட்டளை – தமிழறிஞர் விருது (2010)
  • பாரதிய வித்யா பவன் கோவை , தமிழ்மா மணி விருது (2010)
  • கம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மா யில் விருது (2010)
  • பப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012)

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)