2. ஒளிச்செறிவுமானி
18. உணரப்படும் ஒளியின் திறன் – ஒளிபாயம் / ஒளித்திறன்.
19. ஒளிபாயம் (அ) ஒளித்திறனின் SI அலகு - லுமென்
20. ஒரு ஸ்ட்ரேடியன் திண்மக்கோணத்தில் ஒரு கேண்டிலா ஒளிச்செறிவுடைய ஒளியை ஒரு ஒளிமூலம் வெளியிடுமானால் அவ்வொளி மூலத்தின் திறன் 1 லுமென்.
21. இரு நேர் கோடுகள் (அ) இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் – தளக்கோணம்.
22. தளக் கோணத்தின் SI அலகு – ரேடியன்.
23. ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில் ஒன்று வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம் – ரேடியன்.
24. மூன்று (அ) அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்ளும் போது உருவாகும் கோணம்- திண்மக்கோணம்.
25. திண்மக் கோளத்தின் SI அலகு - ரேடியன்
26. ஒரு கோளத்தின் ஆரத்தின் இருமடிக்குச் சமமான புறப்பரப்பு கொண்ட சிறிய வட்டப்பகுதி ஒன்று மையத்தில் ஏற்படுத்தும் கோணம் – ஸ்ட்ரேடியன்.
27. எந்த ஆண்டு வரையில் தளக் கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகியவை துணை அளவுகள் என தனியாக வகைப்படுத்தப் பட்டிருந்தன – 1995.
28. தளக்கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகிய இரண்டும் வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆண்டு – 1995.
29. தளக்கோணம் எத்தனை பரிமாணங்களைக் கொண்டது- இருபரிமாணம்.
30. திண்மக் கோணம் எத்தனை பரிமாணங்களைக் கொண்டது – முப்பரிமாணம்.
31. காட்சியின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள் :
1. ஒப்புமைவகைக் கடிகாரங்கள்.
2. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்.
32. மின்னனு அலைவுகள் மூலம் இயங்கும் கடிகாரங்கள் - குவார்ட்ஸ் கடிகாரங்கள்.
33. படிகத்தின் அழுத்த மின்பண்பு என்ற தத்துவம் எந்த கடிகாரங்களில் பயன்படுகிறது- குவார்ட்ஸ் கடிகாரங்கள்.
34. அமெரிக்கா தேசிய தரநிர்ணய கழகத்தால் முதன் முதலில் அணுகடிகாரம் உருவாக்கப்பட்டது.
35. முதன் முதலில் அணுகடிகாரம் உருவாக்கப்பட்ட ஆண்டு-1949.
36. எந்த அணுவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் துல்லியமான அணுக்கடிகாரம் உருவாக்கப்பட்டது - சீசியம் -133.
37. சீசியம் -133 அணுக்கடிகாரம் யாரால் உருவாக்கப்பட்டது:
1. லூயிஸ் ஈசான்
2. ஜாக் பென்னி
38. சீசியம் -133 அணுவை பயன்படுத்தி துல்லியமான அணுக்கடிகாரம் உருவாக்கப்பட்ட ஆண்டு -1955. இடம் – இங்கிலாந்து - தேசிய இயற்பியல் ஆய்வகம்.
39. இராயல் வானியல் ஆய்வுமையம்ம் அமைந்துள்ள இடம் - இங்கிலாந்து-லண்டன்-கிரீன்விச்.
40. புவியானது, 15° இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது- 24 மண்டலங்கள்.
41. எந்த இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது - உத்திரப்பிரதேசம் – மிர்சாபூர். 82.5°கிழக்கில் செல்லும் தீர்க்கக்கோட்டில் அமைந்துள்ளது.
42. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளின் மதிப்புகளில் சில நிலையற்ற தன்மை காணப் படுவது – பிழைகள்.
43. சோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்புக்கும் உண்மையான மதிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு – பிழை.
44. கண்டறியப்பட்ட மதிப்பானது உண்மையான மதிப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதைக் குறிப்பது – துல்லியத்தன்மை.
45. ஆங்கிலேய அளவீட்டு முறை – FPS.
46. மின்னோட்டம் என்பது - அடிப்படை அளவாகும்.
47. பொருளின் அளவு என்பது - அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
48. ஒளிச்செறிவு என்பது- கண்ணுறு ஒளி யின் ஒளிச்செறிவாகும்.
49. அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் - வழி அளவுகள்.
50. ஒரு மோல் என்பது - 6.023 x அணுக்கள் (அ) மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது
51. குவார்ட்ஸ் கடிகாரங்கள் - மின்னனு அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன
52. அளவீடுகளின் நிலையற்றத் தன்மை – பிழைகள் என அழைக்கப்படுகிறது
53. அளவிடப்பட்ட மதிப்புகளின் நெருங்கியத் தன்மையே – தோராயமாதல்.
54. இரண்டு , நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் உருவாகிறது – தளக்கோணம்.
55. பொருத்துக:
1. வெப்பநிலை - குளிர்ச்சி மற்றும் வெப்பத்தின் அளவு.
2. தளக்கோணம் - இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்.
3. திண்மக் கோணம் - மூன்று (அ) அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்.
4. துல்லித் தன்மை - உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு.
5. நுட்பம் - இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை.