FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.02.24

TNPSC PAYILAGAM
By -
0



இடைக்கால பட்ஜெட் 2024-25

மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு நிதி அறிக்கை ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

KEY POINTS :இடைக்கால பட்ஜெட் 2024-25

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு:2024

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது. கடந்த மாதம் (ஜனவரி) 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் நடைபெற்றது. பல்வேறு வகையிலான விளையாட்டு பிரிவுகளில் இந்திய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மொத்தம் 13 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. பதக்க பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் ஹரியாணாவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் இணைந்து கோப்பை வழங்கினோம்.

முதல் முறையாக தமிழகம் கேலோ இந்தியா விளையாட்டில் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து வரலாறு படைத்துள்ளது.
  1. முதலிடம் – மகாராஷ்டிரா – 158 பதக்கங்கள் (57 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம்)
  2. இரண்டாமிடம் – தமிழ்நாடு – 98 பதக்கங்கள் (38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம்)
  3. மூன்றாமிடம் – ஹரியானா – 103 பதக்கங்கள் (35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம்)

ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன்ஷிப் 2024 

காது கேளாதோர் மற்றும் கேட்கும் திறனில் குறைபாடுடையோருக்கான பிரிவில் ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன்ஷிப்  சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை ஊழியரான பிருத்வி சேகர் வென்றுள்ளார்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

மொத்தமுள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்துவதற்காக ரூ. 14.93 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக சம்பயி சோரன் தேர்வு:

ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக சம்பயி சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் மிதிலேஷ் தாக்குர் உறுதிப்படுத்தியுள்ளார். 

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மற்றும் பட்டியல், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக இருப்பவர் சம்பயி சோரன். ஜார்கண்டின் செரகில்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் மூத்த அமைச்சரான சம்பயி சோரன் தனது பணிகளால் 'ஜார்கண்ட் புலி' என்று அழைக்கப்படுகிறார். 

நில மோசடி, சட்டவிடோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம்  2வது முறையாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து 6 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்வதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆளுநர் மாளிகை சென்று தனது ராஜிநாமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஹேமந்த் சோரனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டார்.

16வது நிதி ஆணையத்தின் உறுப்பினராக நியமனம்:

16வது நிதி ஆணையத்தின் உறுப்பினராக அஜய் நாராயணன், அன்னி ஜார்ஜ், நிரஞ்சரன், செளமியா காந்தி போன்றோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முழு நேர உறுப்பினர்கள் – அஜய் நாராயணன், அன்னி ஜார்ஜ், நிரஞ்சரன்

பகுதி நேர உறுப்பினர் – செளமியா காந்தி

தலைவர் – அரவிந்த் பனகாரியா

நிதி ஆணையம் பற்றி கூறும் விதி 280


1 பிப்ரவரி - இடைக்கால பட்ஜெட்:

யூனியன் பட்ஜெட் 2024 முழுமையடைய உள்ளது. 

பிப்ரவரி 1ஆம் தேதி, வியாழன் அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பிப்ரவரி 1 - இந்திய கடலோர காவல்படை தினம்

பிப்ரவரி 1 ஆம் தேதி, இந்திய கடலோர காவல்படை அதன் நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, இந்திய கடலோர காவல்படை தனது 46வது எழுச்சி தினத்தை கொண்டாடுகிறது. இந்தியக் கடலோரக் காவல்படை இந்தியக் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதிலும், இந்தியாவின் கடல்சார் மண்டலங்களுக்குள் விதிமுறைகளைச் செயல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

2024-25க்கான நிதிப்பற்றாக்குறை 16,85,494 கோடியாக இருக்கும், இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ----% ஆகும் ?

A) 5.1% 
B) 6.5% 
C) 7.1% 


 நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024


Post a Comment

0Comments

Post a Comment (0)