BHARAT RICE SCHEME

TNPSC PAYILAGAM
By -
0

BHARAT RICE SCHEME

பாரத் அரிசி  திட்டம்:

  • விலைவாசி உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் சில்லறை சந்தையில் ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு 02.02.24 அறிவித்தது. 
  • இந்த அரிசி அடுத்த வாரம்முதல் கடைகளில் கிடைக்கும்; இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசி இருப்பு வைத்திருக்கும் அளவு விவரங்களை தெரியப்படுத்துமாறு வணிகா்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மற்றும் இந்திய தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய இரண்டின் மூலமும், மத்திய அரசு விற்பனை மையங்கள் மூலமும் (கேந்த்ரிய பந்தா்) இந்த விற்பனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 
  • இணைய வழியில் இணைய-வணிக வலைதளங்கள்மூலம் ‘பாரத்’ அரிசி விற்பனை செய்யப்படும். அடுத்த வாரம்முதல் இந்த அரிசி சந்தைகளில் கிடைக்கும். 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக இவை விற்பனை செய்யப்படும். ‘பாரத்’ அரிசி விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

‘பாரத் அரிசி’ விற்பனை தொடக்கம்

  • அரிசி விலை கடந்த ஓராண்டாக உயா்ந்து வரும் நிலையில், ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்த ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டம் 12.03.2024 முதல் நடைமுறைக்கு வந்தது
  • ஏற்கெனவே, ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் ரூ. 27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் ரூ. 60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மானிய விலையில் அரிசி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக சில்லறை விற்பனைச் சந்தையில் ‘பாரத் அரிசி’ கிடைக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)