MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.03.2024
MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.03.2024


13-ஆம் நூற்றாண்டு துா்கை சிற்பம் கண்டெடுப்பு:

  • நெமிலியை அடுத்த கீழ்வீதி ஊராட்சி பெரிய ஏரிக்கரையில் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்கால சோழா் கால துா்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது
  • இந்த துா்கை சிற்பத்தின் காலம் பிற்கால சோழா்களின் இறுதிக் காலமான கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறியப்படுகிறது

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை:
  • ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து, 60 சதவிகித வெற்றிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 
  • இந்திய கிரிக்கெட் அணி 64.58 சதவிகித வெற்றிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 59.09 சதவிகித வெற்றிகளுடன் 3-வது இடத்தில் தொடருகிறது.

நீங்கள் நலமா?” திட்டம்:
  • “அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக "நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது”  என்ற புதிய திட்டத்தை வரும் 6ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்
  • “அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக "நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிவார்கள். முதல்வராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவேன் எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
  • KEY POINTS : LIST OF TAMILNADU GOVERNMENT SCHEME IN TAMIL

கல்பாக்கம் ஈனுலை  திட்டம்:
  • கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் பாவினி நிறுவனம் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலைக்கு எரிபொருள் நிரம்பும் திட்டத்தை பிரதமர் இன்று (04.03.2024) தொடக்கி வைக்கிறார்

பேராசிரியர் அன்பழகன் விருது :
  • கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலும், பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டது.
  • இக்குழுவானது மாவட்டத்துக்கு தகுதியான 4 பள்ளிகளை அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்து பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரைத்தது. அதில் சிறந்த பள்ளிகளாக ஒரு மாவட்டத்துக்கு 2 பள்ளிகள் வீதம் மொத்தமாக 76 பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக தேர்வுசெய்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதுவிரைவில் வழங்கப்பட இருக்கிறது.

தாலூகா உருவாக்கம் :
  • புதியதாக திருவோணம் தாலுகா உருவாக்கப்பட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • காவளாப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வங்கரை ஆகிய குறுவட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணம் தாலுகா உருவாக உள்ளது.
  • மேலும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைக்கப்படுகிறது.

உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு:
  • உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு தற்போது 24 சதவீதமாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இதை 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனீஷ் ஷா தெரிவித்துள்ளார்.
  • உலக அளவில் மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தினமும் 23.5 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகின் மொத்த பால் உற்பத்தியில் 24 சதவீதம் ஆகும். 

முதல் ஸ்னைப்பர் வீராங்கனை:
  • எல்லையோர காவல் படையின் (BSF) முதல் ஸ்னைப்பர் வீராங்கனையாக தேர்வாகியுள்ளார்.
  • இதுவரை ஆண்கள் மட்டுமே இந்த ஸ்னைபர் பிரிவில் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், இமாச்சல பிரதேசம் மண்டி மாவட்டத்தை சேர்ந்த சுமன் குமாரி எல்லையோர காவல் படையின் பஞ்சாப் படைப்பிரிவில் தளபதியாக 2021-ம் ஆண்டில் தேர்வானார். பின்னர் உயரதிகாரிகளின் அனுமதி பெற்று விடாமுயற்சி, கடின பயிற்சியின் பலனாக நாட்டின் முதல் பெண்ஸ்னைபராக தேர்வாகியுள்ளார்.
  • இந்தியாவின் எல்லையோரங்களைப் பாதுகாக்கும் பிரத்யேக துணை ராணுவப் படையான எல்லையோர காவல் படையில் (பிஎஸ்எப்) பல பிரிவுகள் உள்ளன.அவற்றுள் ஒன்று ஸ்னைபர் எனப்படும் தொலை குறி துப்பாக்கிச் சுடுதல் பிரிவு.

கடற்படையில் இணைப்பு
  • நீர் மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த எம்எச் 60 ஆர் ஹீ ஹாக் (MH 60 R He Hawk) ஹெலிக்காப்டர் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஹெலிக்காப்டர் கொச்சியின் ஐஎன்எஸ் கருடா தளத்தில் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.

பாராளுமன்ற பாதுகாப்பு தலைவராக நியமனம்:
  • அனுராக் அகர்வால் பாராளுமன்ற பாதுகாப்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • நாடாளுமன்றப் பாதுகாப்புத் துறைத் தலைவா் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஐபிஎஸ் அதிகாரி அனுராக் அகா்வால் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்களவைச் செயலகம்  வெளியிட்டது. 
  • கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவையின் பாா்வையாளா் மாடத்திலிருந்து எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் 2 இளைஞா்கள் குதித்து மஞ்சள் நிற புகையை வீசியது பெரும் சா்ச்சையையும், நாடாளுமன்றப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய நிலையில், அனுராக் அகா்வாலின் நியமனம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப்:
  • பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் (72) 03.03.2024 தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலை யில் அவர் 2-வது முறையாக பிரதமராகிறார்.
  • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதை யடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் பதவி ஏற்கிறார். கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை அவர் பிரதமராக பொறுப்பு வகித்தார்

MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 4

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் (National Safety Day) :

  • இந்தியாவில் மார்ச் 4ஆம் தேதி தொழிலாளர்கள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 
  • தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. அதன் பின்னர் 1971ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. 
  • மும்பையை தலைமையகமாகக்கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. 
  • அரசியல்சாரா தொண்டு நிறுவனமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்படுகிறது. தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு தற்போது 24 சதவீதமாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இதை -----சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனீஷ் ஷா தெரிவித்துள்ளார் ?

A) 30 சதவீதமாக

B) 35 சதவீதமாக
C) 40 சதவீதமாக
D) 50 சதவீதமாக

ANS : A) 30 சதவீதமாக 



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)