MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -15.03.2024

TNPSC PAYILAGAM
By -
0


TODAY CURRENT AFFAIRS IN TAMIL -15.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -15.03.2024


‘பாரத் அரிசி’ விற்பனை தொடக்கம்

  • அரிசி விலை கடந்த ஓராண்டாக உயா்ந்து வரும் நிலையில், ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்த ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டம் 12.03.2024 முதல் நடைமுறைக்கு வந்தது. 
  • ஏற்கெனவே, ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் ரூ. 27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் ரூ. 60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மானிய விலையில் அரிசி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக சில்லறை விற்பனைச் சந்தையில் ‘பாரத் அரிசி’ கிடைக்கும்.


ஐ.நா.மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசை பட்டியல் : 

  • ஐ.நா.மனித வளா்ச்சிக் குறியீடு தரவரிசை பட்டியலில் (2022) பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. 
  • ஐ.நா.வளா்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீடு(எச்டிஐ) தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 134-ஆவது இடம் கிடைத்துள்ளது. 
  • முந்தைய 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 191 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் இந்தியா 135-ஆவது இடம் கிடைத்தது. 
  • தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ள கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான குறியீடு தரவரிசை பட்டியலில் 0.644 புள்ளிகளுடன் இந்தியா ஒரு இடம் முன்னேறியுள்ளது.
  • சமீபத்திய மனித வளா்ச்சிக் குறியீட்டில் 0.644 புள்ளிகளுடன் நடுத்தர மனித வளா்ச்சிப் பிரிவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது


புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி  மாநகராட்சிகள் :

  • புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்கவும், அது தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
  • இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:“தமிழகம் நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

திருட்டு மற்றும் நகரம் 2024:

  • வாகனங்கள் அதிகமாக திருடு போகும் இந்திய நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் டெல்லி, இரண்டாம் இடத்தில் சென்னை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
  • வாகன திருட்டு குறித்து, ‘திருட்டு மற்றும் நகரம் 2024’ என்ற அறிக்கை வெளிவந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் திருடுபோன கார்களில் 80 சதவீதம் டெல்லியில் களவாடப்பட்டவை. ஒவ்வொரு 14 நிமிடத்துக்கும் ஒரு கார் நாட்டின் தலைநகரில் திருடு போயிருக்கிறது. டெல்லியில் கார் திருட்டு தொடர்பாக நாளொன்றுக்கு சராசரியாக 105 புகார்கள் காவல்துறையில் பதிவாகியுள்ளன.
  • டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக வாகன திருட்டு நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாமிடம் பெற்றுள்ளது. 2022-ஆம் ஆண்டு சென்னையில் 5 சதவீதமாக இருந்த கார் வாகன திருட்டு 2023-ஆம் ஆண்டில் 10.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 
  • பெங்களூரு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நகரங்களை ஒப்பிடுகையில் ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வாகன திருட்டுகள் குறைவு என்றாலும் கடந்த 2022-ம்ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023-ல்கார் திருட்டு இங்கு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.


தா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி:

  • பொறியாளராக இருந்து சமூக சேவகராக மாறிய இன்போசிஸ் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நாடாளுமன்ற மண்டபத்தில் உள்ள அவரது அறையில்பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • இன்போசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், குழந்தைகளுக்கான பல புத்தகங்களை எழுதியவருமான சுதா மூர்த்தி (73)கடந்த 08.03.2024 சர்வதேசமகளிர் தினத்தன்று மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.யாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார்.
  • கன்னடம், ஆங்கிலம் இலக்கிய படைப்பு பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார், பத்ம  (2006) மற்றும் பத்ம பூஷண் (2023) விருதுகளைப் பெற்றவர் சுதா மூர்த்தி.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

டெல்லி, இரண்டாம் இடத்தில் சென்னை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.வாகன திருட்டு குறித்து, ‘திருட்டு மற்றும் நகரம் 2024’ என்ற அறிக்கை வெளிவந்துள்ளது. வாகனங்கள் அதிகமாக திருடு போகும் இந்திய நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில்?

A) டெல்லி

B)  சென்னை
C) பெங்களூரு
D) ஹைதரபாத்

ANS : A) டெல்லி



 MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 15

 உலக நுகர்வோர் உரிமைகள் தினம்: World Consumer Rights Day

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 அன்று கொண்டாடப்படும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம், நுகர்வோர் உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய நிகழ்வாகும்.
  • நுகர்வோர் உரிமைகள் என்பது பல்வேறு பொருட்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் ஒவ்வொரு நபருக்கும் அந்த பொருட்களின் தரம், தூய்மை, விலை மற்றும் தரம் பற்றிய தகவல்களைப் பெற உரிமை உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டுக்கான உலக நுகர்வோர் உரிமைகள் தினத்திற்கான கருப்பொருள் நியாயமான டிஜிட்டல் நிதி என்று நுகர்வோர் சர்வதேச நிறுவனம் அறிவித்துள்ளது.



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


Post a Comment

0Comments

Post a Comment (0)