MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -18.03.2024 - 19.03.20244

TNPSC PAYILAGAM
By -
0

-TODAY CURRENT AFFAIRS IN TAMIL -18.03.2024 - 19.03.20244
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -18.03.2024 - 19.03.20244


உலகின் மாசடைந்த நகரங்கள்: Most polluted cities in the world 2024

  • உலகளவில் காற்று மாசுபாடு அடைந்த நகரங்களில் புதுதில்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது
  • புதுதில்லிக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு இப்பட்டியலில் 3-ஆம் இடம் வகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, கடந்த ஆண்டில் உலகளவில் காற்றின் தரம் மோசமாக பதிவாகியுள்ள நாடுகளில் இந்தியா 3-ஆம் இடம் வகிக்கிறது.

டபிள்யூபிஎல் WPL 2024: 

  • டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் தில்லி கேப்பிடல்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  • இதன்மூலம், முதல் முறையாக ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த ஆண்டு அறிமுக டபிள்யூபிஎல் சீசனில் மும்பை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டம் வென்றார் காா்லோஸ் அல்கராஸ்:

  • அமெரிக்காவில் நடைபெறும் மாஸ்டா்ஸ் டென்னிஸான இண்டியன் வெல்ஸ் ஓபனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தினர். 
  • முதல் செட்டில் மெத்வதெவ் 3-0 என முதலில் ஆதிக்கம் செலுத்தினார். அல்கராஸ் புத்துணர்வுடன் மீண்டு வந்து, 7-6 என முதல் செட்டினை வென்றார். அடுத்த செட்டில் மெத்வதேவ்-க்கு வாய்ப்பே அளிக்காமல் 6-1 என்ற கேம்களில் அசத்தல் வெற்றி பெற்று காா்லோஸ் அல்கராஸ் கோப்பையை வென்றார்
  • இது இவருக்கு 2வது இண்டியன் வெல்ஸ் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விம்பிள்டனுக்குப் பிறகு அல்கராஸ் பெறும் முதல் கோப்பை என்பதால் நெகிழ்ச்சியுடன் பேசினார். கடந்தாண்டும் மெத்வதேவ் அல்கராஸிடம் இண்டியன் வெல்ஸ் ஓபனில் தோற்றது குறிப்பிடத்தக்கது. 

லமிட்டியே-2024 - LAMITIYE-2024 :

  • இந்திய ராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு (எஸ்.டி.எஃப்) இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான "லமிட்டியே-2024" இன் பத்தாவது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழு இன்று செஷல்ஸுக்குப் புறப்பட்டது. இந்த கூட்டுப் பயிற்சி 2024 மார்ச் 18 முதல் 27 வரை செஷல்ஸில் நடத்தப்படும். கிரியோல் மொழியில் 'நட்பு' என்று பொருள்படும் ‘லமிட்டியே’ என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பயிற்சி நிகழ்வாகும், இது 2001 முதல் செஷெல்ஸில் நடத்தப்படுகிறது. இந்திய ராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளின் கோர்கா ரைபிள்ஸ் பிரிவில் இருந்து தலா 45 வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.
  • அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ், துணை நகர்ப்புற சூழலில்  மரபுசார் செயல்பாடுகளில் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் -PM SHRI School

  • 'மத்திய அரசு நிதியுதவியை நிறுத்தியதால், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணைய தயார்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள நிதியுதவி நிலுவையை வழங்கும்படி, மத்திய கல்வி அமைச்சருக்கும், தமிழக தலைமை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
  • நாடு முழுதும் தரமான கல்வியை வழங்கும் வகையில், மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி, மத்திய அரசு சார்பில், பி.எம்.ஸ்ரீ., என்ற பிரதம மந்திரியின் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் திட்டம், 2022ல் அமலானது.
  • தற்போதுள்ள அரசுப் பள்ளிகளை தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020க்கான மாதிரிப் பள்ளிகளாக மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

TRAFFIC மற்றும் WWF-இந்தியா  2024:

  • TRAFFIC மற்றும் WWF-இந்தியாவின் 2024 பகுப்பாய்வின்படி, இந்தியாவில் சுறா உடல் உறுப்புகளின் சட்டவிரோத வர்த்தகத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது, 2010 மற்றும் 2022 க்கு இடையில் கிட்டத்தட்ட 65% வலிப்புத்தாக்கங்கள். 16,000 கிலோகிராம் சுறா துடுப்புகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

‘ஸ்டீக்’ ( STEAG-Signals Technology Evaluation and Adaptation Group ) :

  • இந்திய ராணுவத்தில் கம்பி மற்றும்கம்பியில்லா தொழில்நுட்ப முறைகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்ல ‘ஸ்டீக்’ (STEAG) எனப்படும் சமிக்ஞை தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் தகவமைப்பு குழு எனும் புதிய தொழில்நுட்பப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
  • எலெக்ட்ரானிக் போர் புரியும் முறைகள், 5 ஜி மற்றும் 6 ஜி நெட்வொர்க்கிங், குவான்ட்டம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, மிஷின் லேர்னிங், யுத்தம் சார்ந்த மென்பொருள் பயன்பாடுகள், அலைபேசி தொடர்பாற்றல் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப முறைகள் இதில் இணைக்கப்படவிருக்கிறது. ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டங்களுடன் ஸ்டீக் திட்டமும் இணைக்கப்படும்.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

உலகளவில் காற்று மாசுபாடு அடைந்த நகரங்களில் ----------- மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது?

A) புதுதில்லி

B)  சென்னை
C) கொல்கத்தா
D)வாரணாசி

ANS :A) புதுதில்லி


MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 18

 ஆயுதத் தொழிற்சாலைகள் தினம் (இந்தியா): Ordnance Factories Day (India)

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 ஆம் தேதி ஆயுதத் தொழிற்சாலைகள் தினம் அனுசரிக்கப்படுகிறதுகொல்கத்தாவின் காசிபூரில் உள்ள இந்தியாவின் மிகப் பழமையான ஆயுதத் தொழிற்சாலையின் உற்பத்தி மார்ச் 18, 1802 இல் தொடங்கப்பட்டது
  • இந்த நாள் இந்தியா முழுவதும் உள்ள கண்காட்சிகளில் துப்பாக்கிகள்துப்பாக்கிகள்பீரங்கிகள்வெடிமருந்துகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்துவதன் மூலம் கொண்டாடப்படுகிறது.

 



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


Post a Comment

0Comments

Post a Comment (0)