CURRENT AFFAIRS IN TAMIL -21.03.2024 - 22.03.2024 |
உள்நாட்டில் தயாரான முதல் பீரங்கி இன்ஜின்
- உள்நாட்டில் தயாரான 1,500 (ஹெச்.பி.) குதிரைத்திறன் கொண்ட முதல் பீரங்கி இன்ஜின் (India’s first indigenously-made 1500 Horsepower (HP) engine for Main Battle Tanks) கா்நாடக மாநிலம் மைசூரில் சோதித்து பாா்க்கப்பட்டது.
- மைசூரில் உள்ள பாரத் எா்த் மூவா்ஸ் நிறுவனத்தில் (பிஇஎம்எல்) நடைபெற்ற இந்தச் சோதனை பாதுகாப்புத் துறை செயலா் கிரிதா் அரமனே தலைமையில் நடைபெற்றது.
சரஸ்வதி சம்மான் விருது
- கேரளத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான பிரபா வர்மாவுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- அவர் இயற்றிய ‘ ரெளத்ர சாத்விகம் என்ற கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருதை வழங்கும் கே.கே.பிர்லா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
- கடந்த ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை இசை அகாடமி விருதுகள் 2024
- சங்கீத கலாநிதி விருது – தோடூர் மடபுசி கிருஷ்ணா
- சங்கீத கலா ஆச்சார்யா விருது – பரஸ்சலா ரவி (V. இரவீந்திரன் நாயர்) மற்றும் கீதா ராஜா
- TTV விருது – நரசிம்மன் மற்றும் S.வெங்கடேசன் மற்றும் H.K.நரசிம்மமூர்த்தி
- நிருத்ய கலாநிதி விருது – டாக்டர் நீனா பிரசாத்
இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 37% அதிகரிப்பு:
- இந்தியாவின் 69.2 கோடி பெண்களில் 37 சதவீதம் பேர் வேலைக்குச் சென்று பணம் ஈட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
- தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் 34 சதவீதத்துடன் முன்னணியிலும் புணே 33 சதவீதத்துடன், சென்னை 29 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- அதேசமயம், தில்லி-என்சிஆர் பகுதியில் முந்தைய 2022- ஆம் ஆண்டில் இருந்து 2 சதவீத குறைந்து 20 சதவீதமாக உள்ளது.
நோக்டிஸ் எரிமலை – செவ்வாய்க் கிரகம்:
- செவ்வாய்க் கிரகத்தில் ‘பிரம்மாண்டமான’ எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘நோக்டிஸ் எரிமலை’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
- இந்த எரிமலை 29,600 அடி உயரமும் , சுமார் 450 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.
MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 22
- உலக தண்ணீர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) ஆண்டுதோறும் மார்ச் 22 அன்று அனுசரிக்கப்படும் நாள் ஆகும்.கடந்த 1993ம் ஆண்டு முதல் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இந்த தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- தண்ணீரை வீணாக்குவதில் இந்தியா 6-வது இடம்: இந்தியாவில் சராசரியாக நபர் ஒருவர், குழாயைத் திறந்து ஓடவிடுவதன் மூலம் நிமிடத்துக்கு 5 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. 3 முதல் 5 நிமிடங்களுக்கு பல் துலக்கும்போது சுமார் 25 லிட்டர் தண்ணீரும், பாத்திரங்களைக் கழுவும் போது 20 முதல் 60 லிட்டர் தண்ணீரும் வீணாகிறது.
- இந்தியாவில் தற்போது 40 பில்லியன் லிட்டராக இருக்கும் தண்ணீரின் தேவை 2025-ம் ஆண்டுக்குள் 220 பில்லியன் லிட்டராக உயரும். குளிப்பதற்கும், கழிப்பறைக்கும் சுமார் 27 சதவீதம் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். தோராயமாக, ஒரு கசிவு குழாய் 4,000 துளிகள் தண்ணீரை வீணாக்குகிறது, இது ஒரு லிட்டர் தண்ணீருக்குச் சமம். அதிக தண்ணீர் வீணாக்கும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 6-வது இடத்திலும் உள்ளது.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:
Current Affairs Question and Answers in Tamil -March-2024:
உள்நாட்டில் தயாரான ------------ (ஹெச்.பி.) குதிரைத்திறன் கொண்ட முதல் பீரங்கி இன்ஜின் கா்நாடக மாநிலம் மைசூரில் சோதித்து பாா்க்கப்பட்டது ?
A) 1000 குதிரைத்திறன்
B) 1500 குதிரைத்திறன்
C) 2000 குதிரைத்திறன்
D) 2500 குதிரைத்திறன்
ANS : B) 1500 குதிரைத்திறன்
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
- TNPSC GK குறிப்புகள் தமிழ் JANUARY– 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
- MARCH AWARDS HONOURS 2024 IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: