MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -23.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL -23.03.2024
 CURRENT AFFAIRS IN TAMIL -23.03.2024


இந்தியா-பூடான் இடையே ரயில் ஒப்பந்தம்

  • பிரதமா் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக பூடானுக்கு வந்தடைந்தாா். தொடா்ந்து, இருநாட்டு பிரதமா்களின் முன்னிலையில் இந்தியா-பூடான் இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது உள்பட பல்வேறு துறை சாா்ந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
  • ரயில் இணைப்புக்கு ஒப்பந்தம்: அந்நாட்டு பிரதமா் ஷெரிங் டோப்கேவுடன் பிரதமா் மோடி சந்தித்தாா். இதையடுத்து, எரிசக்தி, எண்ம இணைப்பு, விண்வெளி, வேளாண்மை, இளைஞா் நலன் மற்றும் பிற துறைளில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பமாகின. குறிப்பாக, இந்தியா-பூடான் இடையே கோக்ராஜ்ஹா்-கெலேபு, பனாா்ஹட்-சம்ட்சே ஆகிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்து புரிந்துணா்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது


மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும்

  • மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் மூயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்கள் வெளியேற வேண்டும் என்று அவா் வலியுறுத்தியதால், இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், தற்போது அவா் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளாா்.
  • ரூ.3,348 கோடி கடன்: கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, சுமாா் 400.9 மில்லியன் டாலா்களை (ரூ.3,348 கோடி) இந்தியாவுக்குக் கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில்  வீழ்ச்சி

  • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. 
  • அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.28 ஆக வர்த்தகமான நிலையில், வர்த்தக முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 35 காசுகள் குறைந்து ரூ.83.48 ஆக நிறைவடைந்தது. 
  • முன்னதாக டிசம்பர் 13, 2023 அன்று ரூபாய் மதிப்பு அதன் மிகக் குறைந்த அளவு 83.40 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 23

 உலக வானிலை நாள் : World Meteorological Day

  • 1950 அம் ஆண்டு உலக வானிலை அமைப்பை (WMO) தொடங்கிய நாளான மார்ச் 23 ஆம் தேதியை உலக வானிலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.
  • கருப்பொருள் (2024) "At the Frontline of Climate Action 


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, சுமாா்  (ரூ.---------கோடி) இந்தியாவுக்குக் கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. ?

A) (ரூ.3,348 கோடி) 

B) (ரூ.4,348 கோடி) 
C) (ரூ.5,348 கோடி) 
D)(ரூ.6,348 கோடி) 

ANS : A) (ரூ.3,348 கோடி) 



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


Post a Comment

0Comments

Post a Comment (0)