MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -26.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -26.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -26.03.2024


மைக்ரோசாப்ட் புதிய தலைவர்:

  • மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக சென்னை ஐஐடி.,யில் படித்த பவன் டவுலூரி நியமிக்கப்பட்டு உள்ளார்
  • முன்னர் இதன் தலைவராக இருந்த பனோஸ் பனாய், அமேசான் நிறுவனத்தில் இணைவதற்காக ராஜினாமா செய்தார். மைக்ரோசாப்ட் நிறுவனம், மைக்ரோசாப்ட் மற்றும் சர்பேஸ் கம்ப்யூட்டர்ஸ் குழுக்களை தனித்தனியாக நடத்தி வந்தது. இரண்டுக்கும் தனித்தனி தலைவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
  • பவுன் டவுலூரி சர்பேஸ் குழுவுக்கும், மைக்கேல் பராக் என்பவர் மைக்ரோசாப்ட் குழுவுக்கும் தலைவராக இருந்தனர். பராக் புதிய வாய்ப்புகளை தேடி செல்லப்போவதாக அறிவித்துவிட்டார். இதனையடுத்து தற்போது மைக்ரோசாப்ட் மற்றும் சர்பேஸ் குழுக்களுக்கு பவன் டவுலூரி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகினார்

  • பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு சரி செய்யததால், சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து டேவ் கால்ஹவுன் விலகினார்.
  • அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், விமானங்கள் தயாரிப்பு வர்த்தகத்தின் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
  • இந்நிலையில் இந்நிறுவன தயாரிப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இதுபோயிங் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு கொடுத்தது.
  • தனது பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து பிரச்னையை களைய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருவதையடுத்து இந்நிறுவனத்தின் சி.இ.ஓ, வான டேவ் கால்ஹவுன் இன்று திடீரென பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரோவின் ‘புஷ்பக்’ விண்கல சோதனை வெற்றி

  • இந்தியாவின் முதல் மறு பயன்பாட்டு ஏவு வாகனமான (Reusable Launch Vehicle (RLV)), ‘புஷ்பக் (Pushpak)’ விண்கலத்தின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது இஸ்ரோ.
  • புஷ்பக் விண்கலம், விமானத்தை போல இறக்கைகள் உடையது. இது, 6.5 மீட்டர் நீளமும், 1.75 டன் எடையும் கொண்டது.
  • இதற்கு முன்னர் 2016 மற்றும் 2023-இல் நடந்த சோதனையை இது வெற்றிகரமாக முடித்தது குறிப்பிடத்தக்கது.

குறுங்கோளுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் பெயர்

  • செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் உள்ள சுற்று வட்டப் பாதையில் சுழன்றுகொண்டிருக்கிற குறுங்கோள் ‘2005 ஈஎக்ஸ்296’ (2005 EX296) -க்கு “(215884) ஜெயந்த்மூர்த்தி” என்று சர்வதேச வானியல் சங்கத்தினர் பெயர்சூட்டி உள்ளனர். 
  • இது சூரியனை சுற்றி வர 3 ஆண்டுகள் 3 மாதங்கள் எடுத்துகொள்கிறது.

இந்திராவதி நடவடிக்கை

  • இந்திய அரசானது, ஹைத்தி நாட்டில் உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக 'இந்திராவதி நடடிக்கையினை' தொடங்கியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் படுகொலை செய்யப் பட்டதிலிருந்து கரீபியன் நாடான ஹைத்தியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெருமளவிலான கும்பல் வன்முறையினை எதிர்கொண்டு வருகிறது.
  • அவரின் படுகொலைக்குப் பிறகு, நாட்டின் அதிகாரப்பூர்வ தலைவர், பிரதமர் ஏரியல் ஹென்றி, பல நாடுகளின் ஆதரவுடன், ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • பிரதமரை இராஜினாமா செய்ய வற்புறுத்தும் முயற்சியில் பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் ஹைத்தியில் உள்ள முக்கிய இடங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொண்டன.
  • ஹைத்தியில் 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடத்தப்படவில்லை


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

இந்திய அரசானது, ------ நாட்டில் உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக 'இந்திராவதி நடடிக்கையினை' தொடங்கியுள்ளது?

A) தென் கொரியா

B) பூடான் 
C) அமெரிக்கா
D) ஹைத்தி

ANS :  D) ஹைத்தி

 

MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 26

வலிப்பு நோய்க்கான ஊதா நாள் : Purple Day for Epilepsy: 

  • சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் அல்லது ஊதா தினம் மார்ச் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வலிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான சர்வதேச கால்-கை வலிப்பு தினம் 2024 தீம் "என் கால்-கை வலிப்பு பயணத்தின் மைல்கற்கள்"( “Milestones on My Epilepsy Journey”)


நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


Post a Comment

0Comments

Post a Comment (0)