MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -29.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -29.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -29.03.2024


பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி

  • ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் ‘பயோமெடிக்கல் டிவைஸ் டிசைன் ஹேக்கத்தான்’ போட்டி அண்மையில் நடைபெற்றது. சுகாரதார பாதுகாப்பில் புதுமைகளை உருவாக்கும் வகையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன
  • இதில், பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவியை உருவாக்கி காட்சிபடுத்தியிருந்தனா். இதற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான ரூ.1 லட்சம் பரிசுத்தொகை மாணவா்கள் வி.ஸ்ரேயா, ஆா்.பிரகதீஸ், எஸ்.ஜமீா் அலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தேஜஸ் இலகுரக போா் விமானம் வெற்றிகரமாக சோதனை 

  • உள்நாட்டு தொழில்நுட்பத்தில் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போா் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போா் விமானம் (எல்.சி.ஏ. எம்.கே.1ஏ) பெங்களூரில் வானத்தில் பறந்து, பல்வேறு சாகசங்களை அரங்கேற்றியது. 
  • 18 நிமிடங்களுக்கு வானத்தில் பறந்த போா் விமானத்தை ஓய்வுபெற்ற தலைமை சோதனை விமானிக் குழு கேப்டன் கே.சி.வேணுகோபால் செலுத்தினாா்.
  • முந்தைய தேஜஸ் விமானங்களைக் காட்டிலும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் புதிய வகை விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அபராதமாக ரூ.1,823 கோடி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ்:

  • 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  • சீதாராம் கேஸரி காங்கிரஸ் தலைவராக இருந்த 1993-94ல் ஆண்டுகளில் மட்டும் ரூ.53 கோடி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி-விஜில் (cVIGIL) செயலி:79,000-க்கும் மேற்பட்ட விதிமீறல் புகார்கள்

  • தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) செயலி மக்களிடத்தில் சிறந்த கருவியாக மாறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 79,000-க்கும் மேற்பட்ட விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
  • இந்தப் புகார்களில் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் 89 சதவீத புகார்கள் 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 58,500 புகார்கள் (மொத்த புகார்களில் 73 சதவீதம்) சட்ட விரோதமாக வைக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் பேனர்களைப் பற்றியது. 1,400 புகார்கள் பணம், பரிசு பொருள்கள் மற்றும் மதுபானம் விநியோகம் குறித்தவை.
  • சுமார் 3 சதவீத புகார்கள் (2,454) சொத்துக்களைச் சேதப்படுத்துவது தொடர்பானவை. 1,000 புகார்கள் தடைசெய்யப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்தது தொடர்பாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தியது தொடர்பாக பதிவாகியுள்ளன. துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வந்த 535 புகார்களில் அவை அனைத்தும் தீர்த்துவைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

900 ஆண்டுகள் பழமையான கன்னட கல்வெட்டு

  • கல்யாண சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த 900 ஆண்டுகள் பழமையான கன்னட கல்வெட்டு தெலுங்கானா மாநிலம் கங்காபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 
  • சாளுக்கியர்கள் மத்திய இந்தியாவின் தக்காண பீடபூமியை 6 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர், இதில் மூன்று தனித்துவமான வம்சங்கள் உள்ளன: பாதாமி, கல்யாணி மற்றும் வெங்கி.

இந்தியா-மொசாம்பிக்-தான்சானியா முத்தரப்பு பயிற்சி:
  • இந்தியா-மொசாம்பிக்-தான்சானியா முத்தரப்பு பயிற்சியின் இரண்டாவது கட்டம் மொசாம்பிக்கில் உள்ள நாகாலாவில் 2024, மார்ச் 28 அன்று நிறைவடைந்தது. 
  • இந்த ஒரு வார காலப் பயிற்சி இந்தியா, மொசாம்பிக், தான்சானியா கடற்படைகளுக்கு இடையிலான மேம்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. 
  • ஐ.என்.எஸ் தீர், சுஜாதா ஆகியவை மார்ச் 21 முதல் 28 வரை தொடர்ச்சியான கூட்டுப் பயிற்சிகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் பங்கேற்றன, இது மூன்று கடற்படைகளுக்கும் அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் விலைமதிப்பற்ற வாய்ப்புகளை வழங்கியது.

வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ ஏவுகணை படகு:

  • இந்தியக் கடற்படைக்காக, தானேயில் உள்ள எம்எஸ்எம்இ ஷிப்யார்ட், திருவாளர்கள் சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட, ஏசிடிசிஎம் படகு 11 திட்டத்தின் ஒரு பகுதியாக 'வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ ஏவுகணை படகு, எல்எஸ்ஏஎம் 18 (‘Ammunition Cum Torpedo Cum Missile Barge, LSAM 18 )மார்ச்28, 24அன்று மும்பையில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் (கரன்ஜா) ஒப்படைக்கப்பட்டது. அறிமுக விழாவுக்கு கமாண்டர் விக்ரம் போரா, என்.டி (மும்பை) / ஜி.எம் (டெக்) தலைமை தாங்கினார்.
  • 11 ஏசிடிசிஎம் படகு கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தானேவில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இடையே 2021, மார்ச் 05 அன்று கையெழுத்தானது.



நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போா் விமானம் எங்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது ?

A)  ஹைதராபாத்

B)  பெங்களூர்
C) கொல்கத்தா
D)  சென்னை

ANS : B)  பெங்களூர்



நடப்பு நிகழ்வுகள் 2024

JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024


MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

TNPSC GK குறிப்புகள் தமிழ் JANUARY– 2024
TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024
TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024


விருதுகள் கௌரவங்கள் 2024 :

JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
MARCH AWARDS HONOURS 2024 IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
மார்ச் 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/ MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


IMPORTANT APPS LAUNCHED BY GOVERNMENT IN TAMIL



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)