MARCH 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -30.03.2024 -31.03.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -30.03.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -30.03.2024


இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை:- ‘‘பேலாஸ்ட்லெஸ் டிராக்"

  • மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான ‘‘பேலாஸ்ட்லெஸ் டிராக்" என்ற புது வகையான ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 508 கி.மீ. தூரத்துக்கு இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் 295.5 கி.மீ. தூரத்துக்கு தூண்கள்அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன
  • புல்லட் ரயில் போன்ற அதிவேக ரயில்களை இயக்குவதற்கு பேலாஸ்ட்லெஸ் டிராக் அல்லது "ஸ்லாப் டிராக்" என்பது சில நாடுகளில் பிரபலமாக உள்ளது. ஜே-ஸ்லாப் பேலாஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்று நேஷனல் ஹை-ஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்எச்எஸ்ஆர்சிஎல்) தெரிவித்துள்ளது.
  • புல்லட் ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் மும்பை, தானே, வாபி,பரோடா, சூரத், ஆனந்த், அகமதாபாத் வரை அமைக்கப்பட்டுள்ளது.
  • மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் பாதை மதிப்பீட்டு செலவினம் ரூ.1.08 லட்சம் கோடியாகும். இதில், ரூ.10,000 கோடியை மத்திய அரசு வழங்கும். மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தலா ரூ.5,000 கோடி பங்களிப்பை வழங்கும். எஞ்சிய தொகை ஜப்பானிலிருந்து 0.1 சதவீத வட்டியில் கடனாக பெறப்படும்.

மேற்கத்திய நாடுகள் -போர்க்கப்பல்களை பழுது பார்க்கும்- இந்தியா

  • இந்தோ - பசிபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் போர்க்கப்பல்களை பராமரிக்க மேற்கத்திய நாடுகள் தற்போது இந்தியாவை சார்ந்திருப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கப்பல்களை சொந்த நாட்டில் பழுது பார்க்க செலவும் அதிகமாகிறது, காலதாமதமும் ஏற்படுகிறது.
  • தென் சீன கடல் பகுதிக்கு அருகே இந்தியா அமைந்துள்ளதால், இங்குள்ள கப்பல் கட்டும் தளங்களை பயன்படுத்திக் கொள்ள இங்கிலாந்தும், அமெரிக்காவும் முடிவு செய்தன. 
  • இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவ உறவுகளும் தற்போது உச்சத்தை எட்டியுள்ளன. இதனால் அமெரிக்க கடற்படை சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் 5 ஆண்டுகளுக்கு பழுது பார்க்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இங்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் பழுது பார்க்கப்படவுள்ளன. முதல் கப்பலாக அமெரிக்க கடற்படை யுஎஸ்என்எஸ் சால்வார் போர் கப்பல் பராமரிப்பு பணிக்காக வந்துள்ளது.
  • இதே கப்பல் கட்டும் தளத்தில் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் ஆர்எப்ஏ அர்கஸ், ஆர்எப்ஏ லைம் பே ஆகிய போர்க்கப்பல்களும் பராமரிப்பு பணிக்காக வந்துள்ளன. இங்கிலாந்து போர்க்கப்பல்கள், இந்திய கப்பல் கட்டும் நிறுவனத்தில் பழுது பார்க்கப்படுவது இதுவே முதல் முறை. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கை- ஐநா

  • உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 5-ல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வீடுகளில் 63 கோடி டன், உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை கடைகளில் 13 கோடி டன் என உலக அளவில் 105 கோடி டன் உணவு விரயம் செய்யப்படுகிறது. வீடுகளில் ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதன்படி, உலக அளவில் வீடுகளில் ஒரு நாள் வீணாகும் உணவைக் கொண்டு 100 கோடி மக்களின் பசியைத் தீர்க்க முடியும். குறிப்பாக, அதிக வெப்ப நிலை நிலவும் நாடுகளில் உள்ள வீடுகளில் தனிநபர் உணவு விரயம் அதிகமாக உள்ளது. அதிக வெப்ப நிலையால், உணவை சேமித்து வைப்பது அங்கு சவாலாக உள்ளதால் விரயம் அதிகம் நிகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கலன் மொபைல் செயலி

  • பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஒரு முக்கிய நிரப்பியாக, மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு. . மெய்நிகர் நிகழ்வில், உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஜம்மு மற்றும் கொச்சியில் NIA இன் 2 புதிய கிளை அலுவலகங்களையும், ராய்ப்பூரில் ஒரு குடியிருப்பு வளாகத்தையும் -திறக்கிறார். 
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புதிய குற்றவியல் சட்டங்களின் தொகுப்பான 'சங்கலன்' [NIA எனும்தேசிய புலனாய்வு அமைப்பு வடிவமைத்த தேசிய குற்ற ஆவண காப்பகத்திற்கான (Digital criminal case management system) மொபைல் செயலி-Sankalan ] என்ற மொபைல் செயலியையும் ஸ்ரீ ஷா அறிமுகப்படுத்தினார்.பழைய மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இடையே ஒரு பாலமாக புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் செல்லவும் சங்கலன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  •              அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023-2024

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023ன் நிறைவு விழா

  • உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பான எஃப்ஏஒ (FAO), சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு (IYM) -2023-ன் நிறைவு விழாவை நேற்று (29 மார்ச் 2024)
  • இத்தாலியின் ரோமில் உள்ள எஃப்ஏஒ தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. நேரிலும் காணொலி முறையிலும் என இரு வகைகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் செயலாளர் திருமதி மணீந்தர் கவுர் திவேதி உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
  • பல்வேறு நாடுகளில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023-ன் போது ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும் வகையிலான வீடியோவும் இந்த நிகழ்ச்சியின்போது திரையிடப்பட்டது.
  • சர்வதேச சிறுதானிய ஆண்டின் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் துணைத் தலைமை இயக்குநர் திருமதி பெத் பெக்டோலின் நிறைவுரையாற்றினார்.
  • உலகெங்கிலும் உள்ள சிறுதானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட உணவு வகைகளின் காட்சிப்படுத்தல் மற்றும் நேரடி சமையல் ஆகியவற்றைக் கொண்ட சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இந்தியாவின் முன்மொழிவைத் தொடர்ந்து, 70 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, மார்ச் 2021-ல் அதன் 75 வது அமர்வில், 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்தது.
  • சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள், குறித்த விழிப்புணர்வு 2023-ம் ஆண்டு முழுவதும் ஏற்படுத்தப்பட்டது.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024:

Current Affairs Question and Answers in Tamil -March-2024:

உலகளாவிய உணவு விரயம் -2022-ம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. இதன்படி, உலக அளவில் வீடுகளில் ஒரு நாளைக்கு --------உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.?

A)  ஒரு நாளைக்கு 60 கோடி உணவுகள்

B)  ஒரு நாளைக்கு 80 கோடி உணவுகள்
C) ஒரு நாளைக்கு 95 கோடி உணவுகள்
D)  ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள்

ANS : D)  ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள்



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


 

Post a Comment

0Comments

Post a Comment (0)