TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.03.2024 |
2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள்:
தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- சிறந்த படமாக தனி ஒருவன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- சிறந்த நடிகராக ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- சிறந்த படத்துக்கான முதல் பரிசு தனி ஒருவன் படத்துக்கும், இரண்டாம் பரிசு பசங்க -2 என்ற படத்துக்கும், மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்துக்கும்,
- பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்பு பரிசு 36 வயதினிலே திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த நடிகராக இறுதிச்சுற்றுப்படத்தில் நடித்த ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் (36 வயதினிலே) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 27 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி:
- காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சமீபத்தில் மலேசியா செஸ் ஃபெடரேஷன் நடத்தியது. மலேசியாவின் மெலகா நகரில் நடைபெற்ற இந்த தொடரில் பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஹட்சன் செஸ் அகாடமியைச் சேர்ந்த ஷர்வானிகா, ராகவ் வெற்றி பெற்றனர்.
- 10 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் ஷர்வானிகா 8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், 14 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில் ராகவ் 7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
முக்கிய மந்திரி மகிளா சம்மன் யோஜனா-மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை
- டெல்லி அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதியமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார்.
- அவர் தனது பட்ஜெட் உரையில் கூறும்போது, “டெல்லியில் முக்கிய மந்திரி மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்படி டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக வரும் நிதியாண்டில் பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்படுகிறது” என்றார்.
இந்தோனேசியாவின் முதல் இந்துப் பல்கலைக்கழகம் :
- இந்தோனேசியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனினும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பாலி தீவில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்கின்றனர். உலகளவில் சுற்றுலாமையமாக விளங்கும் இந்த பாலித்தீவில் கடந்த 1993-ம் ஆண்டு இந்து மத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1999-ம்ஆண்டு இந்து மத அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. பாலி தீவின் தலைநகர் டென்பசாரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தஇந்தக் கல்லூரி கடந்த 2004-ம்ஆண்டு இந்து தர்ம அரசு நிறுவனமாக (ஐஎச்டிஎன்) மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது.
- இந்நிலையில், இந்நிறுவனத்துக்கு பல்கலைக்கழக அந்தஸ்துவழங்கும் ஆணையில் அதிபர்ஜோகோவி விடோடோ கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, இந்தோனேசியாவின் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிபரின் ஒழுங்குமுறைஅதிகாரத்தின் கீழ் இந்தப் பல்கலை. உருவாக்கப்பட்டுள்ளது.
- புதிய இந்து பல்கலைக் கழகத்துக்கு ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி (யுஎச்என்)’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
தேசிய ஆராய்ச்சியாளர்கள் உச்சி மாநாடு:
- தேசிய ஆராய்ச்சியாளர்கள் உச்சி மாநாடு சென்னை ஐஐடியில் தொடங்கியது. தொடக்க விழாவுக்கு சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தலைமை வகித்தார்.
- மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொலி காட்சி மூலம் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் பச்சை ஹைட்ரஜன் ஆலை:
- நாட்டின் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் துறையின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலையை, மத்திய உருக்கு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஹரியானா மாநிலம் ஹிசாரில் துவங்கி வைத்தார்.
- இந்த ஆலை 'ஜிந்தால் ஸ்டெய்ன்லெஸ்' மற்றும் 'ஹைஜென்கோ' நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
MARCH 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL-மார்ச் 5
சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம் : International Day for Disarmament and Non-Proliferation Awareness:
- 'சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம்' ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5 அன்று கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே ஆயுதக் குறைப்புப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- 2021 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் (UNGA) நிராயுதபாணியாக்கம் மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்திற்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
- இந்த சூழலில், 7 டிசம்பர் 2022 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5 ஆம் தேதியை "சர்வதேச நிராயுதபாணியாக்கம் மற்றும் பரவல் தடை விழிப்புணர்வு தினம்" என்று அறிவித்தது.
- நிராயுதபாணியாக்கம் மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வுக்கான முதல் சர்வதேச தினம் மார்ச் 5, 2023 அன்று அனுசரிக்கப்பட்டது.
தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் முக்கிய மந்திரி மகிளா சம்மன் யோஜனா திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது.
A) உத்திரப்பிரதேசம்
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
- TNPSC GK குறிப்புகள் தமிழ் JANUARY– 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் FEBRUARY – 2024
- TNPSC GK குறிப்புகள் தமிழ் MARCH– 2024
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
- MARCH AWARDS HONOURS 2024 IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில் -மார்ச்-2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024