உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2024

TNPSC PAYILAGAM
By -
0



உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2024

 List of Happiest Countries in the World 2024


2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

நார்டிக் தேசங்கள் : வழக்கம்போல் நார்டிக் தேசங்கள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள், கிரீன்லாந்து ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பகுதி நார்டிக் பிராந்தியமாக அறியப்படுகிறது. இந்த நார்டிக் பிராந்திய நாடுகள் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

மகிழ்ச்சியான நாடுகள் என்று வரையறுக்க சில காரணிகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. மக்கள் தங்கள் வாழ்க்கை மீது கொண்டுள்ள திருப்தி, ஜிடிபி வருவாய், சமூக ஒத்துழைப்பு, வாழ்நாள், சுதந்திரம், ஊழலின்மை, தாராள மனப்பான்மை ஆகியனவற்றை கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலில் தரவரிசை வழங்கப்படுகிறது. 

டாப் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்:

1. ஃபின்லாந்து

2. டென்மார்க்

3. ஐஸ்லாந்து

4. ஸ்வீடன்

5. இஸ்ரேல்

6. நெதர்லாந்து

7. நார்வே

8. லக்ஸம்பெர்க்

9. ஸ்விட்ர்சர்லாந்து

10. ஆஸ்திரேலியா

  • உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 23-ஆம் இடத்திலும், ஜெர்மனி 24வது இடத்திலும் இருக்கின்றன
  • இந்தியா கடந்த ஆண்டைப் போலவே 126-வது இடத்தில் உள்ளது.
  • 143 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் கடைசி இடத்தை (143-வது இடம்) பிடித்துள்ளது ஆப்கானிஸ்தான்.


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)