MARCH 2024 AWARDS HONOURS IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024

TNPSC PAYILAGAM
By -
0
MARCH 2024 AWARDS HONOURS IN TAMIL
MARCH 2024 AWARDS HONOURS IN TAMIL


 Introduction


Welcome to our blog post on "MARCH 2024 AWARDS HONOURS IN TAMIL", specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.

  1. National Affairs
  2. State Affairs
  3. Global News
  4. International Relations
  5. Economic Trends
  6. Political News
  7. Environmental Issues
  8. Science and Technology
  9. Economy & Banking
  10. Health and Science
  11. Social Issues
  12. Sports News
  13. Entertainment News
  14. Monthly News Digest
  15. Daily News Update
  16. World Events
  17. National News
  18. Awards and Honors 

We hope this roundup of "MARCH 2024 AWARDS HONOURS IN TAMIL" helps you in your preparation for competitive exams. Remember, staying updated with current affairs is crucial for anyone preparing for competitive exams or simply wanting to stay informed about global events.

2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள்:

தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

  • சிறந்த படமாக தனி ஒருவன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • சிறந்த நடிகராக ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • சிறந்த படத்துக்கான முதல் பரிசு தனி ஒருவன் படத்துக்கும், இரண்டாம் பரிசு பசங்க -2 என்ற படத்துக்கும், மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்துக்கும், 
  • பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்பு பரிசு 36 வயதினிலே திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சிறந்த நடிகராக இறுதிச்சுற்றுப்படத்தில் நடித்த ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் (36 வயதினிலே) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 27 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

டைலர் பரிசு 2024 :

  • சுற்றுச்சூழல் சார்ந்த சாதனைக்கான 2024 ஆம் ஆண்டு டைலர் பரிசு ஜோஹன் ராக்ஸ்ட்ரோம் என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.
  • இது கோள்களின் எல்லைக் கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தின் உருவாக்கத்திற்கு அவர் ஆற்றிய அற்புதமானப் பங்களிப்புகளையும் முன்னோடியான பணிகளையும் அங்கீகரிக்கிறது.
  • ராக்ஸ்ட்ரோம். போட்ஸ்டாம் பருவநிலை தாக்க ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் (PIK) இயக்குநராகவும், புவி ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார்.
  • கிரக எல்லைகள் என்பது பல்புவி அமைப்பு அறிவியல் துறைகளில் மேற்கொள்ளப் படும் சர்வதேச ஒத்துழைப்பாகும்.
  • இந்தக் கோட்பாடு ஒன்பது புவி அமைப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைகளை வரையறுக்கிறது.
  • உயிரினங்களைப் பாதுகாப்பதில் அவற்றின் நிலைத்தன்மை மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றின் அதீத முக்கியத்துவத்தை இவை வலியுறுத்துகின்றன.
  • மதிப்புமிக்க டைலர் பரிசு ஆனது, சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு என்று அறியப் படுகிறது

71வது உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்:

  • 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
  • 71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப் போட்டி இதுவாகும். மாலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.

ஆஸ்கர் 2024 - விருது:

  • கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் ஏழு விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.
  • ஆஸ்கர் 2024 - விருது வென்றவர்களின் முழு பட்டியல்:

சாகித்ய அகாடமி விருது 2024:
  • தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மமாங் தய் எழுதிய 'தி பிளாக் ஹில்'(THE BLACK HILL) என்ற நாவலை 'கருங்குன்றம்' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • TNPSC GK சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 2023-2024


பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் 2024:
  • பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார்
  • இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.


ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது 

  • 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி  பூடான் சென்ற நிலையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயிரய விருதான ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
  • பூடானை பொறுத்தமட்டில் ஆர்டர் ஆப் தி ட்ரூக் கியால்போ விருது என்பது வாழ்நாள் சாதனைக்கு அரசு சார்பில் வழங்கும் விருதாக உள்ளது. இதுதான் பூடானின் மிகவும் உயரிய விருதாக உள்ளது.


டயானா மரபு விருதுகள்

  • உலகில் மொத்தம் 20 பேருக்கு 'டயானா நினைவு விருது' வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் உதய் பாட்டியா மற்றும் மானசி குப்தா ஆகியோருக்கு 'டயானா நினைவு விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • உதய்யின் குறைந்த விலையிலான கண்டுபிடிப்பு ஆனது மின்வெட்டுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
  • பெருந்தொற்றுகளின் போது, மானசி குப்தா ஆற்றிய மனநலச் சேவைகளுக்கு நல்ல அங்கீகாரம் வழங்கப்பட்டு அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • இளவரசி டயானாவின் நினைவாக இந்த விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப் படுகிறது.
  • இந்த விருது உலகின் மகத்தான இளைஞர்களுக்கு அவர்களின் சமூகப் பணி அல்லது மனிதாபிமானச் சேவைகளுக்காக வழங்கப்படுகிறது


சரஸ்வதி சம்மான்‌ விருது
  • கேரளத்தைச்‌ சேர்ந்த கவிஞரும்‌ எழுத்தாளருமான பிரபா வர்மாவுக்கு 2023-ஆம்‌ ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான்‌ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அவர்‌ இயற்றிய ‘ ரெளத்ர சாத்விகம்‌ என்ற கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருதை வழங்கும்‌ கே.கே.பிர்லா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான்‌ விருது தமிழ்‌ எழுத்தாளர்‌ சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை இசை அகாடமி விருதுகள் 2024
  • சங்கீத கலாநிதி விருது – தோடூர் மடபுசி கிருஷ்ணா
  • சங்கீத கலா ஆச்சார்யா விருது – பரஸ்சலா ரவி (V. இரவீந்திரன் நாயர்) மற்றும் கீதா ராஜா
  • TTV விருது – நரசிம்மன் மற்றும் S.வெங்கடேசன் மற்றும் H.K.நரசிம்மமூர்த்தி
  • நிருத்ய கலாநிதி விருது – டாக்டர் நீனா பிரசாத்


விருதுகள் கௌரவங்கள் 2024 :


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)