TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-9

TNPSC PAYILAGAM
By -
0

 

அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்
TNPSC Model Online Test: A Comprehensive Guide


Introduction:

The Tamil Nadu Public Service Commission (TNPSC) exams are a crucial step for anyone looking to secure a government job in Tamil Nadu. One of the most effective ways to prepare for these exams is by taking model online tests. In this blog post, we will discuss the importance of these tests and where you can find them.

The Importance of Model Online Tests:

Model online tests are an invaluable resource for any TNPSC aspirant. They help you understand the exam pattern, manage your time effectively, and identify areas where you need improvement.

Where to Find Model Online Tests:

Model online tests are a key part of your TNPSC preparation strategy. They can help you familiarize yourself with the exam pattern, improve your speed and accuracy, and boost your confidence. So, start taking these tests today and step closer to your dream government job!

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-9

  1. உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
  2. தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
  3. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
  4. பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
  5. வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
  6. கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்
  7. பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
  8. உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
  9. மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
  10. முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
  11. மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
  12. மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
  13. வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
  14. தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
  15. போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
  16. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
  17. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
  18. தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
  19. அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
  20. மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
  21. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
  22. இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
  23. 1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
  24. திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
  25. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
  26. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
  27. மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
  28. நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
  29. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
  30. யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்? 20
  31. இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
  32. மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
  33. டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
  34. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
  35. அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
  36. அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
  37. இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
  38. ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
  39. தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
  40. சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
  41. அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
  42. இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
  43. பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
  44. இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
  45. 1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
  46. இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
  47. தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
  48. சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
  49. தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
  50. உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
  51. குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்
  52. இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்
  53. மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்
  54. வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று
  55. தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொடர்
  56. ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை
  57. முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்
  58. வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்
  59. பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்
  60. தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்
  61. தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்
  62. இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்
  63. மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை
  64. சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு
  65. ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
  66. டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்
  67. ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி
  68. 200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
  69. உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
  70. பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982
  71. எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
  72. காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915
  73. இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
  74. தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை
  75. .தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ
  76. .சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்
  77. கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி
  78. தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன்
  79. ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது? குளத்தங்கரை அரச மரம்
  80. குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்
  81. தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை
  82. மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை
  83. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா
  84. பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி
  85. நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை
  86. சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி
  87. தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்
  88. எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? ஒளி
  89. அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்
  90. நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா
  91. பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது? வைட்டமின்கள்
  92. தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்
  93. பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
  94. பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி
  95. மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா
  96. அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை
  97. புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்
  98. சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்
  99. பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்
  100. கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்
  101. அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்? கௌடில்யர்
  102. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்? முகமது பின் காசிம்
  103. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1757
  104. பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?1764
  105. முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?கிரண் பேடி
  106. தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது? கோதாவரி
  107. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்? சரோஜினி நாயுடு
  108. உலகிலேயே பெரிய காப்பியம் எது? மகாபாரதம்
  109. பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது? பாண்டூங்
  110. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல்
  111. எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார்
  112. இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்
  113. இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார்
  114. கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா
  115. கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார்
  116. .இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935
  117. முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?1951
  118. இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது? நெல்
  119. தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்
  120. இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%
  121. சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
  122. உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்
  123. தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
  124. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
  125. இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம்
  126. பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத்
  127. தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு
  128. இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
  129. ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
  130. இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
  131. இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
  132. பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்? ரஜினி ராய்
  133. அசாமின் தலைநகரம் எது? திஸ்பூர்
  134. இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்? கிருஷ்ணகாந்த்
  135. இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?யஷ்வந்த் சின்ஹா
  136. இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்? எல்.கே.அத்வானி
  137. பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி
  138. தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி
  139. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
  140. ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி
  141. .யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
  142. .அபு மலைத் தொடர் எங்கு உள்ளது? இந்தியா
  143. .இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது? பெங்களூர்
  144. .நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி
  145. வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது? மெய்யறிவு
  146. தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை
  147. மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்
  148. ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்
  149. இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்
  150. நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்
  151. நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா
  152. இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை
  153. கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்
  154. பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்
  155. இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை
  156. தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
  157. இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி
  158. முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1 ஏப்ரல் 1951
  159. தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர்
  160. கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்
  161. ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை
  162. ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது
  163. இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது? கோவா
  164. சமய சார்பற்ற நாடு எது? இந்தியா
  165. வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்
  166. வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
  167. நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்
  168. வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை
  169. கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல்
  170. விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்? மன்சூர் அலி பட்வாடி
  171. தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன? கோதாவரி
  172. திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்
  173. குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது? தமிழ்நாடு
  174. மிகப்பெரிய பாலைவனம் சகாரா
  175. சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது? ரஷ்யா
  176. மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?1949
  177. ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?250
  178. தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
  179. முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி
  180. நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?மீன் வளர்ப்பு
  181. இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது? கேரளா
  182. இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்
  183. இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில் கைத்தறித் தொழில்
  184. இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?1972
  185. விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி? கல்பனா சாவ்லா
  186. கானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால்
  187. ஒலி எதன் ஊடே பரவுவதில்லை? வெற்றிடம்
  188. ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்
  189. யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்
  190. சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட்
  191. காற்றில் பரவும் நோய் டீப்தீரியா
  192. முதல்நிலை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்கள்
  193. கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி
  194. பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள்
  195. பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்
  196. பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்
  197. பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்
  198. இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்
  199. இராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல்
  200. குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்

ஆதாரம் : சைதை துரைசாமி அறக்கட்டளை


TNPSC Model Online Test 

  1. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:1
  2. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:2
  3. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:3
  4. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:4
  5. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:5
  6. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:6
  7. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:7
  8. டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்:8


Post a Comment

0Comments

Post a Comment (0)