TNPSC TAMIL ELIGIBILITY TEST -5 |
TNPSC Tamil Eligibility Test Questions: A Comprehensive Guide
The TNPSC exam includes a Compulsory Tamil Eligibility Test, which assesses your knowledge of the Tamil language. To excel in this test, it’s essential to practice and understand the types of questions that may appear. In this article, we’ll explore the TNPSC Tamil Eligibility Test, its syllabus, and provide access to previous years’ questions.
1.உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல'
(A) வெளிப்படைத் தன்மை
(B) வெளிப்படையற்ற தன்மை
(C) மறைத்து வைத்தல்
(D) தன்னலமின்மை
விடை : (A) வெளிப்படைத் தன்மை
2.'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
(A) தெளிவாகத் தெரியாது
(B) தெளிவாகத் தெரியும்
(C) நிலைத்து நிற்கும்
(D) நிலைத்து நிற்காது
விடை : (C) நிலைத்து நிற்கும்
3.இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
(A) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
(B) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
(C) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
(D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
விடை : (C) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
4.குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
(A) சார்பு
(B) மருந்து
(C) கஃசு
(D)பசு
விடை : (D)பசு
5.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) மோனை
(B) எதுகை
(C) இசைவு
(D) இயைபு
விடை : (C) இசைவு
6.பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
(A) ஆழ்வார்கள்
(B) சித்தர்கள்
(C) நாயன்மார்கள்
(D) புலவர்கள்
விடை : (B) சித்தர்கள்
7.'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
(A) தாலாட்டுப்பாட்டு
(B) கும்மிப் பாட்டு
(C) பள்ளுப்பாட்டு
(D) வில்லுப் பாட்டு
விடை : (C) பள்ளுப்பாட்டு
8.'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
(A) நல்லாதனார்
(B) ஒட்டக்கூத்தர்
(C) காளமேகப் புலவர்
(D) குமரகுருபரர்
விடை : (C) காளமேகப் புலவர்
9.'மரமும் பழைய குடையும்' - ஆசிரியர்
(A) பாரதிதாசன்
(B) அழகிய சொக்கநாதப் புலவர்
(C) காளமேகப்புலவர்
(D) புதுமைப்பித்தன்
விடை : (B) அழகிய சொக்கநாதப் புலவர்
10.நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' -இக்கூற்று யாருடையது?
(A) அர்ச்சுனன்
(B) தருமன்
(C) சகாதேவன்
(D) நகுலன்
விடை : (A) அர்ச்சுனன்
TNPSC Tamil Eligibility Test Syllabus
- பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; புகழ் பெற்ற நூல் நாலாசிரியர். READ IT
- தொடரும் தொடர்பும் அறிதல் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.
- பிரித்தெழுதுக
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் [சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்], மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்.
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினனமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்குதல்.
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச் சொல்லின் வகையரிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிற, செய்வினை. செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்