தமிழின் தொன்மைக்கு உலகியல் ஆதாரங்கள்
- உலகில் பழமை வாய்ந்த மொழிகள் எனக் கருதப்படும் வடமொழி, சீனம். ஹீப்ரு, இலத்தீன், கிரேக்கம் ஆகியவற்றோடு வைத்து எண்ணப்படும் பெருமையுடையது தமிழ்மொழி கி.பி.10 ஆம் நூற்றாண்டில் எகிப்து நாட்டினை ஆண்டு வந்த சலமன் என்ற அரசனுக்குத் தமிழ் மன்னர்கள் கப்பல் மூலம் மயில் தோகை, யானைத் தந்தம், குரங்குகள், அகில் ஆகியவற்றை அனுப்பி வைத்தனர். தோகை துகில் என்றும், அகில் அஹலத் என்றும் குரங்கைக் குறிக்கும் கவி என்ற சொல் கபிம் என்றும், பழைய ஹீப்ரு மொழியில் உள்ள விவிலிய நூலில் காணப்படுகின்றன.
வாணிபத் தொன்மை
- பழந்தமிழ் நாட்டில் வாணிபம் வளர்ந்திருந்தது. கொடுப்பது குறைவுபடாது வாணிபம் செய்தனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பொருளீட்டினார்கள். நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு, முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை பயறு, கொள்ளு. எள்ளு, முதலிய பயறு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.
- பண்டைத் தமிழரின் கடல் வாணிகமும் தொன்மை வாய்ந்தது. தமிழகத்தில் துறைமுகப் பட்டினங்கள் பல இருந்தன. பொன், மணி, முத்து, துகில் கொண்டு கடல் கடந்து வாணிபம் செய்தனர். பூம்புகார் வணிகர்கள் வாழும் இடமாகத் திகழ்ந்தது. தமிழர்களுக்காக சாவக நாட்டுடனும் கடல் வாணிபத் தொடர்பு இருந்தது.
- பண்டைய காலத்து வாணிபப் பொருட்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். பட்டினப் பாலையும், மதுரைக் காஞ்சியும் அவற்றை அழகுறக் கூறுகின்றன.
- கிரேக்கர்களோடு கொண்டிருந்த வாணிபத் தொடர்பால் அரிசி ஓரசா என்றாகிப் பின் 'ரைஸ்' என்று ஆங்கிலத்திற்கு மாறியது.
- தமிழர்கள் உரோம் நாட்டுடன் வாணிபத் தொடர்பு செய்தனர். தமிழ் நாட்டு முத்துக்களையும் தந்தங்களையும் வாங்கியதால் ஆண்டுதோறும் உரோமிலிருந்து ஒரு மில்லியன் பவுன்கள் தமிழகத்திலிருந்து தந்ததாக பிளினி எழுதியுள்ளார். பிளின், பெரிப்ளுசு நூலின் ஆசிரியர், தாலமி ஆகியோர் தமிழகத்திற்கு வந்தது பற்றி தங்களது பயணக் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளார்.
- அயோத்தி மன்னன் தசரதன் பேரவைக்கு பாண்டிய மன்னன் வந்திருந்தான் என வால்மீகி இராமாயணத்தில் குறித்துள்ளார்.
- பாரதப் போரில் பாண்டவர்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆதரித்ததாக வியாசர் எழுதியுள்ளார்.
- சந்திர குப்த மௌரிய காலத்தில் கி.மு.4 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனிஸ் பாண்டிய அரசு பற்றி தன் 'இண்டிகா' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மௌரியப் பேரரசன் அசோகன் சேர,சோழ, பாண்டியர்களைத் தன் நண்பர்களாகக் கல்வெட்டுகளில் குறித்து வைத்துள்ளார்.
- முதல் மாந்தன் தோன்றிய இடமான குமரிக் கண்டத்தில், மனிதன் பேசிய மொழியே தமிழ்மொழிதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
- அக்குமரிக் கண்டத்தில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள் அமைத்து மொழியை வயர்த்ததை தமிழர் இந்நிலப்பகுதி கடல்கோளால் கொள்ளப்பட்டதால் முதல் தமிழ்ச்சங்கம் தென்மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிகழ்வுகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
தொன்மைக்கான இலக்கியச் சான்றுகள்
- வரலாற்றாசிரியர் பலரும் கிறித்தவ மொழி தொடங்குவதற்கு முன்பே மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்திருக்க வேண்டும் என்று நல்குகின்றனர். தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இந்தியாவில் மரபுச் செய்திகள் தமிழைத் தவிர வேறு எங்கும் இல்லை என்ற தனிநாயகம் அடிகளின் ஏற்றுக்கொள்ளக்கூடியது. கூற்று அனைவரும்
- 'தமிழ்கெழுகூடல்' என்ற புறநானூறும், 'தமிழ்வேலி' என்ற பரிபாடலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்றன. உழவுக்குச் சிறப்பு பெற்ற நிலம் மருத நிலம் வயலும் வயல் சார்ந்த இடமாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. மருத நிலத்துப் பெருமை கருதியே வேந்தனை முதன்மைப்படுத்தினர் தமிழர்.
குறிப்பு
- சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தரின் வரலாற்றில் அவர் இளமையில் தமிழ் கற்றார் என்பது பதிவாகி உள்ளது.
இசைக் கலைச் சான்றுகள்
- உலக மொழி உருவம் பெறுவதற்கு முன்பே இசை பிறந்து விட்டது. பண்டைய காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பண்கள், இசைக் கருவிகள், இசைக் கலைஞர்கள், இசைப்பாடல்கள் 61601 இசை பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன.
- ‘நரம்பின் மறைய' என்று தொல்காப்பியம் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணர முடிகிறது. பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை, நாடகக் கலைஞர்கள் இருந்தமையும் அறிய முடிகிறது. 'தாலாட்டு' என்பது குழந்தையைத் தொட்டிலிட்டு பாடுவது ஆகும். ஒப்பாரி என்பது இவருக்கு ஒப்பார் எவருமிலர் என்று இறந்தவரைப் பற்றி பாடுவது.
- இன்றைய கர்நாடக இசைக்குத் தாய் தமிழே, பண்ணொடு தமிழொப்பாய் என்னும் தேவாரப் பண்ணும். தமிழும் பிரிக்க முடியாதென்று நவிலும், தமிழர் ஐவகை நிலத்திற்கும், ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்.
நிலைத்த மொழி
- இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் பலவாகும். இவற்றுள் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிலவே. வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள்
- அவை தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஈப்ரூ, கிரேக்கம் ஆகியவை.
- இவற்றுள் ஈப்ரூவும், இலத்தீனும் வழக்கிலிருந்து போய்விட்டது. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஒரு மொழி நிலைத்து நிற்க பழமையும் வளமையும் மட்டும் போதாது. அம்மொழி பேச்சு மொழியாக, எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக நிலைபெற வேண்டும்.
- இவை எல்லாவற்றிற்கும் மேலாக மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகுதியாக உள்ளது.
- செந்தமிழ் இலக்கியங்களும், இலக்கணங்களும் காட்டும் அத்துணை உயர்ந்த மொழி பேச்சு மொழியாக இருந்திருக்காது என்கிறார் கால்டுவெல். ஏனெனில் பேச்சு மொழியிலிருந்துதான் இலக்கிய மொழியைப் புலவர்கள் உருவாக்கி இருக்க முடியும்.
- சங்க இலக்கியம் செவ்வியல் இலக்கியமாக இருப்பதால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பேச்சு வடிவம் இருந்திருக்க வேண்டும்.
- அதாவது பேச்சுமொழி - இலக்கியம்- இலக்கணம் என்ற வரிசையில் தோன்றும்
தமிழ் மொழியின் சிறப்பு
- தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை நீக்கி விட்டாலும் இயங்கும் அளவிற்கு மிகுதியான வேர்ச்சொற்களைக் கொண்டது தமிழ்மொழி ஆகும். கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகளுக்குத் தாயாக விளங்குவது தமிழ்மொழியாகும். 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும் 180 மொழிகளுக்கு உறவுப் பெயர்களையும் தந்து உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது.
- தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அகம், புறம் என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளது. திருக்குறள் மூலமாக வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளது. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் 26, 350 ஆகும். இந்த அளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை என்று மொழியியல் அறிஞர் கபில்சுவலபில் கூறுகின்றார்.
முனைவர் எமினோவின் கூற்று
- ஒரு மொழிக்கு 33 ஒலிகள் இருந்தாலே போதும். ஆனால் தமிழ் மொழி 500 ஒலிகளைக் கொண்டுள்ளது. எக்காலத்திற்கும் பொருந்தும் மொழியியல் கோட்பாடுகளைப் பெற்றுள்ள தமிழ்மொழி காலப் புதுமைக்கும் கணினிப் பயன்பாட்டிற்கும் ஏற்றதாகும்.
செம்மொழித் தமிழ்
செந்தமிழ் என்ற சொல் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. (எச்ச நூ 1) இலக்கண நெறிப்படி அமைந்த சொல், தொடர் செந்தமிழ் ஆகும். செந்தமிழுக்கு எதிர்மறை கொடுந்தமிழ். அதாவது இலக்கண நெறியிலிருந்து சிதைந்த சொல், தொடர் கொடுந்தமிழ் ஆகும். கொடுந்தமிழ் என்ற சொல்லை முதன் முதலாக இலக்கண உரையாசிரியரான இளம்பூரணர் என்பவர் பயன்படுத்தியுள்ளார்.
செம்மொழித் தமிழிற்கான முயற்சிகள்
- தமிழ்மொழி ஓர் உயர்தனிச் செம்மொழி என முதன்முதலாக கூறியவர் கால்டுவெல் (1856)
- தமிழிற்கு செம்மொழித் தகுதி கோரிய முதல் தமிழர் பரிதிமாற் கலைஞர் (1887)
- மதுரைத் தமிழ்ச் சங்க 'செந்தமிழ்' மாத இதழில் பரிதிமாற் கலைஞரின் 'உயர்தனிச் செம்மொழி' என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. (1901)
- மேலைச் சிவபுரி சன்மார்க்க தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றி அதை இந்திய அரசுக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தியது. (1918) மேலும் சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் திர்மானம் நிறைவேற்றியது.
- கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தமிழவேள் உமாமகேசுவரனார் (1923).
- தமிழின் செம்மொழித் தகுதிகளைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டி விளக்கியவர் தேவநேயப்பாவாணர் (1966)
- தமிழின் செம்மொழித் தகுதிகளை திட்ப நுட்பத்துடன் வரையறுத்து அவற்றைத் தமிழிற்கு பொருத்தி விரிவாக ஆய்வு செய்தவர் மணவை முஸ்தபா. (1977)
- தமிழ் செம்மொழி குறித்த வரலாற்றுச் சிந்தனையைத் தூண்டியவர் ஆறு.அழகப்பன் (2000)
- பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கேட்டுக் கொண்டதற்கு இணங்கத் தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய அறிக்கையைக் கட்டுரை வடிவில் மத்திய அரசுக்குத் தெரிவித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஜார்ஜ். எல். ஹார்ட் (2000)
- நிறைவாக நடுவண் அரசு செம்மொழியாக அறிவித்தது 12.10.2004 ஆகும்.
செம்மொழித் தகுதிகள்:
1. தொன்மை
2. பிறமொழித் தாக்கமின்மை
3. தாய்மை
4. தனித்தன்மை
5. இலக்கிய வளம் இலக்கணச் சிறப்பு
6. பொதுமைப் பண்பு
7. நடுவு நிலைமை
8. பண்பாட்டு கலை பட்டறிவு வெளிப்பாடு
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
11. மொழிக் கோட்பாடு
இதனை வரையறுத்துக் காட்டியவர்கள் மணவை முஸ்தபா அவர்களும், பிற மொழியில் அறிஞர்களும் ஆவர்.
உயர்தனிச் செம்மொழி:
- "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயர்மொழி" -என்று தமிழின் பெருமையை பறைசாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
- திருந்திய பண்பும். சீர்த்த நாகரீகமும் பொருந்திய நூல்மொழி தமிழ்ச் செம்மொழியாம் என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் கலைஞர். பரிதிமாற்
செம்மொழி என்று நிறுவிய நூல்கள்:
1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கால்டுவெல் டாக்டர்
2.சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே முனைவர் ச. அகத்தியலிங்கம்.
3. செந்தமிழ் -முனைவர் பொற்கோ
4. செம்மொழி வரிசையில் தமிழ் சாமுவேல். முனைவர் ஜான்
5. தமிழ்ச் செவ்வியல் மொழி மலையமான். முனைவர்
6. உள்ளும் புறமும் மணவை முஸ்தபா
7. தமிழின் செம்மொழித் தகுதிகள் முஸ்தபா மணவை
8. தமிழ்ச் செம்மொழி ஏன்? எதற்கு? முனைவர் கு.வே. பாலசுப்ரமணியன்
9. தமிழ்ச் செம்மொழி ஆவணம் இளந்திரையன் பேரா.சாலிவி
10. செம்மொழி வரலாற்றில் கலைஞர் கருணாநிதி செப்பேடுகள்
11. THE GLORY OF TAMIL ALAGAPPAN. - DR. AARU.
12. TAMIL A CLASSICAL LANGUAGE RATHINA SWAMI S.
13. THE PRIMARY CLASSICAL OF THE WORLD G.DEVANEYA PAVANAR.
செம்மொழி அறிவிப்பால் தமிழிற்கு கிடைக்கும் நன்மைகள்:
1. பல்கலைக்கழக மானியக் குழு (UNIVERSITY GRANT COMMISION) தமிழைச் செம்மொழியாக ஏற்கும். இதனால் மொழிப்பாடம் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கெனத் தனித்துறை ஏற்படும்.
2. உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டிலேயே பல்கழைக்கழக அளவில் தமிழைக் கற்க முடியும்.
3. சமஸ்கிருத ஆண்டு கொண்டாடப்பட்டதைப் போன்று தமிழ் ஆண்டு கொண்டாடப்படும்.
4. மத்திய அரசு தமிழின் பன்முக வளர்ச்சிக்குத் தனியாக நிதி ஒதுக்கும்.
5. ராக்பெல்லர் பௌண்டேசன், ஃபோர்டு பௌண்டேசன் போன்ற அற நிறுவனங்கள் செம்மொழி ஆய்வுக்கு ஒதுக்கும் நிதியுதவி இனித் தமிழ் மொழி ஆய்வுக்கும் கிடைக்கும்.
6. தமிழ்ப் பேரகராதி செம்மைப்படுத்தப்படும்.
7. தமிழை அளவுகோலாகக் கொண்டு பழைய கல்வெட்டுகளும், சுவடிகளும் ஆராயப்படும். செப்பேடுகளும், ஓலைச்
8. தமிழில் உள்ள சிறந்த இலக்கிய, இலக்கண நூல்கள் மேலைநாட்டு கீழைநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.
9. தமிழைப் பிற செம்மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகள் நடைபெறும்.
10. பல புதிய ஆய்வுகளால் தமிழிற்குப் பல புதிய ஆய்வு முடிவுகள் கிடைக்கும்.
முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுத் தகவல்கள்:
1. மாநாடு நடந்த இடம் கோயம்புத்தூர்.
2. மாநாடு நடந்த நாட்கள் 23.06.2010 முதல் 27.06.2010 வரை ஐந்து நாட்கள்
3. மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டில்
4. மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றியவர் தமிழக ஆளுநர் காஜித்சிங் பானாலா.
5. மாநாட்டின் தொடக்க விழாவிற்கு தலைமை ஏற்றவர் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி
6. வாழ்த்துறை வழங்கியவர்கள் ஜார்ஜ் எல்.ஹார்ட் (அமெரிக்கா) வா.செ. குழந்தைசாமி கா.சிவத்தம்பி (இலங்கை) (இந்தியா)
7. மாநாட்டின் மைய நோக்கப் பாடலை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி
8. உலகச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத் தொடக்க விழா நடந்த நாள் 24.06.2010
9. ஆய்வரங்கத் தொடங்கி வைத்தவர் முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதி
10. ஆய்வரங்கைச் சிறப்பு மலரை வெளியிட்டவர் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன்
11. ஆய்வரங்கத் தொடக்க விழாவிற்குத் தலைமை ஏற்றவர் கா.சிவத்தம்பி
12. மாநாட்டிற்காகச் செயல்பட குழுக்கள் 21
13. ஆய்வரங்கில் கலந்து கொண்ட மொத்த அறிஞர்கள் 961 (அயல்நாடு 215, இந்தியா 746)
14. முதல் செம்மொழி தமிழ் விருது (கலைஞர் பெயரில்) பெற்றவர் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியா அஸ்கோ பார்கோலா விருதை வழங்கியவர் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டில்.
விருது வழங்கியதற்கான காரணம் : "சிந்துவெளி நாகரீகத்தின் எழுத்தும் பண்பாடும் திராவிடர்களுக்குரியது" என்னும் கருதுகோளை ஆய்வு சான்றுகளுடன் ஆராய்ந்து நிறுவியமை, விருது மதிப்பு ரூபாய் 10 இலட்சம் மேலும் ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலை.
செம்மொழி மாநாட்டின் தீர்மானங்கள்:
1. ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும்.
2. இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்வதற்கு முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
3. செம்மொழியாம் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும். மத்தியில்
4. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
5. தமிழ்மொழி வளர்ச்சிக்கும். ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத் தொகை வழங்கப்படும்.
6. இந்திய தேசிய கல்வெட்டியில் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
7. பூம்புகார், குமரிக் கண்டம் ஆகிய இடங்களில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்.
8. தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்பது முழுமையாக நிறைவேற வேண்டும்.
9. தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் முன்னுரிமை அளிக்க சட்டம் இயற்றப்படும். பணியில்
10. பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் 'தமிழ்ச் செம்மொழி' என்ற தலைப்பு சேர்க்கப்படும்.
11. மதுரையில் தொடங்கப்பட்ட தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்' குறிப்பிட்ட இடைவெளியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தும்.
12. 2010-இல் செம்மொழி மாநாட்டில் ஆய்வு மையம் மற்றும் நூலகம் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் (பழைய தலைமை செயலகம்) தொடங்கப்பட்டது.
13. உலகச் செம்மொழி மாநாட்டில் தமிழ் இணைய மாநாட்டைத் தொடங்கிவைத்தவர் சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்.
செம்மொழித் தமிழில் தோன்றிய இலக்கியங்கள் 'செவ்வியல்' பண்பு பெற்று விளங்குகின்றன
குறிப்பு:
'செம்மொழி' என்பது செம்மையான மொழி
(Language) என்ற பொருளில் அமைவது. 'செவ்வியல்' என்பது செம்மையான இலக்கியம் (Literature) என்ற பொருளில் அமைவது ஆகும்.
இலக்கிய செவ்வியல் தன்மைகள்:
1. தொன்மை
2. முன்மை
3. எளிமை
4. ஒளிமை
5. இளமை
6. வளமை
7. தாய்மை
8. தூய்மை
9. செம்மை
10. மும்மை
11. இனிமை
12. தனிமை
13. பெருமை
14. திருமை
15. இயன்மை
16. வியன்மை
என்று 16 தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது.
- ஆக செம்மொழிப் பண்புகள் 11
- செவ்வியல் நூல்கள் 16 ஆகும்.
- செவ்வியல் நூல்கள் 41 ஆகும்.
அவை
1.இலக்கண நூல்கள் 2
- தொல்காப்பியம்
- இறையனார் களவியல் உரை
2.சங்க இலக்கியம் (மேற்க்கணக்கு நூல்கள்) 18
- பத்துப்பாட்டு நூல்கள் 10 நூல்கள், எட்டுத்தொகை 8
3. பதினெண் கீழ்க்கணக்கு 18
- 18 நூல்கள் கொண்டது
4. காப்பியங்கள் - 2
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
5. சிற்றிலக்கியம் - 1
முத்தொள்ளாயிரம் ஆகியவை ஆகும். மேற்கண்ட 41 இலக்கிய நூல்கள் செவ்வியல் கொண்டதாக தன்மை அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட மொழி தொடர்பான செய்திகள்:
இந்தியாவில் அனைத்தையும் பேசப்படும் மொழிகள்
1. இந்தோ-ஆசிய மொழிகள்
2. திராவிட மொழிகள்,
3. ஆஸ்திரேலிய ஆசிய மொழிகள், சீன திபெத்திய மொழிகள் என மொழியியல் அறிஞர்கள் நான்கு மொழிக் குடும்பங்களில் அடக்குவர். மூல மொழியில் இருந்து தோன்றியவை கிளை மொழிகள் இதனைப் பொதுத்தன்மையின் அடிப்படையில் அவற்றை ஒரே மொழிக் குடும்பமாக அடக்குவர். இந்திய நாட்டை மொழிகளின் காட்சி சாலை எனக் குறிப்பிட்டுள்ளார். மொழியியல் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம். இந்தியாவில் மொத்தம் 12 மொழிக் குடும்பங்கள் உள்ளன.
திராவிடக் குடும்பங்கள்:
இருபத்து மூன்றுக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன.
1. தென் திராவிட மொழிகள்
2. நடு திராவிட மொழிகள்
3. வட திராவிட மொழிகள்
என மூன்று குடும்பங்கள் உள்ளன. அவற்றுள்,
1. தென் திராவிட மொழிகள்:
1. தமிழ்
2. மலையாளம்
3. கன்னடம்
4. காத்தா
5. துளு
6. தோடா
7. இருளா
8. கொரகா
9. குடகு
2. நடு திராவிட மொழிகள்:
1. தெலுங்கு
2. கோண்டி
3. கோயா
4.கூலி
5. பாஜி
6. கோலாமி
7. கோண்டா
8. கதயா
9. பெங்கோ
10. ஜதடி
3. வட திராவிட மொழிகள்:
1. குரூக்
2. மால்தோ
3. பிராகூல்
ஆகியவை ஆகும் இவற்றுள் தமிழ், தெலுங்கு. மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிட மொழிகள் ஆகும்.
திராவிடம் :
- திராவிட என்னும் சொல்லே தமிழ் என்னும் சொல்லிலிருந்து உருவானதாகும். என்று ஈராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார்
- தமிழ் -திரமிள- திரவிட என உருவானதாக அவர் கூறுகின்றார்.
- திராவிடம் என்ற சொல்லை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் கால்டுவெல் திராவிட பேசிய மொழியே திராவிட மொழி ஆகும்.
- திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரீகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- திராவிட மொழிகளுள் தொன்மையான பண்பட்ட மொழி தமிழே. மிகவும்
இந்தியத் திராவிட மொழிகள் ஆறு:
1. தமிழ்
2. தெலுங்கு
3. மலையாளம்
4. கன்னடம்
5. துளு
6. குடகு
மொழிகள் வழங்கி வரும் இடத்தைப் பொருத்து தென் திராவிடம், வட திராவிடம் என்று பிரிப்பர்.
TNPSC KEY POINTS : தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு
1. உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?
Answer: ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவை
2. மனிதனை பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது?
Answer: மொழி
3. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு எது?
Answer: மொழி
4. தமிழில் மிகப் பழமையான நூல் எது?
Answer: தொல்காப்பியம்
5. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?
Answer: பாரதியார்
6. 'என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று தமிழ்த்தாயின் தொன்மையை பாடியவர் யார்?
Answer: பாரதியார்
7. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து?
Answer: உயிர்மெய்
8. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களாகவே அமையும்?
Answer: வலஞ்சுழி
9. வலஞ்சுழி எழுத்துக்கள் எவை?
Answer: அ, எ, ஒள, ண, ஞ
10. இடஞ்ச்சுழி எழுத்துக்கள் எவை?
Answer: ட, ய, ழ
11. "தமிழின் கிளவியும் அதனோ ரற்றே" தமிழ் என்ற சொல்லை குறிப்பிடும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
12. தமிழ் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
Answer: தொல்காப்பியம்
13. தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
Answer: சிலப்பதிகாரம்
14. "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: சிலப்பதிகாரம்
15. தமிழன் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
Answer: அப்பர் தேவாரம்
16. "தமிழன் கண்டாய்" என்ற சொல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
Answer: அப்பர் தேவாரம்
17. சீர்மை என்பது எதனை குறிக்கும்?
Answer: ஒழுங்கு முறை
18. அல் + திணை என்பதன் பொருள் என்ன?
Answer: உயர்வு அல்லாத திணை
19. திணைகள் எத்தனை?
Answer: இரண்டு (உயர்திணை, அஃறிணை)
20. பாகற்காய் என்பதன் பொருள் என்ன?
Answer: பாகு அல்லாத காய்
21. பாகற்காய் எவ்வாறு பிரிவும்?
Answer: பாகு + அல் + காய்
22. தமிழ்மொழியில் பலவகை சீரமைகளில் குறிப்பிடத்தக்கது எது?
Answer: சொற்பிறப்பு
23. தமிழில் மிகுந்துள்ள நூல்கள் எவை?
Answer: தொல்காப்பியம், நன்நூல்
24. சங்க இலக்கியங்கள் எவை?
Answer: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
25. தமிழில் உள்ள அறநூல்கள் எவை?
Answer: திருக்குறள், நாலடியார்
26. பூப்பது முதல் காய்ப்பது வரை எத்தனை நிலை உண்டு?
Answer: 7
27. "மா" என்ற சொலின் பொருள் என்ன?
Answer: மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
28. பூவின் ஏழு நிலைகள் எவை?
Answer: அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
29. தமிழின் தற்போதைய வளர்ச்சி என்ன?
Answer: அறிவியல் தமிழ், கணினி தமிழ்
30. ஆல், அரசு, மா, பலா, வாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?
Answer: இலை
31. அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?
Answer: கீரை
32. அருகு, கோரை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?
Answer: புல்
33. நெல், வரகு போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?
Answer: தாள்
34. மல்லி செடியின் இலைப்பெயர் என்ன?
Answer: தழை
35. சப்பாத்திக்கள்ளி, தாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?
Answer: மடல்
36. கரும்பு, நாணல் போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?
Answer: தோகை
37. பனை, தென்னை போன்ற மரத்தின் இலைப்பெயர் என்ன?
Answer: ஓலை
38. கமுகு மரத்தின் இலைப்பெயர் என்ன?
Answer: கூந்தல்
39. தமிழ் எண்கள்
Answer: 1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சா, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - க0
40. தமிழின் சிறப்பு பெயர் என்ன?
Answer: முத்தமிழ்
41. உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?
Answer: இசைதமிழ்
42. எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?
Answer: இயல் தமிழ்
43. நாடகத்தமிழ் எதை நல்வழிப்படுத்தும்?
Answer: உணர்வில் கலந்த வாழ்வை
44. சமூக ஊடகங்கள் எவற்றில் பயன்படத்தக்க மொழியாக திகழ்கிறது தமிழ்மொழி?
Answer: செய்தித்தாள், தொலைக்காட்சி
45. கணினி மொழிக்கும் ஏற்ப நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள நூல் எது?
Answer: தொல்காப்பியம், நன்நூல்
46. தமிழ்க் கவிதை வடிவங்கள் எவை?
Answer: துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
47. தமிழ் உரைநடை வடிவங்கள் எவை?
Answer: கட்டுரை, புதினம், சிறுகதை
48. வேளாண்மை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: கலித்தொகை - 101, திருக்குறள் - 81
49. உழவர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: நற்றிணை - 4
50. பாம்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: குறுந்தொகை - 239
51. வெள்ளம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: பதிற்றுப்பத்து - 15
52. முதலைஎன்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: குறுந்தொகை - 324
53. கோடை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: அகநானூறு - 42
54. உலகம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: தொல்காப்பியம், கிளவியாக்கம் - 56, திருமுருகாற்றுப்படை - 1
55. மருந்து என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: அகநானூறு - 147, திருக்குறள் - 952
56. ஊர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: தொல்காப்பியம், அகத்திணையியல் - 41
57. அன்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: தொல்காப்பியம், களவியல் - 110, திருக்குறள் - 84
58. உயிர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: தொல்காப்பியம், கிளவியாக்கம், திருக்குறள்
59. மகிழ்ச்சி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: தொல்காப்பியம், கற்பியல், திருக்குறள்
60. மீன் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: குறுந்தொகை
61. புகழ் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: தொல்காப்பியம், வேற்றுமையியல் - 71
62. அரசு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: திருக்குறள் - 554
63. செய் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: குறுந்தொகை - 72
64. சொல் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: தொல்காப்பியம், புறத்திணையியல் - 75
65. பார் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: பெரும்பாணாற்றுப்படை
66. ஒழி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: தொல்காப்பியம், கிளவியாக்கம் - 48
67. முடி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?
Answer: தொல்காப்பியம், வினையியல்
68. "நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
Answer: கவிஞர் அறிவுமதி
69. "வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
Answer: கவிஞர் அறிவுமதி
70. 'தொன்மை' என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: பழமை
71. 'இடப்புறம்' என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் என்ன?
Answer: இடம் + புறம்
72. 'சீரிளமை' என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் என்ன?
Answer: சீர்மை + இளமை
73. சிலம்பு + அதிகாரம் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?
Answer: சிலப்பதிகாரம்
74. கணினி + தமிழ் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?
Answer: கணினித்தமிழ்
75. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எதன் அடிப்படையில் வடிமைக்கப்பட வேண்டும்?
Answer: எண்கள்