APRIL 2024 - LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2024 IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2024 IN TAMIL


Here’s a comprehensive list of important days and dates for the month of April 2024, specifically relevant for competitive exams. Understanding these dates can enhance your general awareness and boost your exam preparation.


ஏப்ரல் 2024 இன் முக்கியமான நாட்கள் மற்றும் தேதிகளின் பட்டியல் தமிழில் 
LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2024 IN TAMIL


ஏப்ரல் 1 :


குருட்டுத்தன்மை தடுப்பு வாரம் (Prevention of Blindness Week):

  • ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை, பார்வையற்றோர் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கடைபிடிக்கப்படுகிறது.
  • 1960 ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜ் குமாரி அம்ரித் கவுர் ஆகியோர் பார்வையற்றோர் தடுப்புக்கான தேசிய சங்கத்தைத் தொடங்கினர் . இது ஒரு தன்னார்வ அமைப்பாகும் , இது நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறது மற்றும் குருட்டுத்தன்மையை எதிர்த்துப் போராட மற்ற குழுக்களுடன் இணைந்து செயல்படுகிறது. குருட்டுத்தன்மையை ஒழிக்க உலக வங்கியிடம் கடன் வாங்கிய முதல் நாடு இந்தியா .
ஒடிசா நிறுவன தினம்:Odisha Foundation Day
  • ஒடிசா 87வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது, இது உத்கல் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 1, 1936 அன்று ஒடிசா தனி மாகாணமாக உருவானதன் நினைவாக ஒடிசா நிறுவன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 
  • 1936 ஆம் ஆண்டில், மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவாகும். 
  • சர் ஜான் ஹப்பக் என்பவர் இந்த மாநிலத்தின் முதல் ஆளுநராக இருந்தார்.
  • முன்னதாக, இது பீகாரின் ஒரு பகுதியாக இருந்தது.
  • 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலம் தனி மாகாணமாக மாறியது.
  • இந்த மாநிலம் முதலில் ஒரிசா என்று அழைக்கப்பட்டது.
  • பாராளுமன்றமானது 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரிசா மசோதா மற்றும் 96வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஆகியவற்றினை இயற்றி, இதன் பெயரினை ஒடிசா என மாற்றியது.

ஏப்ரல் 2 :

உலக மதியிறுக்க விழிப்புணர்வு World Autism Awareness Day :
  • மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளைக் கொண்டாடுவதற்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் (உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்)இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • மதியிறுக்கம் என்பது தகவல் தொடர்பு மற்றும் சமூகம் சார்ந்த தகவல் தொடர்பு ஆகியவற்றினைப் பாதிக்கின்ற நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
  • மதியிறுக்கம் என்பது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும் குறைப்பாட்டு நிலை என்பதையும், அதற்கு சிகிச்சை இல்லை என்பதையும் நினைவூட்டுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Autistic Voices" என்பதாகும்.
 சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு தினம்  International Fact-Checking Day :
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி உண்மைச் சரிபார்ப்பு நாளாகக் குறிக்கப்படுகிறது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் துல்லியமான தகவல்களின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் ஒரு உலகளாவிய முன்முயற்சி நாள். 
  • உலகெங்கிலும் உள்ள உண்மைச் சரிபார்ப்பாளர்களின் முக்கிய வேலையை அங்கீகரிப்பது
  • சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு தினம் என்பது பத்திரிகையில் உண்மைச் சரிபார்ப்பு மற்றும் உண்மையைப் பற்றி ஆர்வமுள்ள பலதரப்பட்ட தனிநபர்களின் குழுவைச் சேகரிக்கும் நாளாகும்
  • 2016 ஆம் ஆண்டு IFCN ஆல் முதல் சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு தினம் தொடங்கப்பட்டது
சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் International Children's Book Day:
  • சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் தேதி வாசிப்பை வலியுறுத்தியும், உலகளவில் புத்தகங்கள் மீது குழந்தைகளுக்கு காதலை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்பவரின் பிறந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. 
  • உங்கள் கற்பனைக்கு சிறகு கொடுத்து கடல் கடந்து செல்லுங்கள்’ ("Cross the Seas on the Wing of your Imagination"  ) என்பது கருப்பொருளாகும்.
  • இளையோர்களுக்கான புத்தகங்களுக்கான ஜப்பான் வாரியம் (UBBY) ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் அதிகாரப்பூர்வ நிதி ஆதரவாளராக உள்ளது.
  • முதல் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் ஆனது 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.

ஏப்ரல் 4:

சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு International Day of Mine Awareness:
  • இந்த நாள் கண்ணிவெடிகளின் வகைதொகை கண்டறியா தன்மை மற்றும் போரில் வெடிக்காத எஞ்சிய கண்ணி வெடிகள் (ERW) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு. "உயிர்களைப் பாதுகாத்தல், அமைதியை உருவாக்குதல்"என்பதாகும்
  • 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் தேதியன்று, கண்ணிவெடி பயன்பாட்டுத் தடை ஒப்பந்தம் என்றும் அழைக்கப் படும் ஒட்டாவா ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமானது, மனிதக் கொல்லி கண்ணி வெடிகளின் பயன்பாடு, கையிருப்பு, உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தைத் தடை செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டது.
  • டிசம்பர் 8, 2005 அன்று  கண்ணிவெடித் தடை மாநாடு நடைபெற்றது. இதில் 164 நாடுகளில் கையொப்பமிட்டு  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 2006 ஏப்ரல் 4 அன்று முதல்,  ‘கண்ணிவெடிகள் விழிப்புணர்வு மற்றும் கண்ணிவெடி மீட்பு நடவடிக்கை உதவிக்கான சர்வதேச தினம்’ கொண்டாடப்படுகிறது. இது உலகம் முழுவதும் வெடிக்கும் கண்ணிவெடி மற்றும் தீங்கு விளைவிக்கும் புதை பொருட்களால் பாதிக்கப்பட்ட மக்களை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் அனுசரிக்கப்படுகிறது.

ஏப்ரல் 5:

தேசிய கடல்சார் தினம்  National Maritime Day :
  • இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான எஸ்.எஸ். லாயல்டி (Loyalty) மும்பையிலிருந்து லண்டனுக்குப் பயணித்தது. இதனை 1919இல் சிந்தியா கப்பல் கம்பெனி (Scindia Steam Navigation Company Ltd) முதல் பயணத்தைத் துவக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது. அதனை நினைவுகூறும் வகையில் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் முறையாக கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது
  • சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கப்பல்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கப்பல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில் கப்பல் போக்குவரத்துத்துறை முன்னோடியாக உள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 90 சதவீதம் துறைமுகங்கள் மூலமே நடக்கிறது. கப்பல்துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச மனசாட்சித் தினம்  International Day of Conscience :
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதியன்று முதல் சர்வதேச மனசாட்சித் தினம் கொண்டாடப் பட்டது.
  • உலக அமைதி மற்றும் அன்பின் கூட்டமைப்பு (FOWPAL) பிப்ரவரி 5, 2019 அன்று நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச மனசாட்சியின் பிரகடனத்திற்கான உலகளாவிய பிரச்சாரத்தை துவங்கியது. தொடர்ந்து பஹ்ரைன் இராச்சியம் ‘அன்பு மற்றும் மனசாட்சியுடன் அமைதி கலாசாரத்தை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் ஒரு வரைவு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) அதன் 73வது அமர்வில், ஜூலை 25, 2019 அன்று, அந்த வரைவுத் தீர்மானத்தை ஏற்று, ஏப்ரல் 5ம் தேதியை சர்வதேச மனசாட்சி நாளாக அறிவித்தது
  • மனசாட்சி என்பது எது சரி எது தவறு என்று பகுத்தறியும் ஒரு நபரின் திறன் ஆகும்.
  • இது ஒருவர் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்க வேண்டும் அத்துடன் மற்ற உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனசாட்சியுடன் வாழச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "அன்பு மற்றும் மனசாட்சியுடன் கூடிய அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல்" என்பதாகும்.

ஏப்ரல் 6:

வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் International Day of Sports For Development And Peace:
  • வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 6 - ந்தேதி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாழ்வில் விளையாட்டு நேர்மறையான பங்கை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
  • 2013 -ல் ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சபையால் ஏப்ரல் 6 -ந் தேதி வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. விளையாட்டுக்கள் மூலம் ஏற்படும் உடல் வலிமை, மனஅமைதியை ஐநா சபை அங்கீகரித்துள்ளது. இதன்காரணமாக தனிநபர் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து, பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி வருகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "அமைதியான மற்றும் உள்ளார்ந்த சமூகங்களை மேம்படுத்துவதற்கான விளையாட்டு" என்பதாகும்.

ஏப்ரல் 7:

உலக சுகாதார தினம்  World Health Day:
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 
  • 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'எனது ஆரோக்கியம், எனது உரிமை' என்பதாகும்.

ஏப்ரல் 10:

ரயில்வே வாரம்  (Railway Week): ஏப்ரல் - 10 முதல் 16 வரை:
  • இந்தியாவில் மிக நீண்ட பயணத்திற்கு ரயில்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். 
  • உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இந்தியா முழுக்க 65000 கி.மீ. நீளம் கொண்ட ரயில்பாதை உள்ளது. ஆண்டுதோறும் 7651 மில்லியன் மக்களும், 921 மில்லியன் டன் சரக்குகளும் பயணிக்கின்றன. 
  • இந்தியாவில் ரயில் போக்குவரத்திற்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர்கள். முதன்முதலாக 1853ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி மும்பை - 1 தானே இடையில் முதல் பயணிகள் ரயில் துவங்கப்பட்டது. மூன்று நீராவி எஞ்சின்களுடன் 34 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட பாதையில் முதல் ரயில் இயக்கப்பட்டது. 57 நிமிடங்களில் இந்தத் தூரத்தை முதல் ரயில் கடந்தது. மூன்று நீராவி எஞ்சின்களுக்கும் சுல்தான், சாஹிப் மற்றும் சிந்த் எனப் பெயரிட்டனர். ரயிலில் உள்ள 14 பெட்டிகளில் 400 பயணிகள் பயணம் செய்தனர். இதனை நினைவு கூறும்வகையில் ரயில்வே வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக ஹோமியோபதி தினம்: World Homoeopathy Day (WHD) :
  • ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. இவரது பிறந்த தினம்தான் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.
  • அலோபதி மருத்துவத்தின் பக்கவிளைவுகள் குறித்துப் பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது. 
  • தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மொத்தம் 99 மருந்துகளைக் கண்டறிந்தார். இந்த மருந்துகள், அவற்றின் பண்புகள் குறித்த தொகுப்பு ‘மெட்டீரியா மெடிக்கா’ என்ற நூலாக வெளிவந்தது. விரைவிலேயே உலகம் முழுவதும் இது ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பரவியது. 
  • ‘ஹோமியோபதி’ என்ற புதிய மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய சாமுவேல் ஹானிமன் 88-வது வயதில் (1843) மறைந்தார்.
  • 2024 ஆண்டிற்கான கருத்துரு ஹோமியோபரிவார்: ஓர் ஆரோக்கியம், ஓர் குடும்பம்" என்பதாகும்
உடன்பிறப்புகள் தினம் Siblings Day :
  • நம் உடன்பிறப்புகளை மதிக்க, பாசம் காட்ட, ஒருவருக்கொருவர் பாராட்ட. தேசிய உடன்பிறப்புகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 அன்று கொண்டாடப்படுகிறது. 
  • இந்தியாவில், ரக்ஷா பந்தன் பண்டிகை உடன்பிறப்புகளுக்கு இடையிலான சிறப்பு பிணைப்பைக் கொண்டாடுகிறது. உடன்பிறப்புகள் தினம் ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற உலகின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது

ஏப்ரல் 11:

உலக நடக்குவாத நோய் தினம் Parkinson's disease Day:
  • இந்த நாள் 1817 ஆம் ஆண்டில் முதன்முதலில் நரம்பியக் கடத்தல் (நியூரான் சிதைவு) கோளாறைக் கண்டறிந்த டாக்டர் ஜே பார்கின்சனின் பிறந்தநாளை குறிக்கிறது.
  • ஜேம்ஸ் பார்கின்சன் என்பவர்தான் இந்த நோயை 1817ஆம் ஆண்டு கண்டறிந்தார் அவரது பெயராலேயே பார்க்கின்ஸன் நோய் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
  • உலக நடக்குவாத நோய் தினம் முதன்முதலாக 1997 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • உலக நடக்குவாத நோய் தினமானது உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய பார்கின்சன் (முடக்குவாத) நோய் சங்கம் (EPDA) ஆகிய அமைப்புகளின் பெரும் ஒரு ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது.
  • முடக்குவாத நோய் என்பது மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு நாள்பட்ட சிதைவுக் கோளாறு ஆகும் என்ற நிலையில், இது நரம்பு இயக்கவியல் அமைப்பு மற்றும் நரம்பு இயக்கவியல் அல்லாத அமைப்புகளை பாதிக்கிறது.
  • 2024 ஆண்டிற்கான கருத்துரு என்பது 'நடக்குவாத நோயுடன் சிறப்பாக வாழ்வதை ஊக்குவித்தல்' ஆகும்.
தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்  National Safe Motherhood Day (NSMD) :
  • இந்த நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மனைவியான கஸ்தூரிபா காந்தியின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • ஒயிட் ரிப்பன் அலையன்ஸ் இந்தியா (WRAI) என்ற அமைப்பால் பாதுகாப்பான தாய்க்கான தேசிய தினம் தொடங்கப்பட்டது.
  • இந்த நாளானது தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதங்கள் குறைவதை எடுத்துக் காட்டுகிறது.
  • தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தின் முக்கிய நோக்கம், தாய்வழி ஆரோக்கியத்தின் முக்கிய பங்கு மற்றும் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு முறையான மருத்துவ கவனிப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். 
  • இந்திய அரசாங்கம் 2003 ஆம் ஆண்டில் பாதுகாப்பான தாய்க்கான தேசிய தினத்தை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தது.

ஏப்ரல் 13:

ஜாலியன்வாலா பாக் படுகொலை தினம் (Jallianwala Bagh Massacre Day) :
  • நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. இது பேராபத்து எனக் கருதி மக்களிடையே வளர்ந்து வந்த விடுதலை வேட்கையை அகற்ற மக்களின் கருத்துரிமையைப் பறிக்கும்வகையில் 1919 மார்ச் 21இல் ரவுலட் சட்டம் என்ற கொடிய சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது. 
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13இல் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. பெண்கள் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இத்திடலில் வெளியே வர ஒரேஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது. 
  • இக்கூட்டத்தைக் கண்டு கொதிப்படைந்த ஆங்கிலேய அரசு ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கூட்டத்தை நோக்கிச் சுட உத்தரவிட்டார் டயர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 1650 தடவைகள் சுடப்பட்டன. இச்சூட்டில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 14:

அம்பேத்கர் பிறந்த தினம் (Ambedkar Birth Anniversary):
  • பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று பிறந்தார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். 
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கினார். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடினார். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும், சமூக நீதிப் புரட்சியாளராகவும் விளங்கினார். 
  • இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 
  • இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதல் சட்ட அமைச்சரானார். இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. 
  • இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது. அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் - 14 அன்று அரசு விடுமுறை தினமாக அறிவித்து அவரை சிறப்பிக்கிறது.
தேசிய தீயணைப்பு சேவை தினம் (National Fire Service Day):
  • தீயால் அழியாதது எதுவுமில்லை. பெரும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தேவை. ஒரு தீயணைப்பு வீரர் பணியில் சேரும்போதே உயிர்த்தியாகத்திற்கு தயாராகி விடுகிறார். 
  • பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14 அன்று தேசிய தீயணைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஏப்ரல் 14 அன்று அஞ்சலி செலுத்துகின்றனர். 
  • 1944ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெடி மருந்துகள் தாங்கிய கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் துறைமுகத்திற்குப் பெரும் சேதாரம் ஏற்பட்டது. பல கப்பல்கள் பாழடைந்தன. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும், பணியாளர்களும் போராடினர். இந்த விபத்தில் 249 பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏப்ரல் 14 அன்று நிகழ்ந்தது. இவர்களின் தியாகத்தை நினைவு கூறவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக இரத்த ஒட்டுண்ணி நோய் தினம் World Chagas Disease Day :
  • உலக இரத்த ஒட்டுண்ணி நாள் (World Chagas Disease Day) என்பது இரத்த ஒண்டுண்ணி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏப்ரல் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. 
  • இது முதன்முதலில் ஏப்ரல் 14, 2020 அன்று கொண்டாடப்பட்டது. மேலும் ஏப்ரல் 14, 1909 அன்று முதன் முதலில் இந்நோயைக் கண்டறிந்த பிரேசிலிய மருத்துவர் கார்லோசு ரிபேரோ ஜஸ்டினியானோ சாகசின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது.
  • உலக இரத்த ஒட்டுண்ணி நோய் நாள் மே 24, 2019 அன்று உலக சுகாதார சபையின் 72வது அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் மே 28, 2019 அன்று உலக சுகாதார சபையின் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
  • இந்த நோய் இதில் முதன்மையாகப் பாதிக்கப்பட்ட ட்ரைடோமைன் ஒட்டுண்ணிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதோடு இவை முத்தமிடும் பூச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஏப்ரல் 21:

சிவில் சேவை தினம் (Civil Service Day) :
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று சிவில் சேவை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 
  • சிவில் சேவையானது நாட்டின் நிர்வாக இயந்திரத்தை இயக்கும் முதுகெலும்பாக செயல்படுகிறது. 
  • இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மூலம் நிர்வாகத்தை இயக்க வேண்டியுள்ளது. அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டுசேர்க்கவேண்டிய கடமை இந்திய ஆட்சிப் பணிக்கு (Civil Service) உள்ளது. 
  • இந்தியாவின் உள்நாட்டு சேவையானது பிரிட்டிஷ் அரசு கடைபிடித்த ஆட்சிப்பணி முறையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. இது 1947ஆம் ஆண்டிற்குப் பிறகே உருவாக்கப்பட்டது. உள்நாட்டு சேவைகளின் பொறுப்பை இந்திய நிர்வாகம் இயக்கி வருகிறது.

ஏப்ரல் 24:

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (National Panchayati Raj Day) :
  • பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 
  • பஞ்சாயத்து ராஜ்ஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான். மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள். 
  • அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 26:

ராமானுஜன் நினைவு நாள் (Ramanujan Death Anniversary) :
  • ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் கல்வி பயின்றவர். சிறுவயதிலேயே யாருடைய உதவியும் இன்றி அனைவரும் வியப்படையும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 
  • 1914ஆம் ஆண்டுக்கும் 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000த்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். 
  • ஆனால் அவர் இளம் வயதிலேயே இறக்க நேர்ந்தது. இவர் காசநோயால் 33 ஆவது வயதில் ஏப்ரல் 26, 1920ஆம் ஆண்டில் மரணமடைந்தார். அவர் கடல்கடந்து போனதற்காக ஜாதியை விட்டு விலக்கி வைத்தனர். மரணத்தின்பொழுது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். மொத்தமாக ஆறேழு பேர்தான் சுடுகாடுவரை சென்றனர். 
  • இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவுத் திறமையால் கணித உலகின் நட்சத்திரமாக திகழ்ந்த ராமானுஜனின் நினைவு நாள் ஏப்ரல் 26 அன்று கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 29:

ரவிவர்மா பிறந்த தினம் (Ravivarma Birth Anniversary) :
  • ராஜா ரவிவர்மா 1848ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் பிறந்தார். எண்ணெய் வண்ண ஓவியக்கலையை 9 ஆண்டுகள் பயின்றார். 
  • தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியரிடம் ஐரோப்பா தைல வண்ணக் கலையைக் கற்றுக்கொண்டார். சென்னை ஆளுராக இருந்த பக்கிங்ஹாம் பிரபுவை அவர் ஓவியமாக வரைந்தது அவருக்குப் புகழைத் தேடித்தந்தது. 
  • 1873இல் வியன்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப் பெற்றார். 
  • பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். 
  • இவர் நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தினார்.




Post a Comment

0Comments

Post a Comment (0)