APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -12.04.2024

TNPSC PAYILAGAM
By -
0
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -12.04.2024

 

‘நடுகல்’ திறப்பு விழா :

  • இரண்டாம் உலகப்போர் காலத்தில், தாய்லாந்து- பர்மா ரயில் பாதை கட்டுமானப் பணியின்போது இறந்த தமிழர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள ‘நடுகல்’ திறப்பு விழாவுக்கு வரும்படி(தாய்லாந்து காஞ்சனபுரியில் மே 1-ம் தேதி நடைபெற உள்ள ‘நடுகல்’ திறப்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர்) தாய்லாந்து தமிழ்ச்சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
  • அயலக தமிழர் நலத்துறை சார்பில் கடந்த ஜன.12-ம்தேதி சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில், அயல்நாடுகளில் இருந்து வந்த தமிழர்களை பாராட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
  • அப்போது தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, 2-ம் உலகப் போரின்போது, உயிர்நீத்த தமிழர்களுக்கு ‘நடுகல்’ அமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.


உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ்

  • உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ், உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்
  • நேஷனல் ஜூடிசியல் அகாடமி (NJA) என்பது போபாலில் உள்ள ஒரு நிறுவனம் ஆகும், இது 1993 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் கீழ் நிறுவப்பட்டது.


உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவர அறிக்கை:

  • உலக வர்த்தக அமைப்பு (WTO) வெளியிட்ட உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவர அறிக்கையின்படி, டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் சேவைகளில் இந்தியா இப்போது நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. 
  • சேவைகளில் சர்வதேச வர்த்தகத்தில் நாட்டின் பங்கு ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்ட சேவைகள் ஏற்றுமதி $257 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 17% அதிகமாகும்.
முதல் 3 நாடுகள்:

  1. அமெரிக்கா, 
  2. இங்கிலாந்து
  3. அயர்லாந்து

சந்திர நேரம் / Coordinated Lunar Time (LTC) :
  • NASA ஆனது  ஒருங்கிணைந்த சந்திர நேரம் (எல்டிசி) எனப்படும் நிலவுக்கான நேரத் தரத்தை நிறுவும் பணியை மேற்கொண்டுள்ளது. 
  • இது பல்வேறு சர்வதேச அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் சந்திர மேற்பரப்பில் தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பயன்படுத்தலாம்.

அரசியல் நிலப்பரப்பில் சுகாதார ஆளுகை குறித்த சர்வதேச கருத்தரங்கு:
  • ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியில் நீதி, சட்டம் மற்றும் சமூகத்திற்கான மையத்துடன் இணைந்து, மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனமான வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையம், அரசியல் நிலப்பரப்பில் சுகாதார ஆளுகை என்ற சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
  • நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தொடக்க உரையாற்றி, மருந்துகள் கிடைப்பதன் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியத்திற்கான உரிமையையும் எடுத்துரைத்தார். கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கொள்கை அமலாக்கம் குறித்த தனது அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் போது வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகித்த இந்தியாவின் தலைமையை மேற்கோள் காட்டி, கொள்கை வகுப்பதில், குறிப்பாக சுகாதாரக் கொள்கையில் ஊக்கமளிக்கும் தலைமையின் அவசியத்தை டாக்டர் பால் வலியுறுத்தினார்.

அழுத்த மின்விளைவு எலும்பு வழியிலான செவித்திறன் உள்வைப்பு கருவியைப் பொருத்தி சிகிச்சை மேற்கொள்ளும் நாட்டின் முதல் அரசு மருத்துவமனை:
  • புனேவில் உள்ள இந்திய ராணுவத்தின் கட்டளை மருத்துவமனையில் (தெற்கு கட்டளை) உள்ள காது, மூக்கு மற்றும் தொண்டை துறை (ஈ.என்.டி)பிரிவு  கடும் காது கேளாமைக்கு வெற்றிகரமாக சிகிச்சைகளை மேற்கொள்கிறது. இந்த மருத்துவமனை, செவித்திறன் பாதிக்கப்பட்ட 7 வயது ஆண் குழந்தைக்கு இரண்டு அழுத்த மின்சார எலும்பு செவிப்புலன் உள்வைப்பு கருவியைப் பொருத்தி (பி.சி.ஐ) வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது.
  • புனேவில் உள்ள கட்டளை மருத்துவமனை (தெற்கு கட்டளை) ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் பிரிவின் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்போது மேஜர் ஜெனரல் பி நம்பியார் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அண்மையில் ஆயுதப்படை பிரிவுகளிலேயே சிறந்த மருத்துவமனை என்ற மதிப்புமிக்க, பாதுகாப்புத்துறை அமைச்சரின் விருது வழங்கப்பட்டது.
கட்டளை மருத்துவமனைகள் (Command Hospital):  இந்தியாவின் முக்கிய இராணுவ மருத்துவமனைகள் ஆகும். 
  • கட்டளை மருத்துவமனை  கிழக்கு கட்டளை - கொல்கத்தா 
  • கட்டளை மருத்துவமனை மேற்குக் கட்டளை - சந்திமந்திர்
  • கட்டளை மருத்துவமனை வடக்கு கட்டளை -உதம்பூர்
  • கட்டளை மருத்துவமனை மத்திய கட்டளை - லக்னோ
  • கட்டளை மருத்துவமனை தெற்கு கட்டளை-  புனே
  • கட்டளை மருத்துவமனை பயிற்சி கட்டளை- பெங்களூரு 
  • INHS அஷ்வினி  மேற்குக் கட்டளை -மும்பை

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

ஒருங்கிணைக்கப்பட்ட சந்திர நேரம் (LTC) எனப்படும் சந்திரனுக்கான நேரத் தரத்தை நிறுவும் பணியை எந்த விண்வெளி அமைப்பு மேற்கொண்டுள்ளது ?

Post a Comment

0Comments

Post a Comment (0)