APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -01.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -01.04.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -01.04.2024


தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி :

  • தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2021-ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.

பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி:

  • இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ.21000 கோடியை தாண்டியுள்ளது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், "பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. முதன்முறையாக 21,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தியாவின் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 32.5% அதிகம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை:

  • இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதும்மருத்துவ ரீதியான அவசியம் இல்லாத சூழலிலும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் நடைபெறுவதும் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் (சி- செக்சன்) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  • தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சட்டீஸ்கரைப் பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள கருவுறுதல் ஆகியவை அதிகமாகக் காணப்பட்டனதமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிகளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
  • 2021 வரையிலான ஐந்தாண்டுகளில் இந்தியா முழுவதும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் பரவலாகி 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாகவும் (2016), 49.7 சதவீதமாகவும் (2021) உயர்ந்துள்ளது. அதாவது தனியார் மருத்துவமனைகளில் ஏறத்தாழ பாதிக்கு பாதி பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம்தான் நடைபெறுகின்றன.
  • சட்டீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும்தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்துள்ளது.
  • மகப்பேறு அறுவை சிகிச்சைகள் 10 முதல் 15 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவை எம்.பி.க்களின் சொத்து, அவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த ஆய்வறிக்கை:

  • நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவை எம்.பி.க்களின் சொத்து, அவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த ஆய்வறிக்கையை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
  • மக்களவை எம்.பி.க்களில் அதிக சொத்து வைத்திருக்கும் முதல் 10 பேரில் 4 பேருடன் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது
  • நரசாபுரம் தொகுதி எம்.பி. ரகு ராம கிருஷ்ணம் ராஜு ரூ.325 கோடி சொத்துடன் 3-ம் இடத்தில் உள்ளார். குண்டூர் எம்.பி. கல்லா ஜெயதேவ் ரூ.305 கோடி சொத்துடன் 4-ம் இடத்திலும், நெல்லூர் எம்.பி. அடலா பிரபாகர ரெட்டி ரூ.221 கோடி சொத்துடன் 7-ம் இடத்திலும், விசாகப்பட்டினம் எம்.பி. எம்விவி சத்யநாராயணா ரூ.203 கோடி சொத்துடன் 10-ம் இடத்திலும் உள்ளனர். ஆந்திர எம்.பி.க்கள் 11 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • ஒட்டுமொத்தமாக 514 எம்.பி.க்களின் விவரங்களை ஆய்வு செய்ததில் 225 பேர் (44%) மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது
  • பிஹார் எம்.பி.க்களில் 78% பேர் மீது குற்ற வழக்குகளும் 55% பேர் மீது தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. இமாச்சல பிரதேசம் (75%, 50%), மேற்கு வங்கம் (58%, 40%), மகாராஷ்டிரா (54%, 28%) உத்தர பிரதேசம் (54%, 43%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • 122 (24%) எம்.பி.க்கள் 5 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். 375 (73%) எம்.பி.க்கள் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படித்தவர்களாக உள்ளனர்.

 

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி --------பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார் ?

A) 10 பில்லியன் 

B) 8.5 பில்லியன் 
C) 7.4 பில்லியன் 
D) 15 பில்லியன் 

ANS : C) 7.4 பில்லியன் 

Post a Comment

0Comments

Post a Comment (0)