APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -25.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -25.04.2024


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதராக:

  • சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதராக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 8 முறை தடகள போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த உசைன் போல்ட்டை ஐசிசி நியமித்துள்ளது. 
  • அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது.


TNPSC GROUP 2 / 2A தேர்வு நடைமுறையும் மாற்றம் :

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.
  • இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணையில் குறிப்பிட்டிருந்த குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு, காலிப்பணியிடங்கள், தேர்வுத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை மாற்றி அமைத்திருக்கிறது. 
  • அதன்படி, குரூப்-2, 2ஏ பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2 ஆயிரத்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு முந்தைய அட்டவணையில் ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 
  • குரூப்-2 பதவிகளுக்கு இதுவரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இனி குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தமிழ் தகுதித்தாள் தேர்வு மற்றும் பொதுப் பாடங்களுக்கான டெஸ்கிரிப்டிவ் முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.
  • அதேபோல், குரூப்-2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான திட்டமும் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, விரித்துரைக்கும் முறையில் தமிழ் தகுதித்தாள் தேர்வும், பொதுப்பாடங்கள், பகுத்தறிவு மற்றும் பொது நுண்ணறிவு, மொழிப்பாடங்கள் ஆகியவை 'ஆப்ஜெக்டிவ்' முறையில் தேர்வும் நடத்தப்பட உள்ளது. 
  • அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே குரூப்-1 பதவிகளுக்கு 65 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது புதிய அட்டவணையில் 90 இடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.. 6,244 குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந்தேதி நடக்கிறது. திருத்தப்பட்ட அட்டவணையை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக்கொள்ளலாம்.


புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை

  • கோடக் மஹிந்திரா வங்கியின் தரவு பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி, ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
  • 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது. இதன் காரணமாக தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


குண்டு துளைக்காத ஜாக்கெட்

  • கான்பூரில் உள்ள டிஆர்டிஓவின் பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் கிடங்குகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.எம்.எஸ்.ஆர்.டி.இ) 7.62 x 54 ஆர் ஏபிஐ (பிஐஎஸ் 17051-ன் நிலை 6) வெடிபொருட்களிலிருந்து பாதுகாப்பதற்காக நாட்டிலேயே மிகவும் இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. 
  • சமீபத்தில், இந்த குண்டு துளைக்காத ஜாக்கெட் பிஐஎஸ் 17051-2018-ன் படி சண்டிகரில் உள்ள அணு ஆயுத ஆராய்ச்சி பரிசோதனை முனையத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஜாக்கெட் புதிய வடிவமைப்பு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது.


பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6-வது சர்வதேச மாநாடு:

  • பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்.
  • "ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக நாம் இன்று தாங்குதிறன் உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டும்"
  • "ஒவ்வொரு நாடும் தனித்தனியாகத் தாங்குதிறன் கொண்டதாக இருந்தால் மட்டுமே உலகநாடுகள் கூட்டாக தாங்குதிறன் கொண்டதாக இருக்க முடியும்"
  • "பகிரப்படும் தாங்குதிறனை அடைய, நாம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்"என்று கூறினார்


77-வது கேன்ஸ் திரைப்பட விழா சினிமா போட்டி 2024:

  • பிரான்ஸ் நாட்டின் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சினிமா போட்டிப் பிரிவில் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் மாணவர் சிதானந்த் நாயக் இயக்கிய “சன்ஃப்ளவர்ஸ் வேர் த ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ” என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • இதற்கான விழா 2024 மே 15 முதல் 24 வரை நடைபெற உள்ளது. உலக நாடுகளில் உள்ள திரைப்படப் பள்ளிகளின் புதிய திறமையாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களுடைய திரைப்படங்களை அங்கீகரிக்கவும் இந்த அதிகாரப்பூர்வ பிரிவு இடம் பெற்றுள்ளது.
  • சமர்ப்பிக்கப்பட்ட மொத்தம் 2,263 திரைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 குறும்படங்களில் (14 நேரடி மற்றும் 4 அனிமேஷன் திரைப்படங்கள்) இந்த படம் ஒன்றாகும். கேன்ஸ் திரைப்பட விழாவின் சினிமா பிரிவில் தேர்வான ஒரே இந்தியப் படம் இதுவாகும். பியூனுவல் திரையரங்கில் மே 23-ம் தேதி அன்று விருது பெறும் திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு முந்தைய விழாவில் நடுவர் குழு சினிமா பிரிவுக்கான பரிசுகளை வழங்கும்.
  • மதிப்புமிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் தொலைக்காட்சி படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் ஒரு மாணவரின் படம் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • சிதானந்தா எஸ் நாயக் இயக்கியுள்ள இப்படத்திற்கு சூரஜ் தாக்கூர் ஒளிப்பதிவும், மனோஜ் வி படத்தொகுப்பும், அபிஷேக் கடம் ஒலிப்பதிவும் செய்துள்ளனர்.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்தர கூட்டம் 2024:

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்தர கூட்டத்திற்காக 2024 ஏப்ரல் 25 முதல் 26 வரை கஜகஸ்தானின் அஸ்தானாவுக்கு செல்லும் இந்தியத் தூதுக்குழுவிற்குப் பாதுகாப்புத் துறை செயலாளர் ஸ்ரீ கிரிதர் அரமானே தலைமை தாங்குவார். 
  • இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்குள் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.


தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

  • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, "73-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் 30 ஆண்டுகளுக்குப் பின் அடித்தள ஆளுகை" என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் ஆகியோர் புதுதில்லியில் தொடங்கி வைத்தனர்.
  • நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300 பிரதிநிதிகள் பங்கேற்ற அடித்தள ஆளுகை குறித்த தேசிய கருத்தரங்கில், திறன் மேம்பாடு மூலம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துதல், அவற்றுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் மூலம் அடித்தள நிர்வாகத்தை வலுப்படுத்துதல், செயல்பாடுமிக்க பஞ்சாயத்து உள்கட்டமைப்பை உறுதி செய்தல், போதுமான மனித வளங்களை எளிதாக்குதல் உள்ளிட்ட அமைச்சகத்தின் முன்னுரிமைகள் எடுத்துரைக்கப்பட்டன.
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 அன்று, இந்தியா 'தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை' கொண்டாடுகிறது, இது 1993 இல் 73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை இயற்றியது. இந்த திருத்தம் கிராமத்தில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுடன் (PRIs) உள்ளாட்சி நிர்வாகத்தின் மூன்று அடுக்கு அமைப்பை நிறுவியது.


காமன்வெல்த் நாடுகளின் பொதுச் சேவைகள் பிரிவு தலைவர்கள், செயலாளர்கள் மாநாடு 2024 :

  • அமைச்சரவைக் கூட்டத்திற்காக லண்டனில் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 3-வது காமன்வெல்த் நாடுகளின் பொதுச் சேவைகள் பிரிவு தலைவர்கள், செயலாளர்கள் மாநாடு மார்ல்பரோ மாளிகையில் 2024, ஏப்ரல் 22 முதல் 24 வரை நடைபெற்றது.
  • இதில் மிகச் சிறந்த அரசுக்கான பொதுமக்கள் குறைதீர்ப்புக்கு காமன்வெல்த் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்தியப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறையின் விளக்கக் காட்சி இடம்பெற்றது.
  • "சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் அரசாங்கத்தை நிறுவனமயமாக்குதல்" இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். இது நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இந்த மாநாட்டில் காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த 50 உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன.


உலக எரிசக்தி மாநாடு 2024 :

  • நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் 2024 ஏப்ரல் 22 அன்று தொடங்கி 2024 ஏப்ரல் 25 வரை நடைபெறும் 26-வது உலக எரிசக்தி மாநாட்டில் இந்தியா தனது புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் மின் உற்பத்தி நடைமுறைகளை காட்சிப்படுத்துகிறது.
  • இம்மாநாட்டில் உள்ள இந்திய அரங்கு, புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் மின் உற்பத்தி நடைமுறைகளைக் காண்பிப்பதற்கான மையமாகத் திகழ்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • இது உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. மின்சார அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்த இந்திய அரங்கில் பங்கேற்று, உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் தலைமைக்குக் கூட்டாக சான்றளிக்கின்றன.
  • இந்த அரங்கை மத்திய மின்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், நெதர்லாந்திற்கான இந்தியத் தூதர் திருமதி ரீனத் சாந்து ஆகியோர் 2024, ஏப்ரல் 22 அன்று திறந்து வைத்தனர்.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2024 தொடருக்கான  தூதராக  ஐசிசி யாரை  நியமித்துள்ளது?

A) உசைன் போல்ட்

B) சச்சின் டெண்டுல்கர்

C) ரிக்கி பாண்டிங்  

D) தோனி  

ANS : A) உசைன் போல்ட்



நடப்பு நிகழ்வுகள் 2024


Post a Comment

0Comments

Post a Comment (0)