APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -28.04.2024 - 29.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -28.04.2024 - 29.04.2024


வில்வித்தை உலகக் கோப்பை நிலை 1 போட்டி 2024 :

  • சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியானது ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரிய அணியை எதிர்த்து விளையாடியது. 
  • இதில் இந்திய அணி 5-1என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக்கோப்பை தொடரில் ரீகர்வ் பிரிவில்இந்திய ஆடவர் அணி 14 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்திய அணி 2010-ம்ஆண்டு நடைபெற்ற தொடரில் தங்கம் வென்றிருந்தது.
  • இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளது.


ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் :

  • கனடாவின் டொரன்டோவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் குகேஷ் 17 வயதில், ‘சேலஞ்சராக' வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றியை முதல் வீரராக சாதித்துள்ளார். அவர் தனது 12-வது வயதிலேயே இளம் கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றவர்.
  • கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்வெற்றி பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷுக்கு ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்.


விசிக-விருதுகள் 2024 :

  • நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இந்தாண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மேலும், மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ் எனவும் விசிக பாராட்டியுள்ளது.

2024-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:

  • அம்பேத்கர் சுடர் - பிரகாஷ்ராஜ்,திரைப்படக் கலைஞர்
  • பெரியார் ஒளி- வழக்கறிஞர் அருள்மொழி,பிரச்சாரச் செயலாளர்,திராவிடர் கழகம்
  • மார்க்ஸ் மாமணி- இரா. முத்தரசன்,மாநிலச் செயலாளர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • காமராசர் கதிர் -பேராயர் எஸ்றா சற்குணம்.தலைவர், இந்திய சமூக நீதி இயக்கம்
  • அயோத்திதாசர் ஆதவன்- பேராசிரியர் ராஜ்கௌதமன்
  • காயிதேமில்லத் பிறை- எஸ்.என். சிக்கந்தர்,மேனாள் மாநிலத் தலைவர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
  • செம்மொழி ஞாயிறு - எ.சுப்பராயலு, கல்வெட்டியலறிஞர்


இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்க கட்டுப்பாடு தளர்த்தியது ஜெர்மனி:

  • நேட்டோ அணியில் இல்லாத நாடுகளுக்கு சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை விற்பனை செய்வதில் ஜெர்மனி அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்தியா நேட்டோ அணியில் இல்லை என்பதால், இந்தியாவால் ஜெர்மனியிடமிருந்து சிறிய ரக ஆயுதங்களை வாங்க முடியாமல் இருந்தது.
  • இந்நிலையில், தற்போது ஜெர்மனி அரசு இந்தியாவுக்கான ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாகவும் இதன் பகுதியாக சமீபத்தில் இந்திய தேசிய பாதுகாப்புப் படைக்குத் தேவையான துப்பாக்கி உதிரி பாகங்களை வழங்க ஜெர்மனி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட் நிக்கோபார் தீவின் முழுமையான மேம்பாடு'- திட்டம்:
  • கிரேட் நிக்கோபார் தீவின் முழுமையான மேம்பாடு' என்ற தலைப்பிலான மாபெரும் உள்கட்டமைப்பு திட்டம் ஆனது, நிதி ஆயோக் அமைப்பினால் தயாரிக்கப்பட்டு, போர்ட் பிளேயரில் அமைந்துள்ள அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகத்தினால் (ANIIDCO) செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • இது ஒரு கப்பல் போக்குவரத்து துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு நகரக் கட்டமைப்பு மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றினைக் கொண்ட உள்கட்டமைப்பின் கட்டுமானச் செயல்முறையினை உள்ளடக்கியது.
  • இத்திட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுவதாகவும், பழங்குடியினரின் கருத்துகளை புறக்கணிப்பதாகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால் இந்தத் திட்டத்திற்கு அனுமதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
  • இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டப் பாதிக்கும் மேலான பகுதியானது பழங்குடியினர் வாழ்கின்ற பகுதியில் அமைந்துள்ளது.
  • கிரேட் நிக்கோபார் தீவில் உள்ள ஷோம்பென் மற்றும் நிக்கோபரீஸ் உள்ளிட்ட தீவுகளில் ஆறு பழங்குடியினர் வசிக்கின்றனர்.
  • சுமார் 200-300 மக்கள் தொகையினை கொண்ட ஷோம்பென் இனத்தினர் ஒரு வேட்டையாடி வாழும் சமூகத்தினர் ஆவர்.
  • நிக்கோபாரீஸ் என்பது நிக்கோபார் தீவுகள் முழுவதும் பரவி வாழ்கின்ற சுமார் 27,000 மக்கள்தொகை கொண்ட ஒரு பெரிய பழங்குடியினர் குழுவாகும்.
  • கிரேட் நிக்கோபார் தீவில் 751.01 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பழங்குடியினர் வாழ்விடம் உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:
  • நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 2024-2029 காலகட்டம் வரை புதுப்பிப்பது தொடர்பான இருதரப்பு விவாதங்களுக்காக நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 4 பேர் கொண்ட குழு, அத்துறையின் செயலாளர் திரு வி. சீனிவாஸ் தலைமையில் வங்கதேசம் செல்கிறது
  • அந்நாட்டின் பொது நிர்வாக அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. பங்களாதேஷ் குடிமைப்பணி ஊழியர்களுக்கான கள நிர்வாகத்தில் திறன் வளர்ப்பு திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிப்பது குறித்தும் இந்த தூதுக்குழு ஆலோசனை நடத்தும்.
  • இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் ஆகியவை 2014ம் ஆண்டு முதல் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்த ஒத்துழைத்து செயல்படுகின்றன. 
  • இருதரப்பு ஒத்துழைப்பின் கீழ், 71 திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், 2014- ம் ஆண்டு முதல் தற்போது வரை 2600 வங்கதேச குடிமைப்பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நல்லாட்சிக்கான தேசிய மையத்திற்கு வந்து பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்திய பெட்ரோலிய நிறுவனம் 65-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது:
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் (IIP-Indian Institute of Petroleum), டேராடூன், இன்று தனது 65 வது நிறுவன தினத்தை அதன் வளாகத்தில் கொண்டாடியது. இது 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நிறுவப்பட்ட முதன்மையான R&D அமைப்பாகும்.

முக்கிய கனிமங்கள் உச்சி மாநாடு 2024 :
  • நிலையான எரிசக்தி அறக்கட்டளை, எரிசக்தி, சுற்றுச்சூழல், நீர் கவுன்சில் (CEEW) மற்றும் நிலையான மேம்பாட்டு நிறுவனம் (IISD) ஆகியவற்றுடன்  எரிசக்தி அமைச்சகம் இணைந்து, (2024 ஏப்ரல் 29 முதல் ஏப்ரல் 30 வரை) 2 நாட்களுக்கு புதுதில்லியின் லோதி எஸ்டேட்டில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் "முக்கிய கனிமங்கள் உச்சி மாநாடு: பயன்கள் மற்றும் செயலாக்கத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் உச்சி மாநாட்டை நடத்துகிறது.
  • இந்த மாநாடு, இத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், அறிவைப் பகிர்வதற்கும், முக்கியமான கனிமங்களின் பயன்கள் மற்றும் செயலாக்கத்தில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு முக்கிய நிகழ்வாகும். 
  • இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தூய்மையான எரிசக்தி இலக்குகளின் பின்னணியில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுகிறது. இது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களுக்கு அவசியமான முக்கியமான கனிம மூலப்பொருட்களின் (சிஆர்எம்) உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும்.
  • தொழில்துறை பிரதிநிதிகள், புத்தொழில் நிறுவன பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச வல்லுநர்களை இந்த உச்சிமாநாடு ஒருங்கிணைக்கும்.  கனிம ஏல முன்னேற்றம், சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான தீர்வுகளை மேம்படுத்துதல் போன்ற முக்கியமான பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கலந்துரையாடல் மற்றும் பயிலரங்குகள் இதில் நடைபெறும். 
  • கிளாக்கோனைட் (பொட்டாஷ்), லித்தியம், குரோமியம், பிளாட்டினம், கிராபைட், கிராபைட்டுடன் தொடர்புடைய டங்ஸ்டன், உள்ளிட்ட எட்டு முக்கிய கனிமங்கள் குறித்த தொழில்நுட்ப அமர்வுகள் இந்த உச்சி மாநாட்டில் இடம்பெறும்.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

கனடாவின் டொரன்டோவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் ---------- 17 வயதில், ‘சேலஞ்சராக' வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றியை முதல் வீரராக சாதித்துள்ளார்?

A) குகேஷ்

B) பிரக்ஞானந்தா 

C) விதித் குஜராத்தி

D)எஸ்.எல்.நாராயணன்

ANS : A) குகேஷ்

Post a Comment

0Comments

Post a Comment (0)