APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -02.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -02.04.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -02.04.2024


விஜயநகர மன்னா்கள் கால நடுகல் 

  • கந்திலி அருகே விஜயநகர மன்னா்கள் கால நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் பிரபு தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டபோது கந்திலி அருகே தொப்பலக்கவுண்டனூா் என்ற இடத்தில் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • நடுகல்லானது 3 அடி அகலம்,3 அடி உயரமும் கொண்டதாக உள்ளது. புடைப்பு சிற்பங்களாக நடுகல் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.
  • தமிழா்களின் போா் நிகழ்வு எத்தகைய வீரமிக்கது என்பதற்கு இந்த நடுகல் ஒரு சான்றாகும். 
  • இந்த நடுகல் இப்பகுதியில் நடைபெற்ற போரில் உயிா் துறந்த இரண்டு வீரா்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும். 
  • இந்த நடுகல் விஜயநகர மன்னா்கள் ஆட்சிக் காலத்தின் தொடக்க காலத்தைச் சோ்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது

ஜிஎஸ்டி வரி வசூல்:மார்ச் மாதம் 2024

  • 2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.20.14 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 11.7 சதவீதம் கூடுதல் வசூலாகும். 
  • இதன்படி, 2024-ஆம் ஆண்டில் சராசரி மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்த சராசரி ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது. 
  • மாா்ச் மாதத்தில் மட்டும் ரூ.1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இது ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து வசூலான இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும்.
  • இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச் மாதம் வசூலான ரூ. 1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டியில், சிஜிஎஸ்டி - ரூ. 34,532 கோடி,எஸ்ஜிஎஸ்டி - ரூ.43,746 கோடி,ஐஜிஎஸ்டி - ரூ. 87,947 கோடி, ( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 40,322 கோடி அடங்கும்) செஸ் - ரூ.12,259 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.792 கோடி அடங்கும்) ஆகியவை வசூலாகி உள்ளது. 

இந்தாண்டு மார்ச் மாதம் ஜி.எஸ்.டி., வரி வசூலில் டாப் 10 இந்திய மாநிலங்கள்

  1. மஹாராஷ்டிரா - 27,688 கோடி ரூபாய்
  2. கர்நாடகா -13,014 கோடி ரூபாய்
  3. குஜராத் - 11,392 கோடி ரூபாய்
  4. தமிழ்நாடு -11,017 கோடி ரூபாய்
  5. ஹரியானா -9,545 கோடி ரூபாய்
  6. உ.பி -9,087 கோடி ரூபாய்
  7. டில்லி - 5,820 கோடி ரூபாய்
  8. மேற்கு வங்கம் -5473 கோடி ரூபாய்
  9. தெலுங்கானா- 5399 கோடி ரூபாய்
  10. ஒடிசா - 5109 கோடி ரூபாய்
புனைவு கதை அல்லாத புத்தகத்திற்கான மகளிர் பரிசு 2024: 

  • இந்திய-பிரிட்டிஷ் பத்திரிகையாளரும் விமர்சகருமான மதுமிதா முர்கியா எழுதிய "Code Dependent: Living in the Shadow of Al" புனைவு கதை அல்லாத புத்தகத்திற்கான மகளிர் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
  • இந்தப் புத்தகம் ஆனது மனித சமுதாயத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து ஆராய்கிறது.

அதிக அந்நிய (வெளிநாட்டு) நிதி மார்ச் 2024 :

  • மார்ச் மாதத்தில் அதிக அந்நிய (வெளிநாட்டு) நிதி வரவினைப் பெற்றதன் மூலம் மற்ற ஆசிய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியது.
  • அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்கள் (Flls) 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து, அதிகப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததன் மூலம் இந்தியப் பங்குகளில் 3.63 பில்லியன் டாலர்கள் வரவினை உருவாக்கியுள்ளன
  • சந்தையில் சுமார் 52,467 கோடி ரூபாய் முதலீடு செய்து கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான நிதி வரவினை எட்டியதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் ஆனது தொடர்ந்து நிகரப் பங்குகளை வாங்குபவையாக உள்ளன.
  • இந்தியாவைத் தவிர, தென் கொரியா, தைவான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அந்நிய நிறுவன முதலீடுகளை மேற்கொள்வதற்கான இடங்களாக இருந்தன.
  • அதே சமயத்தில் ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் சந்தைகளில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்கள் முதலீட்டினைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பினைத் தேர்ந்து எடுத்தன.
  • தென் கொரியா 2.91 பில்லியன் டாலர், தைவான் 1.14 பில்லியன் டாலர் மற்றும் இந்தோனேசியா 585 மில்லியன் டாலர் என்ற அளவில் நிதி வரவினைப் பெற்றுள்ளன.
  • ஜப்பான் நாட்டின் சந்தையில் இருந்து மிகப்பெரிய அளவில் 5.35 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்நிய நிறுவன முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • அதனைத் தொடர்ந்து தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளால் முறையே 1.13 பில்லியன் டாலர்கள் மற்றும் 514 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்நிய நிறுவன முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • வியட்நாம் நாட்டின் அந்நிய நிறுவன முதலீடுகள் 197 மில்லியன் டாலரையும், பிலிப்பைன்ஸ் நாட்டின் அந்நிய நிறுவன முதலீடுகள் 40 மில்லியன் இழப்பினையும் எட்டியது.

அலாஸ்கா அம்மை:

  • பெரியம்மை, பசு அம்மை மற்றும் குரங்கம்மை (mpox) போன்ற ஒரே வைரஸ் குடும்பத்தினைச் சேர்ந்த அலாஸ்கா அம்மை என்ற வைரஸ் தொற்றினால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு பதிவானது.
  • 2015 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் ஆனது, இதற்கு முன்னதாக இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்ற ஆறு நபர்களில் லேசான நோய் அறிகுறிகளையே கொண்டிருந்தது.
  • அலாஸ்கா அம்மை என்பது 2015 ஆம் ஆண்டில் அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஆகும்.
  • தற்போது, 10,000க்கும் மேற்பட்ட வைரஸ் வகைகள் சர்வதேச வைரஸ் வகைபிரித்தல் குழுவால் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • அவற்றில் சுமார் 270 வைரஸ் வகைகள் மக்களில் தொற்றினை ஏற்படுத்தக்கூடியது என்பதும் அறிந்த ஒன்றாகும்.

அதிக வெப்பம் குறித்த உலகளாவிய உச்சி மாநாடு

  • அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு தன்னாட்சி நிறுவனமான சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை (USAID) ஆனது, 'அதிக வெப்பம் குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டினை' காணொளி வாயிலாக ஏற்பாடு செய்தது.
  • சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை (USAID) என்பது குடிமக்களுக்கான வெளிநாட்டு உதவி மற்றும் மேம்பாட்டு உதவிகளை நிர்வகிப்பதை ஒரு முதன்மை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • 2023 ஆம் ஆண்டு ஆனது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக வெப்பம் கொண்ட ஆண்டாகும்.
  • இந்த நிகழ்வானது, பாகிஸ்தான் முதல் துனிசியா வரையிலும், துனிசியாவிலிருந்து டெக்சாஸ் வரையிலுமான அனைத்து கண்டத்திலும் அதிக வெப்ப அலைகள் பதிவான நிகழ்வுடன் ஒன்றி வந்தது.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது -------- அதிகபட்ச மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகும் ?

A) முதலாவது

B) இரண்டாவது 
C) மூன்றாவது
D) நான்காவது 

ANS : B) இரண்டாவது 


Post a Comment

0Comments

Post a Comment (0)