APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -30.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -30.04.2024


பசுமை நோபல்’ விருது 2024 :

  • ஸ்பெயினின் மர்ஷியாவை சேர்ந்த சட்டப் பேராசிரியர் தெரேசா விசெண்டேவுக்கு(61) 2024-ஆம் ஆண்டுக்கான ’பசுமை நோபல்’ விருது வழங்கப்பட்டுள்ளது. 
  • ஸ்பெயினின் தென்கிழக்கு கடற்கரை நகரமான மர்ஷியாவில் சிறிய கடல் என்றழைக்கப்படும் ’மார் மெனோர்’ என்னும் உப்புநீர் தடாகத்தை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றப் போராடியதற்காக அவருக்கு உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘கிரீன் நோபல்’(கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு -பசுமை நோபல்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.


ஆயுஷ்மான் பாரத் திவாஸ் 

  • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்று இந்திய அரசினால் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜ்னா அல்லது PM-JAY என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாகும்.
  • PM-JAY திட்டம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • முறையான மருத்துவ வசதிகளை வாங்க முடியாத கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சுகாதார நலன்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய ஒரு சுகாதாரத் திட்டமாகும்.
  • இது சுமார் 10.74 கோடிக்கும் அதிகமான அளவில் ஏழ்மை மற்றும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் சுகாதாரக் காப்பீடு வழங்குகிறது.


கிரிஸ்டல் மேஸ் 2 ஏவுகணை:

  • இந்திய விமானப்படை வானிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கினைத் தாக்கி அழிக்கும் நடுத்தர தொலைவு வரம்பு கொண்ட புதிய வடிவ ஏவுகணையின் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இது 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
  • இந்த ஏவுகணை ROCKS அல்லது கிரிஸ்டல் மேஸ் 2 என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • இதன் முன்னோடியான கிரிஸ்டல் மேஸ் 1 இஸ்ரேலில் இருந்து பெறப்பட்டு இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது.

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

2024-ஆம் ஆண்டுக்கான ’பசுமை நோபல்’ விருது வழங்கப்பட்டுள்ளது?

A) ரோமைன் ரோலண்ட் 

B) சல்லி புருதோம்  

C) தெரேசா விசெண்டேவு

D) வி. சூ. நைப்பால்

ANS : C) தெரேசா விசெண்டேவு


Post a Comment

0Comments

Post a Comment (0)