APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -04.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -04.04.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -04.04.2024


உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியல் 2024 :

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். 66 வயதான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த 2023- ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.92 லட்சம் கோடி ரூபாயாக இருந்திருக்கிறது.

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள் தான்

  1. முகேஷ் அம்பானி- 116 பில்லியன் டொலர்
  2. கௌதம் அதானி- 84 பில்லியன் டொலர்
  3. ஷிவ் நாடார்- 36.9 பில்லியன் டொலர்
  4. சாவித்ரி ஜிண்டால்- 33.5 பில்லியன் டொலர்
  5. திலிப் ஷங்வி- 26.7 பில்லியன் டொலர்
  6. சைரஸ் பூனாவாலா- 21.3 பில்லியன் டொலர்
  7. குஷால் பால் சிங் - 20 பில்லியன் டொலர் டொலர்
  8. குமார் மங்கலம் பிர்லா - 19.7 பில்லியன் டொலர்
  9. ராதாகிஷன் தமானி - 17.6 பில்லியன் டொலர்
  10. லட்சுமி மிட்டல் - 16.4 பில்லியன் டொலர்  

உலக பணக்காரர்கள் பட்டியல்:

  1. பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம்
  2. எலோன் மஸ்க்
  3. ஜெஃப் பெசோஸ்
  4. மார்க் ஜுக்கர்பெர்க்
  5. லாரி எலிசன்
  6. வாரன் பஃபெட்
  7. பில் கேட்ஸ்
  8. ஸ்டீவ் பால்மர்
  9. முகேஷ் அம்பானி
  10. லாரி பக்கம்

அமெரிக்க நாட்டைச் சோ்ந்த 813 பணக்காரா்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். அதேபோல், சீனாவைச் சோ்ந்த 473 பணக்காரா்களும் இந்தியாவைச் சோ்ந்த 200 பணக்காரா்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இந்தியாவிலிருந்து புதிதாக 31 போ் இப்பட்டியலில் நிகழாண்டு இணைந்துள்ளனா்.

'சாகர் அங்காளன்' வழிகாட்டுதல்கள்

  • மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகமானது, 'சாகர் அங்காளன்' வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இது இந்திய துறைமுகங்களின் செயல்திறனை நன்கு மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதோடு, வரைபடமாக்கல், தரநிலைப்படுத்துதல் மற்றும் உலகளாவியத் தரநிலைகளோடு இசைந்து அமைதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித் தன்மைக்கு ஏதுவாக இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்தச் செய்வதற்குமான அரசாங்கத்தின் ஒரு ஈடுபாட்டினை இந்த நடவடிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

GROW இணைய தளம் மற்றும் அறிக்கை

  • நிதி ஆயோக் அமைப்பானது, வேளாண் காடு வளர்ப்பு மூலம் தரிசு நிலத்தை பசுமை மயமாக்குதல் மற்றும் புணரமைத்தல் (GROW) அறிக்கை மற்றும் இணைய தளத்தினை சமீபத்தில் தொடங்கியுள்ளது.
  • தேசிய அளவிலான முன்னுரிமைக்காக கருப்பொருள் சார்ந்த தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி வேளாண் காடு வளர்ப்பு ஏற்புநிலைக் குறியீடானது (ASI) உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, பசுமைமயமாக்கல் மற்றும் புணரமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசுத் துறைகள் மற்றும் தொழிற்துறைகளுக்கு உதவும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட வாரியான பகுப்பாய்வுகளை வழங்குகிறது.
  • "வேளாண் காடு வளர்ப்பு மூலம் தரிசு நிலத்தைப் பசுமைமயமாக்குதல் மற்றும் புணரமைத்தல் (GROW) என்ற இணைய தளமானது மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரவுகளுக்கான பொதுப் பயன்பாட்டு அணுகலை வழங்குகிறது.
  • GROW முன்னெடுப்பானது நாட்டின் உறுதிப்பாடுகளுடன் ஒத்துப் போகிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 26 மில்லியன் ஹெக்டேர் அளவிலான தரமிழந்த நிலத்தினை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையான கூடுதல் கார்பன் உள்ளீர்ப்பு அமைப்புகளை (காடுகள்) உருவாக்குதல்.

'SARTHI' இணைய தளம்:

  • விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களைச் சென்றடையும் வகையில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நன்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட 'SARTHI' என்ற இணைய தளத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • இது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) உள்ளிட்ட அரசாங்கத்தின் மானியத்துடன் கூடிய காப்பீட்டுத் திட்டங்களையும், அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட திட்டங்களையும் வழங்குகிறது.
  • 'SARTHI' என்பது வேளாண்மை, கிராமப்புறப் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் காப்பீடு ஆகியவற்றிற்கான சோதனை தளம் என்பதைக் குறிக்கிறது.
  • காப்பீட்டுத் திட்டம் சார்ந்தத் தயாரிப்புகளைக் கண்டறிவதற்கும், வாங்குவதற்கும், பெறுவதற்குமான ஒற்றைச் சாளரத் தளமாக இந்த இணைய தளம் விளங்கும்.
  • PMFBY திட்டத்தின் கீழான குறை தீர்ப்பு நெறிமுறையை வலுப்படுத்தும் வகையில்,விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக 14447 என்ற உதவி எண்ணையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி --------- இடத்தைப் பிடித்திருக்கிறார். ?


Post a Comment

0Comments

Post a Comment (0)