APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -06.04.2024 - 07.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -06.04.2024 - 07.04.2024


மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2024 :

  • முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில், தெ.ஞானசுந்தரம், கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
  • மயிலாடுதுறை மாவட்டம், குழையூரில் பிறந்தவர் தெ.ஞானசுந்தரம். வைணவ உரை வளம் குறித்து ஆய்வுகளை செய்து, முனைவர் பட்டம் பெற்ற இவர், பல கல்லுாரிகளில் முதல்வராக பணியாற்றியதுடன், தமிழ் பல்கலையின் அரிய கையெழுத்து சுவடி பிரிவிலும் பணியாற்றியவர். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
  • அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் வெ.பாலசுப்பிரமணியன். இவர் கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, கற்பித்தல் துறைகளில் பல சாதனைகள் படைத்தவர். பல நுால்களின் ஆசிரியரும் கூட.
  • மா.அரங்கநாதனின் நினைவையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் 16ம் தேதி ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது’ முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியத் துறையில் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவர்களுடைய ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பு மற்றும் படைப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகிறது.
  • 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' 2018 முதல் ஏப்., 16ல், முன்றில் இலக்கிய அமைப்பின் சார்பில் வழங்கப்படுகிறது.


18-ஆவது மக்களவைத் தேர்தல்:

  • தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அவர்களில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள்.
  • அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
  • தென்சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண்கள் போட்டியிடுகின்றனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை.


ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழா விருது 2024 :

  • ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது  ஹாய் நான்னா படத்திற்கு கிடைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
  • தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடித்த 30-ஆவது படம் 'ஹாய் நான்னா'. ஹாய் நான்னா படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். மிருணாள் தாகூர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.


புற்றுநோய் தொடர்பான ஆய்வு 2024 :

  • தமிழகத்தில் மருத்துவ பல்கலையின் நோய் பரவியல் துறை, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இணைந்து புற்றுநோய் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • அதில், 11 ஆண்களில் ஒருவருக்கும், 11 பெண்களில் ஒருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலோனார் ஆரம்ப நிலையில் கண்டறியாமல் இருப்பதால், உயிரிழப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.
  • நம்நாட்டில், 10 ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு விகிதம், ஆண்டுக்கு 8 சதவீத அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 2021 - 22ல் நாடு முழுதும், 13.92 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது. தமிழகத்தில், 81,814 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆண்களை காட்டிலும், புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி 2024 :

  • அமெரிக்காவில் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:


18-ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலிருந்து அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்?

A) கரூர்

B) தென் சென்னை
C) நாகப்பட்டினம்
D) வடசென்னை

ANS : A) கரூர்


Post a Comment

0Comments

Post a Comment (0)